மென்பொருள் வாயிலாக ஆங்கிலம் பேசி பழக வாங்க


மென்பொருள் வயிலாக ஆங்கிலம் பேசி  பழக வாங்க...

பள்ளி படிப்பை கிராமத்தில் முடித்துவிட்டு நகரத்தில் வந்து உயர் கல்வி பயிலும் இளைஞர்கள் பொதுவாக அச்சப்படுவது ஆங்கிலத்தைப் பார்த்து..!மேலும் அவர்கள் நகரத்தில் உள்ள மாணவர்களுக்கு தங்களை விட  ஆங்கில அறிவு அதிகம் என்றும் நினைக்கின்றனர்.முற்றிலும் மாயையான கற்பனை இது.

English with Software


ஆனாலும் கிராமபுர மாணவர்களை நகர்புர மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறிது தெளிவுடன் திகழ்கிறார்கள் .இதற்கு  காரணம் அவர்களின் முயற்சியே காரணம்.ஒரு துணை இல்லாமல் இதனை பயில்வது சிறிது கடினமான செயல்தான். 

ஆனால் ஆங்கிலம் பேசி பழகுதல் என்பது இன்றைய இணைய உலகில் எவ்வளவோ எளிதாகிவிட்டது! ஆங்கில ஒலிப்புகளை முறையாக கற்க விரும்புவர் அல்லது பேசி பயிற்சிப்பெற விரும்புவர் எவர்களுக்காயினும் இந்த குரல் வழி மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.

மென்பொருளின் பயன்பாடுகள்:

ஒரு ஆங்கிலச் சொல்லை அல்லது வாக்கியத்தை, ஆங்கிலத்தில் வாசித்துப் பார்க்க வேண்டும் என்றால், அவற்றை தட்டச்சி வாசிப்பதற்கான (Play) அழுத்தியை அழுத்தியவுடன் அது உரத்து வாசித்துக்காட்டும். ஆண் பெண் குரல்களில் வாசிக்கும் படி கட்டளையிட்டு பயன்பெறலாம்.

இன்று பல ஆங்கில இணையத்தளங்கள் தாம் வழங்கும் செய்திகளை குரல் வழி கேட்பதற்கான வசதியையும் கொண்டுள்ளன. அவ்வாறு இல்லாத ஒரு இணையத்தளத்தின் செய்தியை வெட்டி ஒட்டி இங்கே கேட்கலாம்; கேட்டு ஆங்கிலப் பயிற்சியும் பெறலாம். பி.டி.எப், எம்.எஸ். வேர்ட் கோப்புகளையும் இந்த மென்பொருள் கொண்டு வாசிக்கமுடியும்.

குறிப்பு:

நீங்கள் எழுதிய ஆவணங்களை இந்த மென்பொருள் கொண்டு வாசித்து பயிற்சி பெறுவதானால்; முற்றுப்புள்ளி, முக்காற்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி இடவேண்டிய இடங்களில் அவற்றை சரியாக இட்டு வாசிக்கும் படி கட்டளையிடுங்கள். இல்லையெனில் இடைவிடாது ஒரே தொடராக வாசிக்கத்தொடங்கிவிடும். ஏனெனில் இந்த மென்பொருள் நிறுத்தற்குறிகளை உணர்ந்து அதற்கேற்றவாறு வாசிக்கக்கூடியது. நீங்கள் எழுதிய ஒரு சொல் சிலவேளை ஆங்கிலச் சொல் அல்லாத ஒரு சொல்லென்றால் அது அவற்றை சொல்லாக உணராமல் எழுத்தாக உணர்ந்து வாசிக்கும்.

பதிவிறக்கம்:

இந்த மென்பொருளை  இங்கே அழுத்தி பதிவிறக்கிக் கொள்ளலாம். சிறிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கிக்கொண்டால் மேலும் தெளிவாகக் கேட்கும் வசதியைப் பெறலாம்.


Comments

  1. ஆங்கிலத்தை பயில மென்பொருள் கண்டுபிடித்தது போல் தமிழையும் பிழையில்லாமல் படிக்க, எழுத மென்பொருள் உள்ளதா?


    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிக பயனுள்ள பதிவுங்க நன்றி

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்