''படித்ததில் பிடித்தது'' - புதிய பகுதி அறிமுகம்

இனிய உதயம்

    ரசனைமிகு பதிவுகள் பல படைத்து வரும் நமது இனிய தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் தொழிற்களத்தின் இனிய வணக்கங்கள்...

 தொழிற்களத்தின் ஒரு இனிய உதயமாக ''படித்ததில் பிடித்தது'' உதயமாகிறது...பல தலைப்புகளில், பல சுவையான பதிவுகளை பதிந்து வரும் எங்கள் படைப்பாளிகளே, உங்களுக்காக மேலும் ஒரு தலைப்பு தான் ''படித்ததில் பிடித்தது''.

 நம் அன்றாட வாழ்வில் பல சுவையான செய்திகளை படிப்போம். அவற்றையெல்லாம் இனி நமது தொழிற்களம் வாயிலாக பகிர்ந்துகொள்ள ஒரு அறிய வாய்ப்பு.

 நீங்கள் படித்த, உங்களுக்கு பிடித்த பதிப்புகளை, இனி ''படித்ததில் பிடித்தது'' என்னும் தலைப்பின் கீழ் பதிவாக பதியலாம்... 


 • செய்தித்தாள்கள்
 • மாத /   வார இதழ்களில் வெளிவந்த செய்தி
போன்ற அச்சு ஊடகங்களில் தாங்கள் படித்த சிறந்த செய்தியையும் அது எந்த இதழில், எப்பொழுது வந்தது என்ற குறிப்புடன் இணைத்து அனுப்புங்கள்.

கவனிக்க,
டிராப்ட்ல் மட்டும் வைத்திருங்கள் - 

 நாம் படித்த பக்கங்களை நம் சகாக்கள் படிக்க வேண்டாமா?

 பிடித்ததை பின்னூட்டங்கள் போடும் நாம், படித்ததை பதிவாக பதியலாமா!!!...

வாழ்த்துக்கள்....

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்.Comments

 1. எங்கப்ளாக்ல போட்டுட்டு உங்களுக்கு லிங்க் கொடுத்தாபோதுமா

  ReplyDelete
 2. லக்‌ஷ்மியம்மா அவர்கள் நல்ல கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அதுப் போல செய்வது சரியாக இருக்காது என்றுத் தோன்றுகிறது.
  தொழிற்களம் குழுவின் பதிலை எதிர்ப்பார்கிறேன்

  ReplyDelete
 3. நல்லதொரு புதிய பகுதி,எழுதிருவோம்...உங்களுக்கு என் நன்றிகள் தொழிற்களமே

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்