ஆழ் மனதின் அற்புத சக்திகள்

 ஆழ் மனதின் அற்புத சக்திகள்

நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய எண்ணும் போது என்ன மனப்பாண்மையில் ஈடுபடுகிறீர்களோ, அதற்கேற்ப உங்கள் செயல் வெற்றி - தோல்வியை அடைகிறது.வெற்றி மனப்பான்மையுடன் செயல் பட்டால் வெற்றியும், தோல்வி மானப்பான்மையுடன் தன்னம்பிக்கையற்று செயல்பட்டால் தோல்வியையும் அடைகிறீர்கள், ஆகவே வெற்றியும், தோல்வியும் உங்கள் மனப்பான்மையிலிருந்து உருவெடுக்கிறது.மனப்பான்மை என்பது, உங்கள் உள்ளத்தில் தொடர்ந்து நிலைபெறும் சிந்தனைதான்.வெற்றி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் மனச்சித்திரங்களே வெற்றி சிந்தனை . இது மீண்டும் மீண்டும் பதிவாகும் போது வெற்றி மனப்பான்மையாகமாறுகிறது .

ஆழ்மனக் கட்டளை மூலமும், மனச்சித்திரங்கள் மூலமும் வெற்றி மனோபாவத்தை உருவாக்கிட முடியும்.

ஆழ்மனதை ஒரு தேவதை என்றே கூறலாம். அது ஆற்றல் மிக்க தேவதை, உங்களுக்கு விசுவாசமான தேவதை. நீங்கள் கேட்பதை பெற்றுத தரும் சக்தி உண்டு,ஆனால்  அது தேவதையோ, அரக்கனோ என்பது நீங்கள் கொடுக்கும் கட்டளையைப் பொருத்தது. உங்கள் கட்டளையின் எண்ணம் முறன்பாடானால் கிடைப்பதும் முறன்பாடாகவே அமையும், உங்களின் ஆழ்மனசக்தி பெருகி விட்டால் நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும்.

எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிக்கையோடு கொடுத்து அடையப்போகிறோம் என்னும் நம்பிக்கையை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும். வேண்டியதை விரும்பியபடியே பெற முடியும்.

 • ஒரு குறிக்கோளுக்கான கட்டளையை மட்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்
 • மற்ற விருப்பு வெறுப்பு ஆசைகளை விலக்கி வைத்துவிட்டு, உறங்குவதற்கு முன் படுக்கையில் சம்மனமிட்டு அமரவும்.
 • தியானத்திற்கு அமர்வது போன்று - சுவாசத்தில் ஆழ்மனதை முழுவதையும் கவனத்தில் குவிக்கவும்.
 • நீங்கள் தேர்ந்தெடுத்த ஆழ்மனக்கட்டளையை உணர்ச்சியுடன் , ஒலி நயத்துடன், உதட்டசைவுடன் உருவேற்றுக.
 • உங்கள் குறிக்கோள் நிறைவேறி விட்டது போன்ற நிலையை மனச்சித்திரமாக கற்பனையில் காண்க. 

இதனை உறங்குவதற்கு முன்பும், உறங்கி எழுந்த பின்னும் தினமும் 30 நிமிடங்கள் கட்டளை கொடுத்தால், உங்கள் ஆழ்மனம் அற்புதமாக செயல்பட தொடங்கிவிடும். 

ஆழ்மனம் என்பது ஐம்புலங்களால் அறிய இயலாது ஆனால் அதன் விளைவை ஐம்புலங்களால் அறிய முடியும், நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையுடன் கட்டளை கொடுங்கள். அப்போது ஆழ்மனத்தின் அற்புத சக்தி வெளிப்படும்.ஆழ்மனக்கட்டளையை குறிக்கேளுக்கும். தேவைக்கு தக்கபடி நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். உருவாக்கிய கட்டளைகளை உங்களை சுயகருத்தேற்றம் செய்யும் போது வெற்றி உங்களை அடையும். 

நம் வாழ்க்கை என்பது நம்எண்ணத்தால் உருவாக்கப்படுகிறது. எண்ணத்திற்கேற்ப வாழ்க்கை. எண்ணம் என்பது தொடர்மன சித்திரமே. எணணம் - செயல் ஆகிறது, செயல் - பழக்கம் ஆகிறது, பழக்கம் - வழக்கமாகிறது. வழக்கம் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஆழ்மனக்கட்டளை , மனச்சித்திரம் இவ்விரு உத்திகளையும் ஒரே சமயத்தில் தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்கள் மனோசக்தி பெருக்கம் அடைகிறது. சிந்தனையிலிருந்து - செயல் பிறக்கிறது. மனத்தின் எண்ணமே செயலுக்கு ஊக்கம் . எண்ணம் திண்ணம் பெறும்போது நிைன்த்ததை அடைய வெற்றியாக முடிகிறது.

ஆழ்மனக்கட்டளையும் மனச்சித்திரமும் சேர்ந்தது தியானம் - தியானம் தவம் எனப்படுகிறது. தவ வலிமையால் நம் முன்னோர்கள் நம்ப வியலாத அற்புதமான சாதனைகளை செய்ததனர் என்பதை நாம் அறிவோம். ஆழ்மன கட்டளை கொடுக்கும்போதே அதற்கேற்ப மனச்சித்திரம் வரைவதன் மூலம் நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துபவராக மாறிவிடுகிறீர்கள். உங்களின் நீண்டகால குறிக்கோள்களான தியானம் செய்யும் போது உங்களது நம்பிக்கை ஒரு மந்திர சக்தியாகவே பெருக்கெடுக்கிறது. எனவே ஆழ்மன சிந்தனை - தியானம் மூலம் வெற்றி நிச்சயம் 

Comments

 1. ''ஆழ்ந்த'' கருத்துக்கள் மோகன்,,,

  கல்லூரி மாணவர்கள் வெறும் விளையாட்டு பிள்ளைகள் இல்லை என்பதை நம் தொழிற்களம் செல்ல குழந்தைகள் நிருபித்து வருகிறார்கள்,,,

  நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு,, தொடருங்கள்,,,

  ReplyDelete
 2. சுருக்கமான அருமையான சிந்தனைகள்...

  நன்றி...

  ReplyDelete
 3. நன்றி......

  ReplyDelete
 4. நல்ல கருத்து தோழா... வாழ்த்துக்கள்... நன்றி

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்