Ads Top

நான் பதிவர் அறிமுகம் - வீடு திரும்பல்

இல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு? 
என்ற வாசகத்தோடு நம்மை வரவேற்கும் ஒரு மிகச்சிறந்த தளம் தான் வீடுதிரும்பல்.

வீடு திரும்பல்னு சொன்னதுமே மோகன்குமார் தான் இன்றைய சிறப்பு நான்பதிவர் அறிமுக நாயகன்னு எல்லோருக்கும் நிச்சயமா புரிஞ்சிருக்கும்.

கிட்டத்தட்ட நான்கு இலட்டத்திற்கும் மேற்பட்ட  பக்க பார்வைகளையும் தாண்டி இவரது வலைப்பூ தமிழ் தளங்களிலே ஒரு சிறப்பான இடத்தை பிடித்துவைத்துள்ளது.

தொழிற்களம் நான் பதிவர் அறிமுகத்தில் வீடுதிரும்பல் மோகன் குமாரது அறிமுகம் சரியானது தான்.     2008 மார்ச் மாதத்திலிருந்து வீடு திரும்பல் வலைப்பூவில் திரு.மோகனின் பயணம் ஆரம்பமாகியது.

வலைப்பூ இவரை பற்றியதா? அல்லது இவர் வலைப்பூவை பற்றியிருக்கிறாரோ என்று சொல்லும் அளவிற்கு இவரது பதிவுகள் சர சரவென வாசகர்களை அள்ளி குவித்திருக்கிறது.

வீடு திரும்பல் மோகனின் சிறப்பம்சமே எளிய நடையில் தனது பதிவை பிரபலபடுத்தி விடுவதுதான்.

    இட்லி சாப்பிட்டாலும் சரி இத்தாலிக்கு போயிட்டு வந்தாலும் சரி அப்படியே தந்து டிஜிட்டல் கேமாராவிற்குள் படம் பிடித்து உடனே அதை பதிவாகவும்  மாற்றிடுவார்.

குர்காவை கூட விட்டு வைக்கிறது இல்ல.. வர வர இவரது பகுதியில் வசிக்கிறவர்கள் வெளிய தலைகாட்டறதே இல்லை. வெளிய வந்த உட்கார வைச்சு அதையும் ஒரு பதிவா போட்டுறாரு என்னதான் பன்றது..?

ஆனா, ஒரு சுவாரசியம் இருக்கு பாருங்க அவரது ஓவ்வொரு பதிவிலும் அங்க தாங்க மோகன் தனித்து நிற்கிறார்.

சினிமா,  அரசியல், சட்ட விளக்கம்னு மனுசன் பதியாத பதிவுகளே இல்லைனு சொல்லலாம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கூட ரசித்து அதை ரசிக்கும் படி சுட சுட பறிமாறிவிடுகிறார்.

    மோகனிடன் பழகுபவர்களுக்கு ஒன்று நிச்சயம் தெரியும். அவர் குரல் சன்னமாக இருந்தாலும் எல்லோரையும் பேசவைத்து அதை கூர்மையாக கவனிப்பார்.  

   அதிகமாக  பேசுவதை விட , அதிகம் கவனிக்க வேண்டியது தான் ஒரு பதிவருக்கு தேவையான மிகச்சிறந்த தலையாய பண்பு.  அத்தகைய பண்பு வீடுதிரும்பல் மோகனுக்கு சரியாக பொருந்தும்.

தமிழ் பதிவுலகில் வீடு  திரும்பல் மோகன் இன்னும் பல மைல் கற்களை கடப்பார் என்பது மட்டும் நிச்சயங்க,,.]

வீடு திரும்பல் இன்னும் வீடு திரும்பவே இல்லை

வாழ்த்துகளுடன் தொழிற்களம்.


16 comments:

 1. மகிழ்ச்சி நன்றி.

  இதையும் அப்படியே எடுத்து போட்டு நன்றி தொழிற் களம்னு ஒரு பதிவு தேத்திடுவாரு :)

  ReplyDelete
 2. நீங்கள் சொன்ன பண்பு சரியாகப் பொருந்தும்...

  வீடுதிரும்பல் மோகன்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. அதிகமாக பேசுவதை விட , அதிகம் கவனிக்க வேண்டியது தான் ஒரு பதிவருக்கு தேவையான மிகச்சிறந்த தலையாய பண்பு. அத்தகைய பண்பு வீடுதிரும்பல் மோகனுக்கு சரியாக பொருந்தும்.


  வாழ்த்துக்கள் எளிமையான அண்ணே

  ReplyDelete
 4. பதிவர் சந்திப்பில் பார்த்தும் பேச முடியவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த திரு மோகன் அவர்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி!

  'வீடு திரும்பல்' என்ற பெயர்க்குக் காரணம் கேட்டிருக்கலாம்.

  நன்றி தொழிற்களம்!

  ReplyDelete
 5. எளிமையானவரைப் பற்றி எளிமையான பதிவு.

  அருமை.

  ReplyDelete
 6. ரஞ்சனி மேடம்: வீடுதிரும்பல் என்பது மறைந்த எங்கள் நண்பன் லட்சுமணன் நினைவாக அவன் மறைவுக்கு பின் வெளியிட்ட அவனது கவிதை நூலின் பெயர். நண்பன் நினைவாக அதையே வலைப்பூவிற்கும் தலைப்பாக வைத்தேன்.

  வீடுதிரும்பல்- வீடுபேறு- என்றால் மறுபிறவியை குறிக்கும். இறப்பிற்கு பின்னும் நாம் எழுதியவை இருக்கும் அல்லவா.. அந்த அர்த்தத்தில் வைக்கப்பட்ட தலைப்பும் கூட .

  ReplyDelete
 7. அன்புள்ள மோகன்,
  பெயர்க்காரணத்திற்கு பின்னால் இப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இருக்கும் என்று நினைக்கவில்லை. மனதிற்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

  உங்கள் நண்பரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  'வீடு' மனதுக்கு அமைதி கொடுக்கக்கூடியது. அதேபோல உங்களுக்கு எழுத்து அமைதியைக் கொடுப்பதால் அலுவல் முடிந்து எப்போது வீடு திரும்புவோம் (அதாவது) எழுதுவோம் என்று நினைத்து வைத்திருக்கலாம் என்று நினைத்தேன்.

  விளக்கத்திற்கு நன்றி.
  அன்புடன்,
  ரஞ்ஜனி

  ReplyDelete
 8. பதிவாளர்கள் அறிமுகம் அருமை....நன்றி

  ReplyDelete
 9. வீடு திரும்பல் மோகனின் சிறப்பம்சமே எளிய நடையில் தனது பதிவை பிரபலபடுத்தி விடுவதுதான்.

  வாழ்த்துகள் !

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் தல! :)

  ReplyDelete
 11. மக்கள் சந்தை சீனிவாசன்September 12, 2012 at 7:52 PM

  பார்த் தேன்,ரசித் தேன்,,

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் சார்..

  ReplyDelete
 13. அதிகமாக பேசுவதை விட , அதிகம் கவனிக்க வேண்டியது தான் ஒரு பதிவருக்கு தேவையான மிகச்சிறந்த தலையாய பண்பு. அத்தகைய பண்பு வீடுதிரும்பல் மோகனுக்கு சரியாக பொருந்தும்.

  சரியானதை சரியானவரிடத்தில் எடுத்துரைத்து...பதிவருக்கு தேவையான பண்புகளை அடையாளம் காண்பித்த தொழிற்களம் குழுவிற்கும்... வீடு திரும்பல் மோகன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...வீடுதிரும்பல் மோகன் அவர்களின் கூர்க்கா் பற்றி பதிவை நானும் படித்தேன் சிறப்பு.

  ReplyDelete
 14. வீடுதிரும்பல் மோகன்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. வணக்கம் நண்பரே ,
  தங்கள் அறிமுகத்திற்கு நன்றி ,வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. மோகன் குமார் பழகுவதற்கு இனிமையானவர். தனக்கு தெரியாததை மறைக்காமல் ஒப்புக் கொள்பவர்.தேடி பிடித்து நட்புக் கொள்ளும் குணம் உடையவர்.அதற்கும் மேலாக எங்கள் வீட்டுக்கருகில் வசிப்பவர்.அருகில் வசித்தாலும் அறியாதவனாகவே இருந்திருக்கிறேன்.அவரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு ,மகிழ்ச்சி அடைகிறேன்.பதிவுலகில் எனது முதல் நண்பர் அவரே!

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.