காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...

காலை தேநீர்

முத்தான பதிவுகள் பதிந்து வரும் நமது இனிய தமிழ் பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கம்...
   

சில சிந்தனை துளிகளுடன் இந்த நாளை இனிதே தொடங்குவோமா...


 • இன்று நீ விட்டு செல்லும் சிறு விதைகள் தான் நாளை பெரிய ஆலமரமாய் வளர்ந்து நிற்கும்...
 • என்ன நடந்தாலும், எது நடந்தாலும், நான் சோர்ந்து போக மாட்டேன் காரணம் நான் நூறு வெற்றிகளை கண்டவன் இல்லை ஆயிரம் தோல்விகளை கண்டவன்...
 • தவறு செய்யும் மனிதனை பார்த்து தவறாக பேசாதீர்கள், உங்கள் வாழ்க்கை இன்னும் முடியலை...
 • ஏழை மனிதன் உணவு சாப்பிடுவதற்காக நடக்கிறான், பணக்காரனோ சாப்பிட்ட உணவிற்காக (செறிப்பதற்காக) நடக்கிறான்...
 • தலை குனிந்து என்னைப்பார், தலை நிமிர்ந்து உன்னை பார்க்க வைப்பேன் அனைவரையும்-இப்படிக்கு புத்தகம்...

இன்றைய தினம் வெற்றிகரமான நாளாக அமைய வாழ்த்துக்கள்...

என்றும் இணையத்துடன்,
நமது தொழிற்களம்...

Comments

 1. சிறப்பான சிந்தனை துளிகள் ..

  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. தவறு செய்யும் மனிதனை பார்த்து தவறாக பேசாதீர்கள், உங்கள் வாழ்க்கை இன்னும் முடியலை...

  நிறையப் பேருக்கு புத்துணர்வையும், பலப் பேருக்கு பயத்தையும் தரும் வழிகள். இது புரியாமல் தான் பலர் சோர்ந்திருக்கிறார்கள். பலர் சிலரை சோர்வடையச் செய்கிறார்கள்

  ReplyDelete
 3. அன்பு சகாக்களுக்கு வணக்கம்...

  தங்கள் வருகைக்கும், கருத்துரைகளுக்கும் நன்றி...

  ReplyDelete
 4. என்னை சந்தித்தவர்கள் வெற்றி பெறாமல் திரும்பியது இல்லை -தோல்வி.(எல்லாருக்கும் மதிய வணக்கமுங்க.ஹி...ஹி...)

  ReplyDelete
 5. அன்பின் நண்பர்களே !

  சிந்தனைத் துளிகள் அத்த்னையும் அருமை - கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்