இது சில்லறை விசயமில்லை சிந்திக்க வேண்டிய விசயம்

இன்றைய தினத்தில் அரசு அனுமதித்திருக்கும் மேலும் ஒரு  அன்னிய முதலீட்டு வாய்ப்பு தான் சில்லறை வணிகத்திலும் அன்னிய முதலீடு செய்யலாம் என்பது ஆகும்.

மக்களின் வாங்கும் திறனையும், உள்நாட்டு உற்பத்தி கொள்கையும் உயர்த்தி நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசு பல  முயற்சிகளை செய்து வந்தாலும், பல சமயங்களில் தவறான பாதைக்கே மிக சரியாக பயணிக்கும் படி அமைந்துவிடுகிறது.


அப்படிப்பட்ட ஒரு   முக்கிய  நிகழ்வு வருங்காலத்தில் உருவாகாமல் தடுக்க வேண்டுமெனில் முன்கூட்டியே தெளிவான விளக்கங்களை மக்களிடையே சென்று சேர்க்க வேண்டியது அனைத்து ஊடகங்களுக்கும் உண்டான முக்கிய பொறுப்பாகும். அந்த வகையில் சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள தொழிற்களம்  விரும்புகிறது.

    சில்லரை வர்த்தகம் என்பது, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையின் படி அன்னிய முதலீடுகள் அதிகரிக்கும் போது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அதிகரித்தால் உள்ளாட்டு வியாபாரிகள் மட்டுமல்ல பொது மக்களும் வேலியில் போகின்ற ஓனானை எடுத்து விட்டது போல ஆகிவிடும் என்பதே உண்மையாக கருதப்படுகிறது.

இதனை மாநில அரசுகள் கடுமையாக கண்டித்துள்ளன, தமிழகம், கேரளா, உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற பெரும்பாலான மாநில அரசுகள் நேரடியாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
சில்லரை வணிகம் என்பது வால்மார்ட் போன்ற மிகப்பெரிய அன்னிய நிறுவனங்கள் இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்திடும் முயற்சியே ஆகும்.. சுருங்க சொல்ல வேண்டுமானால் இன்றைய சூப்பர்மார்கெட்டுகள் பல சிறு மளிகை கடைகளை மூடு விழா காணச்செய்தது போல, அத்தகைய பெரிய சூப்பர்மார்கெட்களை பின்னுக்கு தள்ளி அதைவிட பிரம்மாண்ட கூறையின் கீழ் அன்னிய நிறுவனங்கள் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும்  பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் என்பதே ஆகும்.

இதன்படி, பிரம்மாண்டாமாக இத்தகைய நிறுவனக்கள் மொத்தமாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிப்பதால், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு மளிகை, காய்கரிகள் என்று அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால்,  அன்னிய நிறுவனக்கள் உள் நுழைகையில் இந்திய விவசாயிகளுடன் விதைச்சலுக்கு முன்னே உடன்படிக்கை செய்து கொண்டு அனைத்து உற்பத்தியையும் மொத்தமாக கொள்முதல் செய்திடும். அத்தகைய பெரிய நிறுவன கொள்கைகள் விவசாயிகளுக்கு அதிக விலையை கொடுத்து நேரிடையாக கொள்முதல் செய்யும் போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகும், இடைத்தரகர்களின் தொந்தரவும் விலை உயர்வும் இல்லாமல் போகும் என்பதை மத்திய அரசு எண்ணுகிறது.

     இன்றைய நிலையில் நமது நாட்டின் சூழ்நிலைப்படி நாம் இன்னும்  அன்னிய நிறுவனங்களின் எல்லை மீறலை கட்டுப்படுத்தும் அளவிற்கு சரியான வளர்சி நிலவரம் அடையவில்லை  என்பதே வல்லுனர்களின் கருத்து  ஆகும். இதனால் நிச்சயாக அத்தகைய நிறுவனக்கள் அதிக அளவில் ஆக்கிரமித்து விலை நிர்ணயத்தை ஏற்றிவிடுமே  தவிற பொது மக்களுக்கு விலைவாசி உயர்வை குறைத்து கொடுக்கும் என்பதே உண்மை.

மேலும், சிறு குறு விவசாயிகள், வியாபாரிகள் பெரும்பாலோனோர் பெரிய அளிவில் வாழ்வாதாரத்தை இழப்பனர். மக்களின் வாங்கும் திறன் நிச்சயாமாக குறைந்து போய்விடும். ஏற்கனவே மின் தட்டுப்படு கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு அனுமதியை அளித்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்க கண்மூடி செயல் என்றே உள்நாட்டு வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வரும் செ.20 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர்  த,வெள்ளையன் அறிவித்திருக்கிறார்.

தொழிற்களம் பதிவர்கள் இந்த கருத்தைப்பற்றி மேலும் பல தகவல்களை திரட்டி மக்களிடம் சென்று  சேர்ப்பீர்கள் என நம்பிறோம்.

பின்னூட்டங்ளில் உங்களது கருத்தை பகிருங்கள்....

Comments

 1. இதெல்லாம் பார்த்துகிட்டு ஒன்னும் பன்ன முடியலைனு வருத்தமா இருக்கு,
  ஏதேது? உலகம் அழியறதுக்கு முன்னே இந்தியா அழிஞ்சிரும் போல இருக்கே.

  ReplyDelete
 2. கதிர் அண்ணாச்சி, சொல்றது உண்மை ஆகிடும் போலே இருக்கே, நாமும் எதிர்ப்போம், நல்ல விளக்கமான பதிவு

  ReplyDelete
 3. என்னங்க, மீண்டும் ஒரு சுதேசி ஆவோம்...இதுக்குபோய் அலட்டிகலாமா..?

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்