அடுத்த ஆண்டு முதல் ரோமிங் கட்டணம் கிடையாது.


டெல்லியில் நேற்று  இன்டெர்நெட் தொடர்பான தேசிய மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தொலை தொடர்பு மந்திரி கபில் சிபில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது , செல்போன் உபயோகிப்பாளர்களிடம் அடுத்த ஆண்டு முதல் ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று கபில் சிபில் தெரிவித்தார்.

தொலை தொடர்பு இலாகா தேசிய தொலை தொடர்பு கொள்கை 2012 என்ற ஒரு புதிய கொள்கையை அறிமுகம் செய்தது. இந்த கொள்கைக்கு கடந்த மே மாதம் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதன்படி, ரோமிங் கட்டணம் எப்போது ரத்தாகும் என்று செல்போன் உபயோகிப்பாளர்களிடம் இருந்து வந்தது.

எனவே, அடுத்த ஆண்டு முதல் ரோமிங் கட்டணம் ரத்தாகும் என்ற செய்தி
செல்போன் உபயோகிப்பாளர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Comments

  1. அறியாத தகவல் கொடுத்தமைக்கு நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்