தேடுபொறி ரகசியங்கள் - இது இ(ன்றை)ணைய உலகம் 10

ஆழ்மனதுடன் தொடர்புபடுத்தியே உங்கள் வியாபாரத்தில் விற்பனையை பெருக்கவும், அதனை தக்கவைக்கவும் முடியும். இந்த ஆழ்மனதின் ரகசியங்களை முழுமையாக புரிந்துகொண்டவர்களே பெரும்பாலும் வியாபாரத்தில்  வெற்றியை அடைந்திருக்கிறார்கள்.

இணைய சந்தையில் உங்களது வியாபாரத்திற்கு மவுசு கூட வேண்டுமா உடனே மவுசை( சுட்டெலி) எடுங்கள். கடகடவென உங்கள் இணைய தளத்தை வடிவமைத்தாகிவிட்டதா..? 

கல்லா கட்டனுமுன்னா, முதல்ல உங்க இணைய தளத்திற்கு தேடி வருபவர்களை தேடி பிடியுங்கள். 

தேடுபொறிகள் (Search Engine) செயல்படும் விதம் : 

பிங், யாகூ, அல்ட்டாவெஸ்டா (bing, yahoo, altavista) போன்ற எத்தனையோ தேடுபொறி நிறுவனங்கள் இருந்தாலும் google.com கூகிள் தேடுபொறியே பெரும்பான்மையானவர்களால் பயன்படுத்தப்படும் முன்ணனி நிறுவனமாக இருக்கிறது.

கூகிள் தேடுபொறியில் உங்கள் இணைய தளம் முதல் தரங்களில் வரவேண்டுமா..? முதலில் அதன் செயல்பாடுகளை சரியாக புரிந்து அதற்கேற்ற வகையில் உங்கள் தளத்தை நிர்வகியுங்கள்

மூன்று வகையான முறையை தேடுபொறிகள் கையாளுகின்றன

ஊர்ந்து ( crawling ) தேடுதல் : 

    தேடுபொறி  நிரல்கள் பெரும்பாலும் தானியங்கி முறையில் ஒவ்வொரு இணைய  தளங்களையும் உள்வாங்கி  கொள்கின்றன. அவ்வாறாக ஒரு தளத்தை முற்றிலுமாக உள்வாங்கி அதன் ஒவ்வொரு பகுதியாக சோதித்து சேமித்து கொள்கின்றது. இது ஒரு " சிலந்தி அமைப்பு " (spider software ) என்று வல்லுனர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது.

இதனால் தான், நமது தளத்தின் ஒவ்வொரு எழுத்தையும் கவனமாக தேடுபொறிக்கேற்றவாறு அமைத்துகொள்ள வேண்டும். ஒரு பெரிய குப்பை லாரியில் காந்தத்தை வைத்து துளாவினால் இரும்பு துகள்கள் கச்சிதமாக கவ்வி கொள்ளுமல்லவா? அதை  போலவே மிகச்சிறந்த  குறிசொற்களை கொண்ட இணைய தளங்களையே உடனடியாக தேடுபொறிகள் முதன்மை படுத்திவிடுகின்றன

இவ்வாறான ஊர்ந்து தேடுதல் முறையில் தளத்தின் முகவரி, இணைப்புகள்  போன்றவற்றை மட்டுமே முதன்மையாக தேடுபொறியின் நினைவகத்தில் சேமித்துக்கொள்கிறது

எனவே,  ஒரு பதிவிடும் பொழுதோ அல்லது இணையத்திற்கான இணைப்பு பக்கங்களை அமைக்கும் போதோ உங்களது தள முகவரியை சரியாக தேர்ந்தெடுத்து இணைப்பு கொடுங்கள்

இடைமுக (Index) செயல்பாடு : 

   இது நிரல்களை பயன்படுத்தி அல்காரிதம் (Algorithm) அடிப்படையில் செயல்பட்டு, தேவையான தகவல்களை திரட்டிவைத்துக்கொள்ளும்.

அதாவது ஒரு வார்த்தையை குறிக்கும் பொழுது அதற்கு இணையான (உருவகம் போன்ற) (AND, OR, NOT, EXOR) வார்த்தைகளையும் தானியங்கி முறையில் சரிபார்த்து அமைத்துகொள்ளும்படி தெடுபொறிகள் அதிநவீன சிந்தனையுடன் செயல்படுகிறது.

"அகராதி" என்ற வார்த்தையை  நீங்கள் தேடினால்  "விளக்கம்" முதலான இணை சொற்களையும் சேர்த்து தேடு என்று தேடுபொறிக்கு நவீன தொழில்நுட்பங்கள் கட்டளையிட்டுள்ளன. இந்த இடமுக செயல்பாடின் போது ஒவ்வொரு வார்த்தைக்கும் மதிப்பெண் அளிக்கப்பட்டு தர வரிசை ஒதுக்கீடு செய்து தரப்படுகிறது.

இந்த முறைகள் யாவும் படங்கள், காணொளிகள் என்று அனைத்திற்கும் பொருந்தும்.

இப்படியான தர வரிசையின் போது ஒரு தளத்தின் பக்கங்களை பார்வையாளர்கள் எவ்வளவு நேரம் பார்க்கின்றனர் என்பதையும் கூட கண்க்கிட்டு தர வரிசை அளிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனவே தான் உங்கள் தளத்தில் உள்ளவைகள், உண்மையானவைகளாக இருக்க வேண்டும். மற்ற தளங்களில் பிரதி எடுப்பது மற்றும் உபயோகம் இல்லாத வார்த்தைகளால் பக்கத்தை நிரப்புவது போன்றவற்றை தவிருங்கள் என்று கூறப்படுகிறது.

கேட்பு (Query) நிலை : 

  இது தேடுபொறியில் பயனர்கள் பயன்படுத்துவதற்கான முகப்பு பக்க வேலைகளை குறிக்கின்றது. நீங்கள் ஒரு குறிசொல்லை இட்டு தேடும் பொழுது கிடக்கின்ற தகவல்கள் எவ்வாறான வடிவத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதை குறித்தாய்ந்து செயல்படுகின்றது.

உதாரணமாக, ஒரு " தமிழ் " என்ற சொல்லை கொடுத்து தேடும்பொழுது "தமிழ் நாடு" "தமிழ் பதிவர்கள்" "தமிழ் திரட்டிகள்" என்று அடுத்த வார்த்தைக்கான  சில ஆலோசனைகளை தேடுபொறிகள் உங்களுக்கு  கொடுக்கும் அல்லவா..? இதனை கேட்பு நிலை மற்றும் இறுதிநிலை என்று சொல்லலாம்.தேடுபொறிக்கு ஏற்ற குறியீடுகளை அமைக்கும் போது கவனத்தில் வைக்க வேண்டிய விசயங்கள்.
 • தேடுபொறிக்கேற்ற  குறியீடுகளை அமைக்கும் பொழுது சொல்லை தனியாக கொடுக்க வேண்டாம்.  ஆயிரக்கணக்கான இணைய தளங்களுடன் உங்கள் தளமும் போட்டியிடுகிறது என்பதை கவனத்தில் வைத்துகொள்ளுங்கள்.  எனவே  நீங்கள் கொடுக்கும் வார்த்தை ஒரு சொல்லை தொடர்ந்து தனிப்பட்ட முறையில் வேறு சொல்லை இணைத்து பயன்படுத்துங்கள். 
 • உதாரணமாக நீங்கள் ஒரு கடிகாரம் விற்கின்றீர்கள் எனில் உங்கள் குறிசொல் "கடிகாரம்" என்று மட்டும் இருந்தால் இதே வார்த்தையை கொண்ட ஆயிரம் இணையப்பங்களும் "கடிகாரம்" என்று தானே கொடுத்திருக்கும்..? 
 • மாற்றாக "ஆண்களுக்கான கடிகாரம்" என்று கொடுக்கலாம்.
 • இதன் மற்றொரு பயன் யாதேனில் எந்த ஒரு பயனர்களும் வெறும் ஒரு வார்த்தையை மட்டுமே குறிப்பிட்டு தேடுவதில்லை. ஒரு சொற்றொடர் கொடுத்தே தேடுகின்றனர்.  
 • நீங்கள் கொஞ்சம் யோசித்து பாருங்கள் உங்கள் தேடல்களின் போது என்னென்ன வார்த்தைகளை கொடுத்து தேடியிருப்பீர்கள் என்று..?

Comments

 1. கணினி உபயோகிப்பவர்க்கு நிச்சயம் இந்த பதிவு பயன்படும்

  ReplyDelete
 2. அருமை.. மிகத் தெளிவாக பதிவிட்டிருக்கிறீர்கள். எனது வாழ்த்துகள்..!

  ReplyDelete
 3. அன்பை தேடி,,அன்பு says://
  suppudu says://

  நன்றி சகாக்களே!! தொடர்ந்து இணைய உலகில் பயணிப்போம்,,,

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்