கூகிள் தேடுபொறியில் உங்கள் பக்கங்களுக்கு முக்கியத்துவம் ஏன் தேவைப்படுகிறது?- இது இ(ன்றை)ணைய உலகம்-8

     அழ்மனதோடு தொடர்புபடுத்திய  விளம்பரங்களே பெரும் பொருளீட்டி தரும்   சிறந்த முதலீடு என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

இணைய உலகமும், அதை தொடர்பு படுத்திய இணைய சந்தையும்  குறித்த விரிவான தொடராக இந்த தொடர் பதிவு உங்களுடன் பயணித்து வருகிறது.

   ஆழ்மனதின் விற்பனைத் தந்திரங்களில்Need Wesbiste..? Rs: 3990 only. Click on this link sdjg hei sdgkjfd gsdlgjfdklgj jgkdslfjgkldfjgkldfjgkldfjg நீங்கள் தேர்ச்சி பெற வேண்டுமானால் நீங்கள் பல்வேறு பட்ட கால சூழ்நிலைகளில் பயணம் செய்யும் ஒரு கால இயந்திரத்தை கையில் வைத்திருக்க வேண்டும். அந்த கால இயந்திரத்தினை முடக்கிவிடும்  சாவியாக இந்த தொடர்பதிவு நிச்சயமாக அமையும்.


காரணம், ஒரு சிறந்த விற்பனையை செய்ய வேண்டுமெனில் வாடிக்கையாளரின் மனநிலையை பொறுத்த வரையிலான, உங்களது விற்பனை பொருளுக்கான  விளிப்புணர்வை பற்றி நீங்கள் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் பல்வேறு பட்ட குணங்களுடன் உள்ள, பலரையும் நாம் புரிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்றவாறு நமது தயாரிப்பு இருக்கும்படி சந்தைபடுத்துவது என்பது இயலாத காரியம். அப்படி வாடிக்கையாளருக்கு பிடித்த அல்லது தேவையான பொருளை தான் நீங்கள் விற்பனை செய்வேன் என்று தீர்மானம் செய்து கொண்டால் நிச்சயம் அது உங்கள் இலாபத்தை குறைத்துவிடும்.

அதற்காக இதை அப்படியே விட்டுவிட முடியுமா..? எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு மாற்றுவழி நிச்சயமாக இருக்கும். அந்த இரண்டாவது வழி தான் மிக சிறந்த விற்பனையை அளிக்க கூடிய ஆழ்மனதுடன் தொடர்பு படுத்திய விற்பனை தந்திரம்.

சுருங்க சொல்ல வேண்டுமானால்,
ஒரு வெற்றிகரமான விற்பனை தந்திரம் என்பது,
வாடிக்கையாளர்கள் உங்களை தீர்மானிக்கும் படி
வாடிக்கையாளர்களை நீங்கள் தீர்மானியுங்கள்..

     ஆமாம், நீங்கள் தீர்மானித்து தாயார் செய்துள்ள விற்பனை பொருளை பற்றி வாடிக்கையாளர்கள் என்ன நினைப்பார்களோ.? என்ற கவலையை விடுத்து, வாடிக்கையாளர்கள் இதைத்தான் நினைக்க வேண்டும் என்று சத்தம் இல்லாமல் கட்டளை இடுங்கள். இந்த ஆழ்மனதை வசியப்படுத்தும் கலையை நீங்கள் கற்றுத்தேர்ந்தால் உங்கள் வியாபாரம் இனி அமோகம் தான். இந்த கலையை கற்றுக்கொள்ள தொடர்ந்து இந்த தொடர் பதிவில் ஒவ்வொரு படியாக பயணிப்போம்

பெரும்பாலும் சர்வதேச நிறுவனங்கள், இணைய விளம்பரங்களை நாடி செல்லுவதன் நோக்கமும் இந்த கைங்காரியத்தை இணைய விளம்பரங்களால் மிக எளிதாக செய்ய முடியும் என்பதால் தான்.    உங்களுக்கு தெரியுமா..? கூகிள் போன்ற தேடுபொறிகளில், ஒரு வார்த்தையை  கொடுத்து விசையை அழுத்தியதும், தொடர்புடைய வார்த்தைகள் அடங்கிய ஆயிரக்கணக்கான இணையதளங்களின் இணைப்புகள் உடனடியாக உங்கள் திரையில் காண்பிக்கப்படுகின்றன அல்லவா..?
கிட்டத்தட்ட 60 விழுக்காடு மக்கள் இத்தகைய தேடுதல்களின் போது முதல் பக்கத்தில் உள்ள மூன்று தலைப்புகளில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் தேடும் குறி சொல்லிற்கு ஏற்ற பக்கம் இந்த முதல் மூன்று இணைப்புகளில் கிடைத்து விடுமென்று நம்புகின்றனர். எனவே தான் அதிகப்படியான சொடுக்குகள் கூகிள் தேடு பொறியின் முதல் இடத்தை பிடிக்கும் இணையதளங்களுக்கு கிடைக்கின்றன.
தேடுபொறிகள் + குறிசொற்கள் + சொடுக்குகள்
(பின்வரும் பதிவுகளில் இதைப்பற்றி விரிவாக பார்ப்போம்)


இணைய சந்தையில் உங்கள் விற்பனையை பத்து  மடங்காக உயர்த்த முடியும் என்பதை உணர்ந்தீர்கள் தானே? இன்னும் என்ன தயக்கம்..? முதலில் உங்களுக்கென்று  ஒரு இணையதளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். உங்கள் இணையத்தளம் என்பது, வெறும் முகவரி அட்டை மட்டும் அல்ல என்பதை நன்கு உணர்ந்து இணையதளத்தை அமைக்கும் முன் சில அடிப்படை விசயங்களில் கவனம் செலுத்துங்கள்.


  • இணையத்தளத்தின் பெயர் ( டொமைன் )
  • (பதிவேற்றம்) ஹோஸ்டிங் வழங்கும் நிறுவனம் 
  • இணைய வடிவமைப்பு
  • இணையத்தை பிரபலமாக்கும் முறை
வி(ரி)ரைவாக காண்போம்

Comments