கூகிள் போன்ற தேடுபொறிகளுக்கேற்ற குறிசொற்களை தேர்ந்தெடுப்பது எப்படி..? - இது இ(ன்றை)ணைய உலகம்-9

   எதிர்காலத்தில் இணைய தளங்கள் முலமாகத்தான் பெரும்பாலும் பரிவர்த்தனைகள் நடக்கும் என்பதை உறுதியாக கூற முடியும். எனவே தான் இணையத்தளங்கள் உருவாக்குவதன் நன்மையையும், கோடிக்கணக்கான இணையத்தளங்களில் உங்கள் நிறுவனத்தை தக்கவைப்பதற்கான காரணத்தையும்,. போட்டியாளர்களை சமாளிப்பதற்கான விளிப்புணர்வையும் பன்னாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து நாமும் மிக வேகமாக கற்றுக்கொள்ள வேண்டியது  அவசியம் ஆகும்.

முந்தைய பதிவிற்கு
மற்ற பதிவுகளை பார்க்க

   இணைவழியாக வர்த்தகம் செய்யும் போது அது மிக வேகமான பரிவர்த்தைனைகளை உங்களுக்கு ஏற்படுத்தி தரக்கூடும் வல்லமை வாய்ந்தது என்பதால் உங்கள் இணைய தளம் வடிவமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். 

   நமது இணையத்தளமே, நமது நிறுவனத்தை பாதுகாக்க கூடிய இரும்பு பெட்டியாகும். இந்த இரும்பு பெட்டியின் சாவி  உங்கள் கைகளில் இருக்க வேண்டியது முக்கியம். 

      பல மில்லியன்களை சம்பாதித்து தந்து கொண்டிருக்கின்ற பெரும்பாலான  இணையத்தளங்கள் வெறும் ஒரு மடிக்கணினியின் உதவியால் மட்டுமே சாத்தியத்தை உருவாக்கிக்கொடுத்து கொண்டிருக்கிறது என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.

அப்படி அந்த இணையத்தளங்கள் என்ன தான் வித்தை செய்து காட்டிவிட்டன..?

எல்லாமே, வாடிக்கையாளர்களின் ஆழ்மனதோடு தொடர்புடைய விருப்பங்களை லேசாக தட்டி விடக்கூடிய சிறிய நெம்புகோலை சரியாக கடைபிடித்தது மட்டும் தான்.

உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களை விட்டு எங்கும் மாற போவதில்லை. நீங்கள் மாறிக்கொண்டே இருக்கும் பட்சத்தில்.

       வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்து, அவர்களை தக்க வைத்துக் கொள்வது என்பது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் வாடிக்கையாளர்களுக்கு உங்களை நினைவில் வைத்திருக்கும் படி அடிக்கடி சுய அறிமுகம்  கொள்வதுதான்.

ஒரு முறை உங்கள் வாடிக்கையாளர்கள் சந்தித்து விட்டால் பத்தாது. ஒவ்வொரு முறையும் அவர்களை கண்கானித்து அவர்கள் கண் முன் அடிக்கடி  நீங்கள் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஆழ்மனது என்பது வெறும் கற்பனை அல்ல, அது புற மனதோடு தொடர்புடைய மூளையின் இயக்கமும் கூட என்பதை முழுமையாக புரிந்துகொண்டு செயல்படுங்கள்.

கண்களும் மூளையும் ஆழ்மனதை சீண்டிவிடும் இரு மின் முனைகள் ஆகும். உண்மையில் கண்கள் பார்க்கும் அனைத்தையும் மூளை பதிவு செய்து  விடுவதில்லை, அது ஏற்கனவே எதையாவது எப்போதும் புரட்டிக்கொண்டே இருப்பதால் அடிக்கடி கண்கள் பார்க்கும் தகவல்கள் அனைத்தையும்  உள்வாங்கி ஒரு தற்காலிக நினைவிடத்தில் சேமித்துக் கொண்டே வருகிறது. எப்போது மூளை தனக்கு நேரம் கிடைக்கின்றதோ, அப்போது தான் தற்காலிக நினைவிடத்தில் பதிந்த விசயங்களை திரும்ப கொணர்ந்து அசைபோடுகிறது. 

    புரியும்படி இன்னும் சொன்னால், மாடு புல் மேய்வதை கவனித்து பார்த்தால் ஆழ்மனதின் செயல்பாடினை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். மாடு எப்போதும் நுனிப்புல்லினை மட்டுமே சாப்பிடும் என்பார்கள் அல்லவா..? அது தனக்கு கிடைத்த கொஞ்ச நேரத்தில் பரவலாக மைதானத்தையே சுற்றி வந்து வேகமாக புற்களை மேயும். அப்போது அந்த புற்களை மென்று தின்னாது அதை அப்படியே தனது வயிற்றில் உள்ள நான்கு அறைகளில் ஒன்றன் பின் ஒன்றாக நிரப்பிக்கொள்ளும். மேய்சல் முடிந்ததும்  ஒரு ஓரமாக படுத்துக்கொண்டு தனது வயிற்றின் அறைகளில் சேமித்து வைத்த புற்களை திரும்ப வாய்க்கு கொண்டு வந்து நன்றாக மென்று தின்னும்.  இந்த கதையை தான் நமது ஆழ்மனமும் செய்கின்றது. எனவே தான் கிடைக்கின்ற சமயங்களில் எல்லாம் கண்கள் பார்க்கும் அனைத்து காட்சிகளையும் மூளை மிக வேகமாக தனது தற்காலிக நினைவிடத்தில் தேக்கி வைத்துக்கொண்டு சயத்தில் வெளிக்கொணர்கிறது.

ஆழ்மனது எப்போதும் ஒருவித பதற்றத்திலேயே இருப்பதால் அதை ஏமாற்றுவது அல்லது கவருவது என்பது மிக மிக எளிதான விசயம். இணைய வழி விளம்பரங்கள் இதைத்தான் அடித்தளமாக கொண்டு செயல்படுகிறது.

இதோ உங்களுக்கு சில சோதனைகள்

      ஜப்பானிய மனோதத்துவ நிபுனரான அக்கியோசி கிடாவ்கோ தனது நிழல்பட சோதனைகள் மூலம் இதை தெளிவாக உணர்த்துகிறார்.

கீழ்கண்ட இரு படங்களையும் சிறிது நேரம் உற்று பாருங்கள்      மேற்கண்ட இரண்டு படங்களும் நிலையான படங்களே ஆகும். அதில் வேறு எந்த அசைவு நிரல்களும் (அனிமேசன்) இணைக்கப்பட வில்லை. ஆனால் அது நம் கண்களுக்கு அசைவது போல தோற்றமளிக்கிறது அல்லவா..? 

காரணம், மூளை கண்கள் சொல்வதை மட்டும் நினைவில் கொள்ளுமானால் இந்த பிரம்மை ஏற்படாது. அது, எதை எதையோ சிந்தித்து உங்கள் சொல்பேச்சை கேட்காத அடங்காத முட்டால் குதிரை என்பதால் தான் மாயத்தோற்றமானது ஏற்படுகிறது. 

இந்த கோட்பாட்டின் படி ஆழ்மனமானமானது கண்களில் படும் அனைத்து விசயங்களையும் நிச்சயமாக உள்வாங்கி தனது நினைவிடத்தில் சேமித்துக்கொள்கிறது என்பதை புரிந்துகொண்டீர்கள் தானே..?

   இணைய வழி விளம்பரங்களுக்கும் ஏனைய ஊடகங்கள் வழி விளம்பரங்களுக்கும் உள்ள மிகப்பெரிய சவாலே இந்த ஆழ்மனதுடன் தொடர்பாடுதலில் இணையவழி விளம்பரங்கள்   வெற்றிபெற்று விடுகின்றன என்பதுதான்.

நீங்கள் எந்த ஒரு பக்கக்காட்சியை இணையத்தளங்களில் பார்வையிட்டுக் கொண்டிருந்தாலும் பக்கவாட்டில் உள்ள வண்ணங்கள், படங்கள், எழுத்துக்களை  ஆழ்மனது அசைபோட பதிவு செய்து கொள்ளும்.

என்ன இனி நமக்கென்ற ஒரு சொந்த இணையதளம் தொடங்கலாமா..?

உங்கள் தளம் தொடங்கியாச்சுனா அதை  முதலில் தேடுபொறிகளில் இணைத்துக்கொள்ளுங்கள்

தேடுபொறிகளும் அதன் செயல்பாடுகளும் அடுத்த பதிவில்

Comments

  1. ஓரு பேராசிரியரின் பாட விளக்கம் போன்ற இனிய எளிய நடை

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்