Ads Top

கொஞ்சம் சிந்தியுங்கள் தமிழ் உறவுகளே!!

தொழிற்களம் சார்பாக,   நமது தொழிற்களம் பதிவர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் உறவுகளுக்கும் ஒரு வேண்டுகோள்..

நேற்றைய தினத்தில் எமது மனதை பாதித்த இரண்டு விசயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். 

இதில் தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு குற்றம் சொல்ல எதுவுமில்லை,, ஒற்றுமை இல்லாமல் தனிப்பட்டு நாம் இருப்பதை குறித்தே இந்த பதிவு.

முதல் நிகழ்வு : 

தொழிற்களம் அதிகமாக  கல்லூரி மாணவ / மாணவியர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் காரணம், இளைய சமூகம் பகுத்தறிவுடன் விளித்தெழுந்தால் தான் நிச்சயமாக நாளைய எதிர்காலத்தை சரியாக அமைத்துக்கொள்ள முடியும் என்பதால் தான். 

தொழிற்களத்தில் புதிதாக பதிவு எழுதிட மாணவர்கள் பலருக்கும் வலைப்பதியும் முறை பற்றியும் வலைப்பதிவுகளின் சிறப்பு குறித்தும்  எடுத்துகூறி அவர்களை பதிவெழுத தூண்டி வருகின்றோம். சில அனுபவம் வாய்ந்த பதிவர்களும் எம்முடன் இணைந்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்திட உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

அவ்வாறாக நேற்றைய தினத்தில் சில மாணவர்களுடன் உரையாடி கொண்டிருக்கும் போது  மனதில் சில கசப்பு தோன்றியது. 

   தமிழ் மொழியின் வளர்ச்சியில்  இன்றைக்கு வெகுசிலரே பற்றுதலுடன் இருக்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் தமிழையும், தமிழன் என்ற உணர்வையும் மறந்து வருகின்றனறோ..? என்றே தோன்றுகிறது.  

காரணம், தமிழில் வாசிப்பதற்கு சிரமமாக இருக்கின்றது. ஆங்கிலத்தில் எழுதுவது தான் எங்களுக்கு மிக எளிதாக இருக்கும் அண்ணா. அதுவுமில்லாமல் தமிழ் தமிழ் என்று கூறி என்ன சாதித்துவிட போகின்றோம் எல்லாமே அரசியலாக மாறிவிடுகிறதே என்றனர்.

       கேட்பதற்கு மிக அதிர்ச்சியாக இருந்தது தமிழன் என்ற உணர்வில் இவர்களது எண்ணம்  எம்மையும் மறந்து சில கனம் அவர்களுடன் ஆவேசமாக சில கருத்துகளை பேசவைத்துவிட்டது.. அவை உங்கள் பார்வைக்காக,

தமிழன் என்ற இனத்திற்கு  தமிழை தக்க வைப்பதற்கும் ஏன் இத்தனை போராட்டம்..?

ஒரு மொழியானது மட்டுமே ஒருவனின் முதல் அடையாளம். அந்த அடையாளத்தை தொலைத்து விட்டு தாயிக்கும், மனைவிக்கும் வேறுபாடறியாமல் வாழ்வது வாழ்கையாகுமா..?

ஏன் மொழியை ஒரு மனிதனின் அடையாளம் என்கின்றோம்..? எதற்காக மொழி மனிதனுக்கு அடையாளமாய் கருதப்படுகின்றது..?

உரிமைகளை கேட்டு பெற ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் தேவைப்படுகிறது. அத்தகைய முதல் அடையாளம் தான் மொழி.

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் எனில் அதன் மொழியை அளித்துவிடுங்கள் என்பது தான் உலக போர் தத்துவமே..
அத்தகைய அழிவை நாம் தவிர்க்க வேண்டுமெனில் ஒன்றுபட்ட தமிழினம் உருவாக வேண்டும். 

   எதற்காக வெவ்வேறு உவமைகளை நாம் சொல்ல வேண்டும். இப்போது உங்கள் வீட்டில் மின்சாரம் இருக்கின்றதா..? தேவையான  உமது உரிமைகளை   தைரியமாக  கேட்டு பெறும் வல்லமை உமக்கிருக்கின்றதா..? என்ன செய்ய முடியும் தனித்திருக்கும் உன்னால்..?

சாதரணமாக ஒரு மணி நேரம் மின்விசிறி இல்லாமல் உன்னால் இருக்க முடியவில்லை என்றதுமே கோபம் வருகிறதல்லவா..? 

இருந்த கொஞ்ச பணத்தையும், மேலும் வட்டிக்கு பணத்தையும் வாங்கி முதலீடாக போட்டு  தொழில் துவங்கிய சிறுதொழில் செய்பவர்களின் நிலையை நினைத்து பாருங்கள்..? ஒரு நாளைக்கு வெறும் நான்கு மணி நேரம் மட்டுமே அதுவும் விட்டு, விட்டு வரும் மின்சாரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது..? 

இந்த உரிமையை கேட்டு பெற வேண்டாமா..?  எப்படி பெறுவது இப்படி நாம் பிளவுபட்டு இருந்தால்..? எப்படி நம் குரல் அரசுக்கும் மற்றவர்களுக்கும்  கேட்கும்..?

உன் அண்ணன் தானே, சேலத்தில் தன் உயிரையும் துச்சமாக எண்ணி உடலில் திரவத்தை ஊற்றி  பற்றவைத்து தன்னையே எரித்து உன் கண்களுக்கு வெளிச்சத்தை காட்ட, துடி துடித்து இறந்து போனான்..?  யோசித்து பார் சின்னதாக ஒரு சூடு பட்டதுமே உதறுகிறாய், உடலே தனலாய் எரிந்து போயும் அவன் குரல் கொடுத்து மடிந்து போனது எதற்காக..? சாகப்போகிறேன் என்று தெரிந்தும் அவன் போராடினான் என்றால், அவனுக்கு தான் அரியனை ஏறும் உள்நோக்கமா இருந்திருக்க போகின்றது..? 


  கூடங்குளம், ராஜபக்சே வருகையை எதிர்த்து போராட்டம், மின்சார பிரச்சனை, டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீடு எதிர்ப்பு என்று அடுக்கடுக்காய் போராட்டம் செய்து உயிரையே  மாய்த்து கொண்டாலும் கேட்காத காதுகள் உன்னையும் தானே ஏளனமாக நினைத்து கொண்டிருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குரலில் எதிரொலித்தால் கேட்காத காதுகள் கிழிந்தல்லவா போயிருக்கும்..?

   ஒட்டுமொத்தமாக ஒரு இனத்தை கண்முன்னெ அழித்து படுகொலை செய்தவனுக்கு சிகப்பு கம்பள வரவேற்பும், உபசரிப்பு விருந்தும் என்றால்..? 
நாளைய சந்ததியினர் நலமுடன் வாழ்வதற்காக, தன் இன்றைய இளமையை எரித்து கொண்டவனுக்கு என்ன கிடைத்தது.? அனைத்தையுமே கண் முன்னே கண்டுகொண்டே உச்சு கொட்டிக்கொண்டே இருந்தால் நாளை உன் நிலைமை என்னவாகும்..?

அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம் மொழி பின்னடைவு தான்.

மொழியால் ஒன்றுபட்டுள்ள  சகோதரனுக்கு  சாதியும், மதமும் கண்களுக்கு நிச்சயம் தெரியாது.

இந்த மண்ணில் விடுதலைக்காக அல்ல இந்த போராட்டம். விடியலுக்காக நடக்கின்றது..

பன்னிருகோடிக்கும் மேல் மக்கள் தொகை இருந்தும் நமது குரல்களுக்கு மதிப்பில்லையே..? காரணம், மொழியில் பிளவு. அதுவே அவர்களுக்கு சாதகமும் கூட...

அன்னியர்களை எதிர்த்து குரல் கொடுக்கும் வாய்ப்பு நமக்கில்லை.. அதைவிட கொடுமை மொழி பற்றிய பகுத்தறிவின்மையும், அறியாமையுமே..

உணர்ந்துகொள் சகோதரா.. இது உணர்வல்ல, போராட்டம். உனது பங்களிப்பும் வேண்டுமடா,,

மொழி கலப்பு குறைத்துக்கொள்.  

ஆங்கிலம் அறிவல்ல, மொழி.
தமிழ்  மொழியல்ல, அடையாளம். 

என்று எமது எண்ணத்தை முன் வைத்தோம்.

இரண்டாவது நிகழ்வு :

நேற்று இரவு அலுவல பணி முடிந்ததும் வீடு திரும்பிம் வழியில் ஒரு நிகழ்வு.

     நெடுஞ்சாலையின் மையத்தில் ஒரு நாய் நின்று குறைத்து கொண்டிருந்தது. அதன் அருகில் மற்றொரு நாய் அடிபட்டு கிடந்தது. கிட்டத்தட்ட இரவு 12 மணி என்பதால் வழக்கம் போல விபத்தில் அடிபட்டு அந்த நாய் இறந்துவிட்டது போல, அது இறந்தது தெரியாமல் இந்த நாய் அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்று உயிருடன் இருந்த அந்த நாயின் அன்பை எண்ணி ஜீவராசிகளின் ஒற்றுமை நம்மிடம் கூட இல்லையே என்றவாறே சென்றுவிட்டோம்.வீடு செல்லும் வரை இறந்து போன நாயையும், அதன் அருகில் நின்று கொண்டு இருந்த நாயின் பாசமும் எம்மை தூங்க விடவில்லை.

    காலையில் அனைத்தையும் மறந்து அலுவலகம் திரும்பும் வழியில் எமது இன்றைய (22.09.2012 சனிகிழமை) நாளின் அனைத்து பணிகளையும் புரட்டி போட வைக்கும் அளவிற்கு அந்த சம்பவம்,

நேற்று இரவு பார்த்த அதே இடத்தில், அடிபட்டு இருந்த நாயை யாரோ ஓரமாக தூக்கி போட்டிருந்தனர். உன்மையில் அடிபட்டுகிடந்தது ஒரு குட்டி நாய். அதன் பின்புறம் முற்றிலுமாக வாகன சக்கரத்தால் நசுக்கப்பட்டிருந்தது.  ஆயினும்  அந்த குட்டிநாய் இறந்திருக்கவில்லை.   அது வலியால் துடித்தபடியே கத்திக்கொண்டிருந்தது.

அதன் அருகில் உயிருடன் இருந்தது அதன் தாய். அது செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தது. இரவு முழுவது நிச்சயமாக அந்த தாய் நாய் குட்டியை பிரிந்து சென்றிருக்க வாய்ப்பில்லை.. அதன் கண்களில் அவ்வளவு வலி. சாலையில் செல்பவர்களை பார்த்து குறைத்துக்கொண்டே ஓடியது. அதன் கதறலில் யாரவது "உதவி செய்யுங்களேன்" என்றே பொருள் இருந்தது.  வாகனத்தை நிறுத்திவிட்டு உடனடியாக அருகில் போனது அந்த தாய் நாய் நம்மையும் பார்த்து குறைத்தது.  

வலியால் குட்டிநாய் துடிக்கும் போதெல்லாம் ஓடி சென்று குட்டியின் அருகே முகம் தேய்ப்பதுமாகவும் சாலையில் செல்பவர்களை பார்த்து குறைப்பதுவுமாகவும் தாய் நாய் சுத்தி  கொண்டே இருந்தது. 

குட்டிநாய் முற்றிலும் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை. எமக்கு என்ன செய்வது என்றும் புரியவில்லை. 

மேலும் அவ்விடத்தில் நிற்க முடியாமல் அலுவலகத்திற்கு வேகமாக வந்ததும், ப்ளூகிராஸ் எண்ணை இணையத்தில் தேடி, கிடைத்த எண்ணை தொடர்புகொள்ள முயற்சித்தும் பலன் வீணாய் போனது. திரும்ப சென்ற போது குட்டி நாய் செத்துகிடந்தது.

அந்த தாய் நாயின் அன்பு நம்மை கண்கலங்க செய்து விட்டது. 

வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது கொஞ்சம், வாயில்லா ஜீவன்களிடமும் பாசமும், அன்பும் இருக்கிறது என்பதை உணர்ந்து ஓட்டுங்கள். மனித குழந்தை அடிபட்டிருந்தால்  நம்க்கு எவ்வளவு வலிக்குமோ அதே வலிதான் மற்ற ஜீவன்களுக்கும் என்று உணர்ந்து செயல்படுங்கள். 

இது போல விபத்துக்கள் இனி ஏற்படாமல் தவிக்க முடியுமல்லவா..? அதற்காக இந்த பதிவு.


நாயிடம் கூட இரக்கம் காண்பித்து பழகுவது தமிழனின் இயல்பு!!
இரக்கமே இல்லாமல் தமிழனையே நாயாக பார்க்கும் குற்றவாளிகள்..?

    மாற்றம் வருவதற்கும் பகுத்தறிவு பெற்ற சமுதாயம் உருவாக்கவும் என்றும் உங்களுடன் இணைந்து பணியாற்றும் தொழிற்களம் குழு

11 comments:

 1. இந்த உலகில் மனிதரிடமே மனிதாபிமானம் இல்லை விலங்குகளிடமா காட்ட போகிறார்கள்..
  இனியாவது வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்லுங்கள்....
  நல்ல பகிர்வு அண்ணா,
  நன்றி..

  ReplyDelete
 2. நெஞ்சை உருக்கிய பதிவு...

  எனக்கும் இந்த அனுபவம் உண்டு...

  மனித நேயத்தை பரிசித்து பார்க்கும் நேரம்...

  அனைவரிடமும், அனைத்திடமும் மனித நேயத்துடன் இருப்போம்...

  நல்ல பதிவு சகோ...

  ReplyDelete
 3. கலக்கல் மன்னனின் நன்றி மனதில் இந்த பதிவு பதிந்தது....
  உங்கள் பதிவு தொடர வேண்டும்...

  ReplyDelete
 4. ஐயோ...நன்றிகெட்ட மனிதர்களைவிட நாய்கள்மேல்தான்.விலங்கினங்களுக்கு வழிகாட்ட வகைசெய்யுங்கள் களமே. மொழிக்காக அடையாளத்தை தொலைத்துவிட்டோமோ...?

  ReplyDelete
 5. வெறும் நாலாயிரம் தமிழர்கள் வசிக்கும் லண்டன் மாநகரில் கால் வைக்க முடியாமல் அசிங்கப்பட்டு திரும்பிய வரலாறு எம் தமிழ் இனத்தை அழித்துகொண்டிருப்பவனுக்கு உண்டு!

  ஆயினும் ஆறு கோடி தமிழன் வசிக்கும் என் தாய் திருநாட்டிற்கு சர்வ சாதாரணமாகத்தான் வந்து சென்று கொண்டிருக்கிறான்...காரணம் எம்மில் பிளவு.. மொழி.. இனம்..மதம்..ஜாதி என எல்லாவற்றிலும் தமிழன் கட்டுண்டு பிரிந்துகிடக்கிறான்..என்று நம்மில் ஒற்றுமை ஏற்படுகிறதோ அன்றே தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் விடிவு ஏற்படும்!

  நன்றி...தொடருங்கள்!

  ReplyDelete
 6. நான் வசிக்கும் பஹ்ரைனில்..வட இந்தியர்கள்.. மலையாளிகள்.. தமிழர்கள்... என அனைவரும் உண்டு!

  நான் பார்த்த வரையில்....

  எவ்வளவு படித்திருந்தாலும் சரி...இரண்டு வட இந்தியன் சந்தித்தால் இந்தியில் தான் பேசிக்கொள்கிறான்

  அதைப்போல இரண்டு மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில் தான் பேசிக்கொள்கிறான்..

  ஆனால் இரண்டு படித்த தமிழன் சந்தித்தால்....ஏதோ இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவன் போல் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொள்கிறான்..கேட்டால் ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பு என்கிறான்!

  ஆங்கிலம் என்பது ஒரு மொழி..அது அறிவல்ல என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு ஏனோ உரைப்பதேயில்லை..குறிப்பாக தமிழனுக்கு!

  நல்லதோர் ஆக்கம் தொடருங்கள் சகோ!

  ReplyDelete
 7. உண்மை தான் தொழிற் களமே, நான் கல்லூரி மாணவன், என்ற முறையில், நீங்கள் தமிழ் பற்றி கூறியதை ஏற்றுக் கொள்ளகிறேன், என் நண்பர்கள் பலரும் இதைச் சொல்லி கேட்டு இருக்கிறேன்,
  இவர்களை பார்க்கையில் எனக்கு தோன்றிய கவிதை:

  "தாயின் பாசம் அறியாமல்,
  சித்தியை கட்டிக்கொண்டு முத்தமிட்டதாம்-
  குழந்தை (சில)தமிழர்களை போலே"

  "தெரு நாய்களிடம்
  விரோதம் கொள்ளும்,
  "திரு"நாய்கள்
  -(சில) மனித பிணங்கள்.
  நன்றி

  ReplyDelete
 8. ஆங்கிலம் பேசுவது தான் இன்றைய நவீன நாகரீகமாம்...! கொடுமை...

  ReplyDelete
 9. முதலில் தமிழ் பற்றி சொல்லாமல் மொழி என்றால் என்ன என்று சொல்ல வேண்டும்.
  அது நமக்கான அடையாளாமென்றால் எதற்கு அந்த அடையாளம் எனக் கேட்பார்கள்? அதில் என்ன லாபம் என யோசிக்கும் வியாபாரத்தனம் தான் அனைவரது மூளையிலும் விதைக்கப் பட்டு இருக்கிறது.
  அந்த அடையாளத்தால் கிடைக்கும் லாபங்களையும் எடுத்து கூற வேண்டும்.
  முடிந்தால் அது பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும்...
  முயற்சிப்போம்..

  ReplyDelete
 10. மனதைத் தொட்ட பதிவு!

  ReplyDelete
 11. நெஞ்சை உருக்கிய பதிவு...

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.