அழிய போகும் மொழிகளில் தமிழுக்கு 51 அவது இடம்

அழிய போகும் மொழிகளில் தமிழுக்கு 51 அவது இடம்

ஐ.நா. அமைப்பான UNESCO ஐம்பது ஆண்டுகளின் பின்அழியும் மொழிகளின் பட்டியலில் ஐம்பத்தொன்றாகத் தமிழையும் சேர்த்துள்ளதாய் ஒரு செய்தி இணையப் பக்கமொன்றில் மின்னியதைக் கண்டேன்!

இப்போது உங்கள் கண்களில் சோகம் கலந்த ஒரு பயத்தை பார்க்கிறேன்...ஏனென்றால் படிப்பவன் என் தமிழன் தானே...அழியவிருக்கும் 3000 மொழிகளைக் காக்கும் கூகிழ் தேடற் பொறித் தளத்தில் தமிழை அழியாமல் பேண எவராச்சும் ஏதும் எழுதியதாய் எந்தவொரு ஊடகத்திலும் வெளிவந்ததாய் என் கண்ணுக்கோ காதுக்கோ எட்டவில்லை! 

 • பாண்டிய மன்னன் ஆட்சியில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் இருந்ததாய் முழங்குவர் சிலர்...
 • அன்றைய மன்னர்கள் சங்கம் அமைத்துத் தமிழைப் பேணிய பெரியோர்கள் என்பர் சிலர்...
 • பழம் மொழி பெரும் மொழி எம் தமிழுக்கு நிகரான மொழியேது என்று புகழ் பாடுவர் சிலர்...
ஆனால் நாம் யாராவது தமிழை அழியாது பேண ஏதாவது திட்டம் வகுத்தோமா...?

ஒருவர் அண்மையில் ஒரு இணையத்தளத்தில் தமிழ் உதவியாளர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தார்.மறுநாள் அந்த இளைஞனுக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.அதில் அந்த இணையத்தளத்தின் அதிகாரி ஒருவர் பேசினார்.

பேசும் போது அவனுக்கு குரல் தடுமாறியது.காரணம் பேசுகின்ற அதிகாரி அவனிடம் தூய தமிழில் உரையாடினார்.இதற்கு காரணம் உங்களுக்கும் புரிந்திருக்கும்...! இருந்தாலும் சொல்கிறேன் அவனுக்கு இளந்தமிழில் பேசி பழக்கம் இல்லை...

அந்த மனிதன் யார் தெரியுமா...? அவன் தான் உங்களிடம் ,உங்கள் மனதிடம் இப்போது இந்த தகவலின் வாயிலாகப் பேசிக்கொண்டிருக்கிறான்.அந்த இணையத்தளம் நம் “தொழிற்களம்“ தான்.இதுபோன்ற நிகழ்ச்சி உங்களுக்கும்  நடந்திருக்கலாம்...

இவ்வாறு ஒரு இளந்தமிழனுடன் நம் தாய் மொழியான தமிழில் இரு நிமிடங்கள் பேச முடியவில்லை எனும் போது நம்மை தமிழன் என்று அழைத்துக்கொள்வதிலும் ,நான் தமிழினத்தில் பிறந்தவன் என இருமாப்பு அடைந்துகொள்வதிலும் எந்த பெருமையும் கிடையாது.


 • வள்ளுவன் 1330 குறள் எழுதினான்.
 • கம்பன்,இளங்கோவும் காவியம் படைத்தானர்.
 • இராஜ ராஜனும் , கரிகாலனும் நம் கட்டிடக்கலையினை உலகுக்கு காட்டினர்.
 • பாண்டிய மன்னர்கள் சங்கம் அமைத்துத் தமிழைப் பேணினார்கள்.
 • பாரதி தமிழின் பெருமையை உணர்தினான்.
நாம் என்ன செய்தோம்...?

வள்ளுவனார் ஆக்கிய 1330 குறளை ஒன்றும் பிழைக்காமல் 127 மொழிகளில் மொழி பெயர்த்தோம். இறுதியில் திருக்குறள் பொது உடைமையாயிற்று.

இதற்கு பதிலாக அந்த 127 மொழிக்காரரும் தமிழ் படிக்க அவ்வவ் மொழியில் "தமிழ் கற்கலாம் வாங்க..." என 127 நூல்களை வெளியிட்டிருந்தால் திருக்குறளுடன் தமிழும் வளர்ந்திருக்கும் !

நாம் தமிழர் நம் மொழி தமிழ் என்று எமக்குள்ளே தான் வீரம் பேசுகிறோம்...நம்மூர் புத்தகக் கடையில் உலகிலுள்ள எந்த மொழியையும் படிக்க நூல்கள் இருக்கென்றால் நம்ம தமிழ் அழியாமல் என்ன தான் செய்யும்! 

அழிந்த சங்க காலத்தை பற்றியும் , எரிந்த யாழ்பாணம் களஞ்சியத்தை பற்றியும் எவ்வளவு காலம் பேசிக்கொண்டிருப்போம்..

விழித்தெழு தமிழா...( இனி தமிழனாகுவோம் என்ற நம்பிக்கையில் தமிழா என்று குறிப்பிட்டேன்)!

என் பேச்சு உங்கள் உணர்ச்சிகளை தூண்டுகிறதா என்பது குறித்து எனக்கு எந்த கவலையும் கிடையாது.என் பேச்சு உங்கள் உணர்வுகளை  தொடுகிறதா என்பது மட்டுமே எனது பயம்...

அவ்வவ் மொழிக்காரருடன் அவ்வவ் மொழியில் பேசாது அந்த அந்த மொழிக்காரர் நம்ம தமிழைப் பேசினால் தமிழில் பதில் கூறும் நிலை வருவதற்கு முயற்சிக்காத வரை நம்ம தமிழை அழியாமல் பேணிக் காக்க முடியுமா...?


இணைந்திடுவீர் ஒன்றாக...!இனி யார் வருவார்கள் என்று பார்ப்போம்...!!!(இந்த திமிர் வேண்டும் நமக்கு)

Comments

 1. உண்மை தான் நண்பா, உங்கள் எழுத்திலே ஒரு வேகம் இருக்கிறது, எனக்கும் அனுபவம் உண்டு, இணைவோம் , நன்றி

  ReplyDelete
 2. உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளால் நிச்சயம் உண்மையான தமிழனின் உணர்வுகளை தட்டி எழுப்பிவிட்டீர்கள்...

  நிச்சயம் ஒன்று கூடுவோம் நண்பா... நம்மால் முடிந்தவரை நம் தாய்மொழியை காப்பாற்றுவோம்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. அனைவரும் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 4. தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வருக! பல தரமான கட்டுரைகளை உருவாக்கி உதவுங்கள்.

  ta.wikipedia.org

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்