பணம் பணம் பணம் : 22

அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!

தொழிற்களம் வலை தளம் மூலமா இன்னைக்கு 22 ஆவது நாளா உங்களை சந்திக்கிறேன். கவனிக்கிறது -முடிவெடுக்கிறது பத்தி பார்த்தோம். நமக்கு நாமே ஒளியா இருக்கனும் - எக்காரணத்தை கொண்டும் முட்டாளோட ஒட்டோ உறவோ கூடாதுன்னு பார்த்தோம்.

கடைசி பாய்ண்டை கியாபகம் வச்சுக்க சின்னதா  ஒரு கதை (உபயம்: கிருபானந்த வாரியார் கமர்ஷியல் டச்: நாம தேன் ) .

யாவாரி  ஒருத்தரு வழித்துணைக்காக ஒரு முட்டாளை கூட போட்டுக்கிட்டு அவனுக்கு கூலியா அம்பது ரூவா பேசி செட்டில் பண்ணிக்கிட்டு  வெளியூர் கிளம்பினாரு. 

வழியில சத்திரத்துல சாப்ட  ரெண்டாவது நிமிசம் முட்டாள் தூங்க ஆரம்பிச்சுட்டான்.தூக்க மயக்கத்துல பாதைக்கு உருண்டு வந்து  தூங்க ஆரம்பிச்சுட்டான். யாவாரி உட்கார்ந்த இடத்துலயே ஒறங்க ஆரம்பிச்சாரு.

அந்த வழியே கொள்ளையர் கூட்டம் ஒன்னு பாஸ் ஆச்சு.. மொதல்ல வந்தவன் கால்ல முட்டாள் பாடி பட்டது. அவன் "  தத்..  பனை மரம்னு எத்தி விட்டான்"

ஒடனே முட்டாள் " யோவ் பார்த்து பேசு ..பனைமரத்தோட பாக்கெட்ல அம்பது ரூவா காசிருக்குமா"ன்னான். கொள்ளைக்காரன்  " உன் மூஞ்சிக்கு  அம்பது பைசா மேல பெறாதே. நான் நம்பமாட்டேன்"ன்னான்.

அதுக்கு முட்டாள் உள்ளாற ஒறங்கிக்கிட்டிருக்கிற யாவாரியை கேளுன்னு கோர்த்து விட்டுட்டான். இப்படி ஒரு முட்டாளை துணைக்கு வச்சுக்கிட்டா அந்த யாவாரியை போல திருப்பதி போகாமயே மொட்டைபோட்டுக்கிட வேண்டியதுதான்

இந்த முட்டாள்களை பத்தி நிறைய சொல்லனும்.  தான் முட்டாள்னு தெரிஞ்ச முட்டாள் கொஞ்சம் பெட்டர் ஆனால் .தான் அறிவாளின்னு நம்பற முட்டாள் ரெம்ப ஆபத்து. இன்னம் அந்த முட்டாளை நாலு முட்டாள் சேர்ந்து அறிவாளின்னுட்டான்னு வைங்க ரெம்ப ரெம்ப ஆபத்து.

ஓகே கதை போதும்.  மேட்டருக்கு போயிரலாம்.

மொதல்ல பண வேட்டைக்கு ஏதுவா நம்ம பாடி,மைண்டை ட்யூன் பண்ணிக்கனும். அதுக்கப்பாறம் வேட்டைக்களத்தை தீர்மானிக்கனும். வேட்டைக்கு வியூகம் வகுக்கனும். அதுக்கப்பாறம் தேன் முதலீடுல்லாம்.

அய்.. நம்ம பாடி ஸ்டீல் பாடிங்ணா நீ மேலே சொல்லும்பிங்க. இது எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரமை தான். ஹ்யூமன் பாடியோட பலவீனம் எப்ப தெரியும்னா நாலு மாடி படி ஏறியிறங்கறச்ச தெரியும். அல்லது நீந்தும் போது தெரியும்.    அல்லது நாலு தாட்டி வவுத்தால போனா தெரியும். வழக்கமா எந்திரிக்கிற நேரத்துக்கு ஒரு மணி நேரம் மிந்தி எந்திரிச்சுட்டா அப்பத்தெரியும்.

சீன புரட்சிக்கு அடிகோலி வழி நடத்தி ஜெயித்த மாசேதுங் பத்தி கேள்விபட்டிருப்பிங்க.கம்யூனிஸ்டுன்னதும் குச்சி குச்சியா பாடி , கிழிஞ்ச ஜுப்பா, எச்சி பீடின்னு ஒரு இமேஜ் நம்ம மணக்கண்ல வந்துரும். (தோழர்கள் மன்னிக்க)

நான் சொல்ல போற சம்பவம் நடக்கறச்ச மாசேதுங் கம்யூனிஸ்ட் சீன தலைவரா இருக்கார். கட்சி தோழர்களோட ஒரு கரை புரண்டு ஓடும் ஒரு பெரிய நதிகக்ரையோரமா ஏதோ பேசிக்கிட்டு போறாய்ங்க.அப்போ ஒரு தோழர் " தலைவா.. உங்களுக்கா  வயசாயிருச்சு.. நம்ம கட்சியில இளைஞர்கள் அதிகம் பேர் இருக்காய்ங்க.அவிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமில்லியா"ன்னாரு.

ஒடனே  நம்மாளு என்ன பண்ணாரு தெரியுமா? அந்த நதியில குதிச்சு குறுக்கால நீந்த ஆரம்பிச்சுட்டாரு. பண வேட்டைங்கறது செயல். எண்ணம் செயலாக உடம்பு வில்லா வளையனும். கு.ப வளைய தயாரா இருக்கனும்.

ஹ்யூமன் பாடி விசித்திரமானது இதை எந்த அளவுக்கு சிரமப்படுத்தறிங்களோ அந்த அளவுக்கு ஸ்ட்ராங்காகும்.  இதை எந்தளவுக்கு சொகம்மா வச்சிருக்கிங்களோ அந்தளவுக்கு தகராறு பண்ணும்.

அடிப்படையில ஹ்யூமன் பாடி ரெம்ப நொய்மையானது . ஆனால் மனசு ரெம்ப பலமானது. மனசு அதிலயும் உள் மனசு போடற உத்தரவுக்கு உடல் உடனே அடி பணியும் .எண்ணங்கள் நேரா இல்லைன்னா ஸ்டீல் பாடி கூட கலகலத்து போயிரும்.  வலிமையான உடல் மனசுக்கும் வலிமை தரும்.

உடலும் -மனமும்  வலிமையா இருந்தாதான் - பண வேட்டை செயல்வடிவம் பெறும். அர்ஜுனனை பத்தி ஒரு விஷயம். நினைச்ச போது தூங்கி நினைச்ச போது படக்குன்னு எந்திரிச்சுருவாராம். யுத்தத்துல கிடைக்கிற சின்ன சின்ன கேப்ல கூட குட்டியா ஒரு தூக்கம் போட்டு ஃப்ரஷ் அப் ஆயிருவாராம்.

நமக்கு அந்த ரேஞ்சு இல்லின்னாலும் கு.ப பாடி நம்ம கட்டுப்பாட்ல இருக்கனும். இல்லின்னா பண வேட்டை ஆடப்போன இடத்துல எவனாச்சும் நம்ம பணத்தை ஆட்டைய போட்டுட்டு போயிருவான்.

ச்சொம்மா தமாசுக்கு ஒரு உதாரணம் சொல்றேன்.

ஒரு பெரிய டீல் பேசி முடிக்க வெளியூர் போறோம். பஸ்ல போறச்சயே அகாலமா வவுத்தை கலக்குது. ஆத்திரம் அவசரமா பொதுக்கழிவறைக்குள்ள ஓடவேண்டி வந்துருது. செல் ஃபோனை எடுத்து பத்திரப்படுத்தறதுக்குள்ளயே குழியில விழுந்துருச்சுன்னு வைங்க பயங்கர மொக்கை ஆயிரும்ல.

பாடியை போலவே மைண்டையும் நம்ம கட்டுப்பாட்ல வச்சுக்கனும். லேசா தலைவலியோ /வவுத்து வலியோ/ பசியோ /தாகமோ  3 நாளா தூக்கமில்லையோ அதெல்லாம் பிரச்சினை இல்லை. ஒரு டீல் பேசும் போது இதெல்லாம் ஓடிப்போயிரனும். மைண்ட் நம்ம கண்ட் ரோல்ல இருந்தாதான் இது சாத்தியம். இது சாத்தியமானால் தான் டீல் ஓகே. வேட்டையும் ஓகே.

பண வேட்டையில மிக மிக முக்கியமான விஷயம் டைம் மேனேஜ்மென்ட். நேர  நிர்வாகம்.

கடவுள் அம்பானிக்கு அத்தீனி லட்சம் கோடி கொடுத்தாரு. எனக்கு கொடுக்கலியேன்னு கேக்கப்படாது. கடவுள் அம்பானிக்கும் 24 மணி  நேரம்தான் தந்தாரு. நமக்கும் 24 மணி நேரம்தான் தந்தாரு. அம்பானி அந்த 24 மணி நேரத்தை கரீட்டா மேனேஜ் பண்ணாரு. நாம டீல்ல விட்டுட்டம்.  தப்பு  நம்முதுதேன்.

என்.டி.ஆர் சி.எம் ஆறதுக்கு மிந்தி கூட பத்திரிக்காகரவுக  அவர் கிட்டே பேட்டின்னு கேட்கவே பயப்படுவாய்ங்களாம். இன்னாடா மேட்டருன்னா அவரு கொடுக்கிற டைம் விடியல் 3.00 மணி.

நம்மை பொருத்தவரை மதியம் 2 மணிக்கும் எந்திரிச்சிருக்கம்.ரா முச்சூடும் விழிச்சும் இருந்திருக்கம்.விடியல் 3 அ 4 க்கும் எந்திரிச்சு போயிருக்கம். ஒட்டு மொத்தமா ஊரு தூங்கறதே ஒரு மணி அ இரண்டு மணி  நேரம் தான் போல. அப்படீ..இ.. அடங்கின மாதிரியே இருக்கு மெல்ல மெல்ல கீர் போட்டு வேகம் பிடிச்சுருது.


இன்னொரு சூட்சுமம் என்னடான்னா நாம தட்டு நிறைய போட்டு 3 தடவை - 3 வேளை  திங்கறோமே இதுக்கெல்லாம் காரணம்  நம்ம சைக்கலாஜிக்கல் ஃபீலிங் தான்.சைன்டிஃபிக்கா பார்த்தா இவ்ள சீனே இல்லை.

அதே போல எட்டு மணி நேரம் பத்து மணி நேரம் தூங்கறோமே அது கூட இதே ஜாதி தான். ரா முழுக்க வேலை செய்யும் போது இடையில ஒரு ரெண்டு அரை மணி  நேரம் கண்ணை மூடி படுத்துக்கிடந்தாலே போதும். பாடி -மைண்ட் ரெண்டும் ஃப்ரஷ் ஆயிருது.

ஆக பண வேட்டையில  டைம் மேனேஜ்மென்ட் ரெம்ப முக்கியம்.இதை கீப் அப் பண்ணனும்னா பாடி,மைண்ட் ட்யூனிங் அவசியம்.


இப்படி பண வேட்டைக்கு உங்களை தயார் படுத்த நிறைய விஷயங்கள் இருக்கு அதையெல்லாம் அடுத்தடுத்த பதிவுகள்ள  பார்ப்போம்..உடுங்க ஜூட்டு.

Comments

 1. வாரியார் கதைய உங்க பாணியில் எழுதிட்டீங்க. :)

  ReplyDelete
 2. வாங்க கலா குமரன்!
  சொந்த சரக்கை போல அடிசு விடாம நேர்மையா சொல்ட்டமில்லை.

  ReplyDelete
 3. அருமையான தொடர் .. தொடரட்டும் உங்கள் பனி

  ReplyDelete
 4. வாங்க ராசா !
  ஆக்சுவலா நான் உங்க வாசகன். நான் படிக்கிற மிகச்சில பதிவர்களில் நீங்களும் ஒருத்தரு.

  உங்க வரவும் கருத்துரையும் நெஜமாலுமே பூஸ்டு..

  நன்றி பாஸு

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்