பணம் பணம் பணம் : 23

அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!

தொழிற்களம் வலை தளம் மூலமா இன்னைக்கு 23 ஆவது நாளா சந்திக்கிறேன்.

பணவேட்டையில பணத்தை விட அது நம்ம கைக்கு வர்ர நேரத்துக்கு தான் மதிப்பு அதிகம்.  நேரத்துக்கு பணம் நம்ம கைக்கு வரனும்னா தொழிலை துவங்கறதுல, அதை ப்ரமோட் பண்றதுல, விளம்பரம் செய்யறதுல நாம டைமை கீப் அப் பண்ணியிருக்கனும்.

அதே போல நம்ம தொழிலை பற்றிய, தொழிலுக்கான  சந்தையை பற்றிய நம்ம ஜட்ஜிங் கரெக்டா இருந்திருக்கனும்.

இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகனும்னா நம்ம பாடி -மைண்ட் ரெண்டும் பக்காவா இருக்கனும். அதுவும் நம்ம கட்டுப்பாட்ல இருக்கனும். அப்பத்தேன் பணம் இன் டைம் கைக்கு வரும். மார்க்கெட்ல நாம நிக்க முடியும்.

ஒரு கட்டத்துக்கு மேல பணம் இல்லாமலே நம்ம காரியங்கள் நடக்கனும்னா அந்த கட்டம் வரைக்கும்  நம்ம வரவு செலவெல்லாம் பக்காவா இருந்திருக்கனும்.

வெறும் பணத்தை வச்சு பணம் சம்பாதிக்கிறது ஒரு பக்கம்னா மார்க்கெட்ல நாம ஏற்படுத்திக்கிட்ட "நற்பெயர்" (குட் வில்) நம்ம பண வேட்டைக்கு பக்க பலமா இருக்கனும். அப்பத்தேன் வெற்றிக்கொடி கட்ட முடியும்.

என்.டி.ஆர் விடியல் 3.30 க்கு இன்டர்வ்யூ கொடுப்பாருன்னு சொன்னேன். ஏன் அப்படி செய்யனும் ? விஷயமிருக்கு. தன் பாடி மைண்ட் இத்யாதிய தன் கட்டுப்பாட்ல வச்சுக்க தியானம்,யோகான்னு செய்ய நேரம் வேணம் இல்லை.

நமுக்கு எத்தனையோ பெரீமன்சங்களோட பழக்கம் உண்டு. அதுல உடல் நலம் தொடர்பான நெல்ல பழக்கங்களையும் பார்த்திருக்கம்.கெட்ட பழக்கங்களையும் பார்த்திருக்கம்.அந்த பழக்கங்களால அவிகளுக்கு ஏற்பட்ட பாரிய  லாப நஷ்டங்களையும் கண்கூடா பார்த்திருக்கம்.அந்த அனுபவத்துலதான் சொல்றேன்.

சுவரை வச்சுத்தான் சித்திரம் -ஹெல்த் ஈஸ் வெல்த் ங்கறதெல்லாம் ச்சொம்மா பேச்சில்லை. ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி கழு நீர் பானையில விழுமாம் துள்ளின்னு நாமளே அப்பப்போ ரூட்டு மாறி  பல்பு வாங்கியிருக்கோமில்லை. பட்டுத்தானே சொல்றோம்.

தொழில்/வியாபாரத்துல இறங்கிறதுக்கு மிந்தியே பாடியை ட்யூன் பண்ணி வச்சுக்கிட்டா புதுசா வந்த பிரச்சினை எது? தொழிலால வந்த பிரச்சினை எதுன்னு பட்டுன்னு தெரிஞ்சுக்கலாம். தொழில் ஓட்டத்துல இருக்கும் போது டாக்டருக்கு செலவழிக்க காசிருந்தும் - நேரம் இல்லாததால நோயை முத்த விட்டு டிக்கெட்டே போட்டுட்ட பார்ட்டியெல்லாம் இருக்கு.

பணம் வேணம்னா தொழில் செய்யனும்.தொழில் செய்தா வெறுமனே காசு பணம் மட்டும் வராது . நோய்களும் வரும்.பாடி காட்பாடியா இருந்தா மைண்டு கனடா ரேஞ்சுலயா வேலை செய்யும்? ஊஹூம். 

 பாடில நடக்கிறது ரெண்டு காரியம் . அசிமிலேஷன்,எலிமினேஷன். அசிமிலேஷன்னா ஆக்சிஜனை சுவாசிக்கிறது,லாலா ( தண்ணீர் பாஸ்) குடிக்கிறது, புவ்வா திங்கறது எலிமினேஷனுன்னா கார்பண்டை ஆக்சைடை வெளிய விடறது, மூச்சா போறது,கக்கா போறது.

இந்த காரியம்லாம் பக்காவா நடந்தா நோயே வராது. ஆனால் எப்படியா கொத்த ஹெல்தி பாடியிலயும் தினசரி கொஞ்சம் போல மஷ்டு சேர்ந்துக்கிட்டே தான் இருக்கும்.

இதுக்கு காரணம் நம்ம சுவாசம் ஆழமா இருக்கிறதில்லை (சிந்தனை வேகம், சிந்தனை போக்கை பொருத்து சுவாசமும் மாறும் -சுவாசத்தை பொருத்து சிந்தனை வேகம்,சிந்தனை போக்கு மாறும் - நோ திஸ் பாய்ண்ட் யுவர் ஆனர் ! )

காத்துல பொல்யூஷன் இருக்கலாம். தாளி சிக்னல்ல பன்னெண்டு நிமிசம் நின்னா போதும் லங்ஸுல ஒட்டடை படியும். அரை மணி நேரம் நின்னா ஓட்டைதான் தான் தெரியும்ல?.

தண்ணி சுத்தமானதா இல்லாம இருக்கலாம். போதுமான அளவு குடிக்காம இருக்கலாம். (முக்கியமா பெண்கள் இவிகளுக்கு பப்ளிக் யூரினல்ஸ் இல்லாததால மூச்சா போற தொல்லைய அவாய்ட் பண்ண லாலாவே குடிக்க மாட்டாய்ங்க)

அடுத்தது புவ்வா. வேளையறிந்து,வேலையறிந்து ,பசியறிந்து சாப்பிடனும்.கலப்புணவா இருக்கனும். ஃபைபர் இருக்கனும் ( நார் சத்து) உப்பு காரம் ,புளி,இனிப்பு குறைவா இருக்கனும்.

பச்சையா தின்னா 100% சேஃப். வேக வச்சு சாப்பிட்டா 80% சேஃப். தாளிச்சா 60% சேஃப். வதக்கினா 40% ,எண்ணெயில பொறிச்சா தாளி அது விசம். அதுலயும் கையேந்தி பவன் கஸ்மால எண்ணெயில பொறிச்சிருந்தா கடுமையான விஷம்.

நம்ம பாடியெல்லாம் சோலார் பேட்டரி மாதிரி . நமக்கு சார்ஜ் கிடைக்கிறது சூரியன்லருந்துதான். சூரியன் மறைஞ்சா நமக்கும் பேட்டரி லோவாயிரும். பகல் பொழுது இருக்கக்கூடிய ஈகோ,தன்னம்பிக்கை,கொள்கை பிடிப்பு சூரியன் மறைஞ்ச பிறவு இருக்காது.

அதனால முடிஞ்சவரை சூரியனோடயே நாமும் வேலைய ஆரம்பிச்சுரனும். ( நைட் ட்யூட்டி / ராத்திரி யாவாரக்காரவுகளுக்கு இதை சொல்லலை)

நாம ராத்திரியும் வேலை பார்த்திருக்கம்.விடியல்லயும் வேலை பார்த்திருக்கம். ராத்திரி வேலை கட்டை வண்டி. விடியல் வேலை விமானம் மாதிரி விர்ருங்கும். எப்போ தொட்டோம் எப்போ முடிச்சோம்னே தெரியாது.  சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு.எடுத்தா எடுங்க உட்டா உடுங்க.

அடுத்தது மைண்டு.

பணம்னதுமே மைண்ட் ப்ளாக் ஆயிரும். கொய்யால பணம் என்ன புலிப்பாலா? அல்லார் கையிலயும் பணம் கீது. உன் கிட்ட பணமா மாத்திக்க கூடிய  பல விஷயங்கள் இருக்கு.  பணம் வச்சிருக்கிறவனுக்கு என்னெல்லாம் தேவைப்படும் - அவனுக்கு தேவைப்படறாப்ல நம்ம கிட்டே என்னா மேட்டரு கீதுன்னு பார்த்துக்கிடனும்.பணம் பண்ணனும்னு முடிவு பண்ணனுமே தவிர பணம் பண்றது ரெம்ப சிம்பிள்.

தலை முறை தலை முறையா  நிறைய சனம்   நினைச்சிட்டிருக்கிறது என்னடான்னா பணம்ங்கறது தேவைக்கு மேல இருந்தா இம்சை -அதை நாம காப்பாத்தனும் - பணம் சம்பாதிக்கிறவன் எவனும் நிம்மதியா இல்லை. நிறைய பணம் பண்றது ஆஸ்பத்திரிக்கு செலவழிக்கத்தான். இப்படி நிறைய பிரமைகள் இருக்கு.

இதெல்லாம் காத்து வாட்டத்துல சம்பாதிக்கிறவன் , குருட்டு பூனை விட்டத்துல பாய்ஞ்ச கதையா பண வேட்டையில இறங்கினவன் விஷயத்துல தான் கரெக்டு.

ஒரு Game கணக்கா .. ஒரு சதுரங்கம் கணக்கா விளையாடறவுக விஷயத்துல இந்த இழவெல்லாம் கிடையாது. ஏற்கெனவே ஆரம்பத்துல சொன்னாப்ல வாழ்வியல் தேவைக்கான பணத்தை புரட்டறச்ச நம்ம தேவை நம்மை யோசிக்க விடாது. யோசிக்காம செய்ற எந்த காரியமும் உருப்படாது.

பணவேட்டைக்கு புறப்படறச்ச பாடி மைண்டு ரெண்டு மட்டும் கரீட்டா இருந்தா போறாது பாஸு.. ஆயுதம் இருக்கனும். கவசம் இருக்கனும். ரத,கஜ,துரக ,பதாதிகள் இருக்கனும். இதை எல்லாம் நாளையிலருந்து பார்ப்போம்.

Comments