பணம் பணம் பணம்: 24

அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!

தொழிற்களம் மூலமாக 24 ஆவது நாளில் உங்களை சந்திக்கிறேன். கடந்த பதிவுல பண வேட்டைக்கு பாடிய,மைண்டை தயார்படுத்துறதை பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன்.

மனம் ஒன்றானால் மந்திரம் எதுக்கும்பாங்க. மனதை குவிக்கனும். சூரிய கதிர்கள் எல்லா இடத்துலயும் விழுது. அதனால எதையும் எரிக்க முடியறதில்லை. இதுவே நீங்க குறுக்கால ஒரு அஞ்சுரூவா லென்ஸை வச்சிங்கனா காகிதம் பொசுங்கும். தீக்குச்சி வச்சா பத்தி எரியும்.

ஒளி வேகத்தை கூட கால்குலேட் பண்ணிர்ராய்ங்க.ஆனால் இந்த மனித மனதில் தோன்றி மறையும் எண்ணங்களின் வேகத்தை ஆரும் கணக்கிடவே முடியாது. அதனாலதேன் மனோ வேகம்ங்கற வார்த்தையே உபயோகத்துல இருக்கு.

வேகம் சரி. ஆனால் பயணம் ஒரே இலக்கை நோக்கி நடக்கனும்ல.அப்பத்தானே "ஊர்போய் சேர முடியும்". எண்ணங்கள்ள ரெண்டு விதம் உண்டு. ஆணி வேர் மாதிரி ஒரு எண்ணம் இருக்கும். அந்த ஆணி வேரை ஒட்டி பக்க வேர்,பக்கவேர்லருந்து சில்லி வேருன்னு கிளம்பும்.

நாம செய்யவேண்டியதெல்லாம் ஆணி வேரை ஆராய்ச்சி பண்றதுதேன்.   நாம செய்யறதோ பக்க வேர்களை பத்திக்கிட்டு பாழா போறோம்.சில்லி வேர்களை கேட்ச் பண்ணிக்கிட்டு சில்லியா தோத்து போறோம்.

நம் எண்ணங்களின் ஆரம்ப ஸ்தலம் எதுன்னு புரிஞ்சுக்கனும். என்னை கேட்டா அச்சானியமா ஓருயிர் ஓருடல் நிலைக்கு திரும்பறது -அதுக்கு தடையா இருக்கிற உடல்களை உதிர்த்துக்கறது.

சைக்காலஜிய கேட்டிங்கனா கொல்வதும் -கொல்லப்படுவதும்னு சொல்லும். அதிருதுல்ல.. ஆனால் உண்மை இதான்.

ஆனால் மன்சன் அடிப்படையிலயே பயங்கர ஹிப்பாக்ரட் .அதனால அசலான காரியத்துல இறங்கமாட்டான். அசலுக்கு நகலான காரியங்கள் தான் அவனை கவரும். மரணத்துக்கு மாற்று செக்ஸில் உச்சத்தின் போது கிடைக்கும் ப்ளாக் அவுட். அதுக்கு  மாற்று பணம்.

பணம் வந்தா "பலானது" கிடைக்கும்ங்கற உள்ளார்ந்த நம்பிக்கை தான் மன்சங்களை பணம் பின்னாடி துரத்துது. ஆனால் பணம் இவனை கவர இன்னொரு காரணம் இருக்கு. அது இன்னாடான்னா செக்ஸில் போலவே " பணத்தாலும்  படைக்க முடியும்.

நம்மாளுதான் ஹிப்பாக்ரட்டு பயந்தாங்கொள்ளிங்கறனே அவன் பணத்தை தேடறது மரணத்தை செயிக்க -ஆனால் அவன் மரணத்தை சைட்ல விட்டுட்டு மரணத்தோட நிழல்களான இருட்டு -தனிமை -தூரம் -நிராகரிப்பு இதுக்கெல்லாம் எதிரா போராட பணத்தை செலவழிக்கிறான்.

பணம் பெட்ரோல் மாதிரி ச்சொம்மா வச்சிருந்தாலே ஆவியாயிரும். செலவழிக்க ஆரம்பிச்சா என்னாகும்?
உங்க அடிப்படை எண்ணம் /ஆணி வேரா இருக்கிற எண்ணம் படைத்தல் -விரிவடைதல் -வியாபித்தல் -வெளிச்சத்துக்கு வருதல் - மக்கள் கூட்டத்தை உங்கள் பால் கவர்தல் இதெல்லாம் செய்தா மரணத்தை ஏமாத்திரலாம் - அது முடியாத பட்சம்  மரணத்தை மறந்திருக்கலாம்ங்கறது உங்க சப் கான்ஷியஸ் தாட்.

இதை நீங்க ஏத்துக்கிடனும். அப்பத்தேன் பண வேட்டைக்கு உங்க மைண்டு ட்யூனாகும்.

கோடிகள் ஈட்டி வச்சிருக்கிற கோமான் கூட நாலணா தினசரியில நாலு பக்கம் விளம்பரம் தரான்.அதனால சல்லி பிரயோசனம் இல்லைன்னு தெரிஞ்சும்.ஏன்? தான் தனியில்லை - இருட்டில இல்லைன்னு காட்டிக்கத்தேன். பய புள்ளைங்க கக்கூஸுல கூட செல் பேசி மாயறாய்ங்க. ஏன் தான் தனியில்லைன்னு தன்னை தான் நம்ப வைக்கத்தேன். பெரிய மன்சங்க வீட்டண்டை பாருங்க செக்யூரிட்டி காரணங்களுக்காக வெளிச்சம் போட்டா பரவால்லை.ஆனால் செக்யூரிட்டியே தேவைப்படாத பார்ட்டிகள் கூட ஃப்ளட் லைட் வச்சிருப்பான்.

ஆக ஒவ்வொரு மன்சனுக்கும் பணம் பண்ற துடிப்பு இருக்கு. நமக்கு அந்த எண்ணம்லாம் இல்லிங்கன்னு ஆருனா சொன்னா ஒன்னு அந்தாளு பொய் சொல்லனும் அல்லது தன் சிந்தனைகளின்   ஆணி வேரை டச் பண்ணியே இருக்க மாட்டாரு.

நீங்க பண வேட்டையில இறங்கலினாலும் கொல்லுதல் -கொல்லப்படுதல் நடந்தே தீரும்.ஐ மீன் சைக்கலாஜிக்கலா.

பண வேட்டையில இறங்கினா பைசா கிடைக்கும். மரணத்தை வெல்ல முடியலின்னாலும் முதுமையை ஒத்திப்போடலாம். மரணத்தோட நிழல்களோட யுத்தம் பண்ணலாம். பலானதும் கிடைக்கலாம் ( ஐ மீன் கண்ணால மார்க்கெட்ல கிராக்கி பெருகும்ங்கறேன்)

எல்லாத்துக்கும் மேல வாழ்க்கையின் இதர செயல்பாடுகள்ள கொல்லுதல் -கொல்லப்படுதல் தவிர்க்க பட்டுரும்.

ஆக பண வேட்டை லாபமா இல்லையா? இதுல எதுனா தப்பு கீதா? எதுனா நஷ்டம் கீதா? இல்லை.. இல்லை ...இல்லவே இல்லை.

இதுல என்ன ஹிப்பாக்ரசி? இதுல என்ன தயக்கம்?  ஓஷோ சொல்லுவாரு.கரன்சிங்கற வார்த்தை கரண்ட் என்ற வேர் சொல்லருந்து வந்ததாம். கரண்டுன்னா பவர் மட்டும்  இல்லிங்கணா. கரண்ட்டுன்னா ஓடிக்கிட்டே இருக்கிறதுன்னு அருத்தம்.

பணம் ஓடிக்கிட்டே இருக்கனும். நீங்க பணவேட்டையில இறங்கினா அந்த ஓட்டத்தை உங்கள் பக்கம் ஈர்த்து உங்ககிட்டேருந்து ஓட விடலாம்.

உலகத்துல மெஜாரிட்டி சனம் அடுத்தவகளோட செயலை விமர்சிச்சுக்கிட்டே காலத்தை ஓட்டிர்ராய்ங்களாம். ( கெட்ட கெட்ட வார்த்தையில பல  பளமொளி இருக்கு.. சொல்லிரலாம்.வேணா வெட்டிருவாய்ங்க )

தப்பி தவறி .. ஒருத்தர் ரெண்டு பேர் தான் எதையோ செய்றாய்ங்க. அந்த ஒருத்தர் ரெண்டு பேர்ல நீங்க ஒருத்தரா இருக்கனும்னுதேன் மன்னாடறேன்..

அடுத்தது தொடர்பதிவின் இடையில அப்சர்வேஷன் - முதலீடு - விளம்பரம் -லேபர் ப்ராப்ளம் டெசிஷன் மேக்கிங்னு வரிசையா பார்த்துக்கிட்டு வந்தம்.படக்குன்னு  பாடி ,மைண்டை சரியா ட்யூன் பண்ணிக்காத பார்ட்டி அது காரணமாவே பல்பு வாங்கிட்டா எப்படின்னு ஒரு பதட்டம் அதனாலதேன் மலையாளபடத்துல பிட்டு கணக்கா இடையில செருக வேண்டியதாயிருச்சு.

இப்பம் வரிசைக்கு போயிரலாம்.  அடுத்து வர்ரது  ட்ரபுள் ஷூட்டிங். இதைபத்தி நாளைக்கு பார்ப்போம்

Comments

  1. அருமையான தொடர் தொடருங்கள்

    ReplyDelete
  2. வாங்க ராசா !
    உங்களை போல ராஜ பாட்டையா இல்லாட்டியும் சைக்கிள் கேப்ல தொடர்ந்துக்கிட்டு தான் வரேன்.

    வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்