பணம் பணம் பணம் : 25

அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !
கடவுள் /இயற்கை பல விஷயங்கள்ள பராபட்சம் காட்டுது.  பல விஷயங்கள்ள நம்ம மத்தியில  வித்யாசம் பார்த்து தான் எல்லாத்தையும் கொடுத்திருக்கு. சிலர் அமிதாப் உயரம்.சிலர் கிங்காங் உசரம். சிலர் கமல் மாதிரி கலரு. சிலர் கருப்பா பயங்கரமா -சிலர் பயங்கர கருப்பா. இப்படி நமக்குள்ள ஆயிரம் வித்யாசங்கள் இருக்கு.

ஆனால் ஒரே ஒரு விஷயத்துல இயற்கை சமதர்மத்தை ஃபாலோ பண்ணியிருக்கு.அது என்னடான்னா எல்லாருக்கும் -ஒரே மாதிரி - ஒரே ஒரு  24 மணி நேரத்தை தான் கொடுத்திருக்கு.

இதை ஒழுங்கு மரியாதை ப்ரொடக்டிவா உபயோகிச்சுக்கிட்டா மத்த அசமானங்களையெல்லாம் அஸ்தமிக்க செய்துரலாம். ஆனால்  நாம என்ன பண்றோம்?

ஒரு தாட்டி ஒரு ப்ரைவேட்எலக் க்ட்ரிக்கல் வைர் மேன்  ட்ரேட் யூனியனுக்கு பி.ஆர்.ஓ வா வேலை பண்ற வாய்ப்பு கிடைச்சது . அதாவது அவிக கூப்பிட்ட நேரம் போயி என்ன ஏது கேட்டு ஆவன செய்யனும்.  எதுனா லெட்டர் கிட்டர் தேவைன்னா ட்ராஃப்ட் பண்ணனும்.அக்கேஷ்னலா எதுனா ஆஃபீஸ் கீஃபீஸ் போக வேண்டியிருக்கும். ஆக்சுவலா நாம தெலுங்கு தினசரிக்கு ரிப்போர்ட்டரா இருக்கம். அதான் மெயின் சோர்ஸ்.

ஏற்கெனவே இருந்த யூனியனுதான். நிர்வாகம் மாறினதால இந்த பி.ஆர்.ஓ எட்செட்ரா பந்தா. பத்து மணிக்கு வரச்சொல்வாய்ங்க. ஆரம்பத்துல 9.45 க்கெல்லாம் போயிருவன். வரவேண்டியவன்லாம் வந்து சேர அரைமணி நேரமாகும். எல்லாம் வந்ததும் டீ சொல்லுவாய்ங்க. டீ வர்ரதுக்கு அரை மணி நேரம் ஆகும். அப்பாறம் தம்மு. கொய்யால இதான் உங்க ஸ்டைலான்னுட்டு 2 மணி நேரம் லேட்டா போக ஆரம்பிச்சம்.

அடிச்சு பிடிச்சு புறப்பட்டா சந்திக்கவேண்டிய  ஆஃபீசர் பிசியா இருப்பாரு. உடனே இன்னொரு டீ சாப்பிடலாம்ம்பாய்ங்க. மறுபடி டீ சிகரட். எல்லாம் முடிச்சுட்டு போறதுக்குள்ள எதிர்க்க ஆஃபீசர் வண்டி வரும்.  இந்த சின்ன மேட்டரால யூனியனே பாடாவதியாயிருச்சு.

1987 ல ஐ மீன் 20 வயசுல புதுசுன்னு ஒரு  பத்திரிக்கை  ஆரம்பிச்ச பார்ட்டி நாம. மொத இஷ்யூ 4 பக்கம் ரேப்பர் - 4 பக்கம் மேட்டர் .  அந்த வயசுக்கு உள்ள டைவர்ஷன்ஸ் எல்லாத்தையும் மீறி அந்த காலத்துலயே விளம்பரம்லாம் பிடிச்சு ஆறு /ஏழு இஷ்யூ நடத்தினம். (கடைசி இஷ்யூ போடறச்ச ரேப்பர் இல்லாம அடிஷ்னலா 16 பக்கம் போட்டோம்னா பார்த்துக்கங்க)

இடையில தெலுங்கு தான் மெஜாரிட்டி தெலுங்குல போட்டாதான் ஆச்சுனு ஒரு அச்சு பிச்சு கலக்கி விடவே அகல கால் வச்சு ப்ராஜக்ட் ஊத்திக்கிச்சு அது வேற கதை. அந்த அச்சு பிச்சு தெலுங்கு சினிமா ஃபீல்டுல ஒரு ரவுண்டு வந்து 100 வருசத்துக்கு பேசறாப்ல நல்ல படம் பண்றேன்னு டிவி சீரியல் பண்ண ச்சொம்மா வந்த காசெல்லாம் ச்சொம்மா வந்து போண்டி.

2003 ல மறுபடி பத்திரிக்கை ஆரம்பிச்சா என்னன்னு ப்ளான் பண்ணி 4 வருசம் வெறும் சோசியம் ,ஆன்மீகம்,விளம்பரத்தை வச்சு காலத்தை ஓட்டினம் . ( பேப்பர் விற்கிறதில்லை -இலவச வினியோகம் / வருமானம்? விளம்பரத்துல தேன்) 2007 ல அரசியல் சேர்த்து 2009 ல மல்ட்டி கலர் ஆக்கிட்டம்.

இந்த வெற்றிக்கு என்ன காரணம்?

நம்ம ஊர்லயே இன்னொரு பார்ட்டி இதே மெத்தட்ல அட்வர்ட்டைஸ்மென்ட் பேஸ்டு /ஃப்ரீ இஷ்யூ  மல்ட்டி கலர் பத்திரிக்கை நடத்திக்கிட்டிருந்தது.ஆனால் லேட்டஸ்டா நாம 6 பக்கம் போட்டோம்.அந்த பார்ட்டி ரெண்டு பக்கத்துக்கு வந்தாச்சு.

இந்த தோல்விக்கு என்ன காரணம்?

நாம ராப்பூரா கண்விழிச்சு வேலை செய்தாலும் விடியல் 6 மணிக்கு தூங்க போனாலும் எந்த ராஜா எந்த பட்டணத்துக்கு போனாலும் காலை 10 க்கெலாம் குளிச்சு முழுகி ரோட்ல இறங்கிருவம்.

அந்த பார்ட்டி மதியம் 12 மணிக்கு எந்திரிச்சு 2 மணி வரைக்கும் டீக்கடையில 5 பேப்பர் படிச்சு - அரைடஜன் டீ - அரை பாக்கெட் சிகரட் அடிச்சு ஊட்டுக்கு போயி ரெடி ஆயி 3 மணிக்கு லஞ்ச அடிச்சுட்டு ரோட்டு வரும்.

சின்ன மேட்டருதான்.ஆனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறதா போச்சு.

பெரியவுக வைகறை துயிலெழுன்னு சொல்லியிருக்காய்ங்க. ( கால் சென்டர்ல வேலை பார்க்கிறவுகளுக்கு இது பொருந்தாதுன்னு வைங்க)  உசுரு இல்லாத கம்ப்யூட்டரை எடுத்துக்கங்க  ரெண்டு மணி நேரம் பெண்டு கழட்டினா பம்ம ஆரம்பிச்சிருது. ரீ ஸ்டார்ட் பண்ணாதான் பழைய வேகம் வருது.

மனித உடல் ரெம்ப சூட்சுமமானது.மூளை அதை விட சூட்சுமம். இதை சகட்டு மேனிக்கு இம்சை பண்றோம். இது  ஒரு எட்டுமணி நேர  ஓய்வுக்கு பிறகு  தன்னோட முழு வீச்சுல வேலை செய்யற நேரம் விடியல்.

அந்த நேரத்தை நம்ம தொழில் தொடர்பான விசாரணைகள் -  சந்திப்புகள் - திட்டமிடல் -பயணங்களுக்கு உபயோகிச்சா  வெற்றி வாய்ப்பு நிச்சயம் கூடும்.

அதுக்குன்னு எதிராளி காலை 10 மணிக்கு எந்திரிக்கிறவன் தெரிஞ்சும் விடியல் நாலு மணிக்கு போயி க்டுப்பேத்திராதிங்க. 

பண வேட்டையில நம்ம வசதியை விட எதிராளியோட வசதிதான் ரெம்ப முக்கியம். அவருக்கு திருப்பதி லட்டு பிடிக்கும்னா லட்டோட போகனும். பெரியாரை பிடிக்கும்னா பெரியார் கேரிகேச்சரோட போய் பார்க்கனும்.

நான் ஒன்னும் 24 மணி நேரமும் பணப்பித்து பிடிச்சு அலைய சொல்லலை.  அதுக்குன்னு போதும் என்ற மனமே பொன் செய் மருந்து -அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுன்னுட்டு ஹிப்பாக்ரசியோட -கடவுள் கொடுத்த நேரத்தை வீணாக்கிக்கிட்டு -சுய மரியாதைய இழந்து வாழவும் சொல்லலை.

" நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்"னுட்டு பட்டுக்கோட்டையார் எழுதி வச்சிருக்காரு.

தூங்கி கெடுத்தாலும் பரவால்லை. பாடி,மைண்டு ரெண்டும் ரெஃப்ரஷ் ஆகும்.  முக நூல் /சரக்கு பார்ட்டி/கவைக்குதவாத ஃபோன் பேச்சு/டிவின்னு நேரத்தை வீணாக்கறது நம்மை நாமே அவமானப்படுத்திக்கிறது மட்டுமில்லை.

நம்மை நம்பி எல்லாருக்கும் சமம்மா 24 மணி  நேரத்தை கொடுத்த இயற்கையை /கடவுளை கூட  அவமானப்படுத்தறாப்ல தான்.

சம்பாதிக்க முடியும்ங்கற நிலை இருந்தும் - நேரம் இருந்தும் - அதை வீணாக்கிக்கிட்டு  சம்பாதிக்காம இருக்கிங்கன்னா நீங்க நாட்டுக்கு துரோகம் செய்றிங்கன்னு அருத்தம். 

நேரம்ங்கறது பணமா மாத்தப்பட கூடிய ஒரு உன்னதமான விஷயம். உசுரே இல்லாத இன்டர் நெட் கனெக்சன் உள்ள கம்ப்யூட்டர் ஒரு மணி  நேரத்துக்கு ரூ.25 சம்பாதிக்குது.  அந்த கம்ப்யூட்டரை - நெட் ஒர்க்கிங்கை - ப்ராண்ட் பாண்ட் கனெக்சனை எல்லாம் கண்டுபிடிச்ச மன்சன் ச்சொம்மா இருந்தா அது அவமானமில்லையா?

ஓய்வும் உழைப்பும்  ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புள்ள விஷயங்கள். நீங்க போதுமான ஓய்வை பெற்றால் புத்துணர்ச்சியோட உழைக்க முடியும். புத்துணச்சியோட உழைச்சிங்கனா அம்சமா ஓய்வெடுக்க முடியும்.

அடுத்த பதிவுல பணவேட்டையில் மற்றொரு முக்கிய தடைக்கல்லை தகர்க்க பார்ப்போம்..


Comments