பணம் பணம் பணம் : 26


அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!

கடந்த அத்யாயத்துல பண வேட்டைக்கு தடையா இருக்கக்கூடிய இன்னொரு அம்சத்தை சொல்றேன்னு சொல்லி நிப்பாட்டியிருந்தேன். அதை இன்னைக்கு பார்த்துருவம்.

தலையில சுமந்துக்கிட்டு போயி தெரு தெருவா ஜாடி விக்கிறவன் ஒருத்தன் இருந்தான். ஒரு நாள் மதியம் அளவு சாப்பாடு சாப்பிட்டுட்டு சாலையோர மரத்தடியில அப்படீ.. கண் அசந்தான். சின்னதா ஒரு கனவு. ஒரு அரசியல் வாதியோட சின்ன வீட்டுக்கு பிறந்த பெண் இவனை லவ்ஸ் பண்றாப்ல ஆரம்பமாச்சு. அவள் இவனை சேஸ் பண்ணி சேஸ் பண்ணி லவ் பண்றாள். நம்மாளு தமிழ் சினிமா ஹீரோ கணக்கா கழண்டு கழண்டு போறாரு. கண்ணாலமாச்சு (கனவுலதேன்)

ஒரு நாள் மதியம் சாப்பாட்டுக்கு வராரு. அன்னைக்கு பார்த்து வீட்டம்மாவுக்கு உடம்பு சரியில்லை.ஒரு ஹோட்டல்ல இருந்து அளவு சாப்பாடு வரவழைச்சு வச்சுட்டு படுத்திருந்தாய்ங்க. நம்மாளுக்கு வந்ததே கோவம். எட்டி விட்டான் ஒரு உதை.  நம்மாளு வித்து வவுத்த கழுவ வேண்டிய ஜாடியெல்லாம் பொளேர்.

இது நேர்மறை எண்ணம் உச்சத்துக்கு போனா நடக்கிற கதை.

நம்மாளு ஒருத்தரு ஆயத்த ஆடை (ரெடிமேட் கார்மென்ட்ஸ் )  வியாபாரம் பண்றாரு.  லேடீஸ் டெய்லர்கள் தேவைன்னு கம்ப்யூட்டர்ல ஏ4 சைஸுல  ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து கொடுப்பான்னாரு . மேட்டரை அடிச்சு முடிக்கிறதுக்குள்ளயே புலம்பல்.

கையில முதல் இருந்தா வேலை இல்லை. வேலை இருக்கும் போது முதல் இல்லை.ரெண்டும் இருந்தா வேலையாள் இல்லை.

நாம தான் மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ் (?)  ஆச்சே ஒடனே  ஒரு சஜசன் விட்டோம்.

" இப்படி ப்ரிண்ட் அவுட் எடுத்து டீக்கடையிலயோ -சலூன்லயோ வச்சா எத்தனை பேரு வந்துரப்போறாய்ங்க. நமக்கு 10 பேர் தேவைன்னா 20 பேரை அப்பாய்ண்ட் பண்ணிக்கிட்டு அவிகளுக்கு வேலை /கூலி கொடுக்கவாச்சும் வியாவாரத்தை பெருக்கினாதானே 10 பேராச்சும் நிலையா நிப்பாய்ங்க.

டவுன்ல உள்ள -வேலை தெரிஞ்ச எந்த லேடீஸ் டெய்லராவது மாச சம்பளத்துக்கு வருவாய்ங்களா? கிராமத்து பக்கத்துலருந்து கொண்டு வந்து தங்க இடம் கொடுத்து வச்சு வேலை வாங்க வேண்டியதுதானே"

ஒடனே பார்ட்டிக்கு கோவம் வந்துருச்சு ." யோவ் .. நான் நிம்மதியா இருக்கிறது புடிக்கலியா?  எட்டு மணி நேரம் ஒன்னா வேலை செய்ய விட்டாலே ஆயிரத்தெட்டு பஞ்சாயத்து இதுல வீடு புடிச்சு 24 மணி நேரம் ஒன்னா வைக்க சொல்றியா.. எவளாச்சும் எவனையாச்சும் கூட்டிக்கிட்டு ஓடிப்போவட்டும் -இல்லைன்னா தூக்கு மாட்டிக்கிட்டு சாகட்டும் - இல்லே தொழிலே நடத்தி தொலையட்டும் .. ஒனக்கென்ன ..நான் தானே  மாட்டிக்கினு சாக போறேன்னு"  புலம்பி தள்ளிட்டாரு.

இது எதிர்மறை எண்ணங்களோட உச்சம்.

பண வேட்டையில வெற்றிய எட்டிப்பிடிக்க இது ரெண்டுமே உதவாது. ஆனா ரெண்டும் முக்கியம் . என்ன குழப்பறேனா?

திட்டம் தீட்டும் போது  நேர் மறை எண்ணங்களோட தீட்டனும். அதை புனராய்வு செய்யும் போது எதிர்மறை எண்ணங்களோட  திட்டத்தில் உள்ள குறைகளை நமக்கு நாமே விமர்சிக்கனும். குறைகளை தீர்க்க தேவையான மாற்று திட்டங்களை தீட்டனும். முக்கிய திட்டத்தோட ஒருங்கிணைக்கனும்.

திட்டம் தீட்டியாச்சு - புனர் ஆய்வு செய்தாச்சு - குறைகளை கண்டு மாற்று திட்டம் தீட்டி முக்கிய திட்டத்தோட ஒருங்கிணைச்சாச்சு. ஓகே.

இது எதை  முன்னே செய்யனும் எதை  பின்னே செய்யனும்ங்கறதை முடிவு பண்றது ரெம்ப ரெம்ப முக்கியம்.

நம்மாளு ஒருத்தரு திருமண தகவல்  நிலையம் ஆரம்பிச்சாரு ( மேரேஜ் ப்யூரோ ) ஒரு சில ஃபார்ம்ஸ் ப்ரிண்ட் பண்ணதோட சரி.  முகவர்கள் தேவைன்னு நியூஸ் பேப்பர்ல வரிவிளம்பரம் விட்டாரு.

எத்தனை பேரு வருவாய்ங்க? அதுல எத்தீனி பேரு தேறுவாய்ங்க?ங்கறதையெல்லாம் ரோசிக்கவே இல்லை. என்னமோ நூத்துக்கணக்குல வ்ந்துரப்போறாய்ங்கங்கறாப்ல கார் ஷெட்டை ஆஃபீஸாக்கி - அதுக்கு இரும்பு கேட்டு என்ன? காம்பவுண்டு என்ன? கார்டன் என்ன?  முதல்வர் ஆய்வு கூட்டம் கணக்கா பயங்கர அலப்பறை.

விளம்பரத்தை பார்த்து வந்தவுக அரைடஜன் பேர் கூட இல்லை. அதுல ஆருமே பத்து நாள் கூட தாக்கு பிடிக்கலை. தி.த.நிலையம் ஊத்திக்கிச்சு.எதை  முன்னே செய்யனும் எதை  பின்னே செய்யனும்ங்கறதை சரியா முடிவு பண்ணாத ஒரே காரணத்தால கை காசு மொத்தம் கரைஞ்சு போயி திட்டமே தோத்துப்போச்சு.

அடுத்து எதுக்கு எவ்வளவு செலவழிக்கனும்?ங்கற சூட்சுமம் தெரிஞ்சிருக்கனும்.

ஆத்துல போடறதா இருந்தாலும் அளந்து போடுன்னு பெரியவுக சொல்லியிருக்காய்ங்க. விஜய் மல்லய்யா கிங் ஃபிஷர் காலண்டர் ஒன்னு போடுவாரு. ஞா இருக்கா? ஒவ்வொரு வருசமும் காலண்டருக்காக அவிக செலவழிச்ச பட்ஜெட்ல பாதி மிச்சம் பிடிச்சிருந்தா இன்னைக்கு செக் பவுன்ஸ் கேஸே வந்திருக்காது.இந்த மாதிரி அன் ப்ரொடக்டிவ் செலவுகளை தான் பெரியவுக துடைப்பக்கட்டைக்கு பட்டுகுஞ்சம்னு சொல்வாய்ங்க.

இந்த வருசமும் காலண்டர் போடத்தான் போறாய்ங்களாம் . குடிக்க கூழில்லின்னாலும் கொப்புளிக்க பன்னீருன்னா இதான்.

அரசாங்கம் நம்ம  நூலகங்களுக்கு புஸ்தவம் வாங்க காசு  ஒதுக்கும். ரூ 100 ஒதுக்கினா நம்மாளுங்க 90 ரூவாய்க்கு காட்ரெஜ் இரும்பு அலமாரிங்க வாங்கி அடுக்கிருவாய்ங்க. 10 ரூவாய்க்கு காரிகையின் தூரிகை, கவிஞர்கள் (?) பொஞ்சாதி தாலிய அடகுவச்சு பப்ளிஷர்களுக்கு காசு கொடுத்து பதிப்பிச்ச புஸ்தவங்கள வாங்கிருவாய்ங்க.

இதுலயாச்சும் முடிவெடுக்கிற  நூலகருக்கோ - அதிகாரிக்கோ நஷ்டமில்லை.ஆனால் தொழில்ல இந்த மாதிரி முடிவுகளை எடுத்தா நாறிரும்.

மந்திரம் பேரால ஊரை ஏமாத்தறவனை மதி கால் மந்திரம் முக்கால்னு சொல்லுவாய்ங்க. ஆனா இன்னைக்கிருக்கிற ட்ரென்ட்ல சரக்கு கால் விளம்பரம் முக்கால்னு ஆயிருச்சு. இந்த ட்ரென்ட்ல கூட விளம்பரத்துல இருக்கிற முறுக்கு சரக்குல இல்லின்னா அல்லாரும் ஒரு தாட்டி வாங்கி பார்த்துட்டு "தூ" ன்னிருவாய்ங்க

நம்முது டெக்ஸ்டைல் ஷோ ரூமுன்னு வைங்க . இதுல ஸ்டாக் தான் முக்கியம். ஸ்டாக் போதுமான அளவு இருந்து - அதுல நிறம் , தரம் ,ரகம் விஷயங்கள்ள நெம்பர் ஆஃப் சாய்ஸஸ் இருக்கனும். இதான் முக்கியம்.

இதுக்கு 70 சதவீதத்தையும்  முகப்பு - இன்டிரியர்,  ஃபர்னிச்சர்,லைட்டிங்,விளம்பரம் ,தள்ளுபடி  இத்யாதி மத்த விஷயங்களுக்கு  30 சதவீதமும் செலவழிக்கனும்.

இதை தலைகீழா மாத்தினா கொஞ்ச நாளைக்கு ஓடும். அப்பாறம் கவரிங்  நகை மாதிரி பல்லை இளிச்சுரும்.

நம்ம நண்பர் ஒருத்தரு ப்ளாஸ்டிக் குழாய் தயாரிக்கிற யூனிட் வச்சிருந்தாரு.மொத்தமே 10 ' x 10 ' அறைதான். என்னமோ பஞ்சு மிட்டாய் தான் தயாரிக்கிறாய்ங்கன்னு நினைச்சுக்குவாய்ங்க. யூனிட்ல பத்து மூட்டை இருக்கும். அதுல அஞ்சு ரா மெட்டீரியல் - அஞ்சு ப்ராடக்டு. ஒன் மேன் ஷோ.

மார்க்கெட்டிங்குக்கு போறச்ச  லட்ச ரூவா பைக்ல தான் போவாரு. பின்னாடி ஒரு கெட்டுப்போன ஃப்ரெண்டு ( தள்ளு வண்டியில பின் பளு  கணக்கா)

எதுக்கு எவ்வளவு செலவழிக்கிறதுங்கறது தொழில் தொழிலுக்கு மாறும்.

எங்க பக்கத்துல ஒரு மந்திரி மாம்பழக்கூழ் யாவாரத்துல இறங்கினாய்ங்க.அந்த ஜூஸு வர்ர கன்டெய்னரை பார்த்தா பைல்ஸுக்கு உபயோகிக்கிற மருந்து டப்பா மாதிரி இருக்குதே கண்டி  அதை பார்த்தா குடிக்கனுங்கற எண்ணமே வராது.

இந்த தொழில்ல  பழக்கூழ் எவ்ள முக்கியமோ கன்டெய்னர் அதை விட முக்கியம்.ஏன்னா இது தாகத்துக்கோ - பசிக்கோ -  குடிக்கிற விஷயம் கிடையாது. ருசிக்காக  - ஜஸ்ட் ருசிக்காக -ஃபேஷனுக்காக  குடிக்கிற மேட்டரு.

சமீபத்துல கச்சா முச்சான்னு தீவிபத்துகள் நடந்ததை செய்திகளா  பார்த்திருப்பிங்க. சிவகாசி விபத்துகளை தவிர மத்த விபத்துகளுக்கு என்னடா  காரணம்னு கேட்டா எலக்ட் ரிக் ஷாக் சர்க்யூட்டும்பான். மேனேஜரை வச்சுக்கிட்டா சம்பளம் போடனும்னு வேலை வெட்டி இல்லாத மச்சானை மேனேஜரை வச்சிருப்பானுவ. அவன் தனக்கு பத்து ரூவா ஒதுக்கிக்கனும்னு பாய்ண்டுக்கு பத்து ரூவா குறைவா வாங்கற எலக்ட் ரிக்கல் வைர் மேனை ஏற்பாடு செய்திருப்பான்.

அவன் தனக்கு பத்து ரூவா ஒதுக்கிக்க எந்த எலக்ட் ரிக்கல் கடைக்காரன்  தனக்கு பத்து ரூவா சாயந்திரமே தருவானோ அந்த கடையில வாங்கியிருப்பான். சரிய்யான வேலைக்காரன் காசை விட பேருக்குத்தான் முக்கியத்துவம் தருவான். காசை குறைச்சா தரம் குறையும் பேரு கெட்டுப்போகும்னு அந்த வென்சரையே விட்டுக்குவானே தவிர காம்ப்ரமைஸ் ஆகமாட்டான். சுவத்துக்குள்ள போற சாமான் செட்டெல்லாம் நாலாந்தரமா வாங்கிட்டு கண்ணுக்கு தெரியற சாமான் வரைக்கும் ப்ரான்டடா - பள பளன்னு வாங்கிருவான்.

இப்பம் என்னென்னமோ வந்திருக்கு. சில விபத்துகள்ள ஒரு ட்ரிப்பர் அடிஷ்னலா வச்சிருந்தா கூட விபத்தை தவிர்த்திருக்கலாம்.ஆனால் முடிவெடுக்கற பொசிஷன்ல உள்ள பிரகிருதிக்கு எது முக்கியம் -எது முக்கியமில்லைன்னு தெரியாத காரணத்தால் சர்வம் சிவ மயம் அதாங்க சாம்பல் மயமாயிருச்சு.

லட்சக்கணக்கான ரூவாய்க்கு  ஸ்டாக் வச்சிருப்பான்  இன்ஷியூரன்ஸ் இருக்காது . அட நாலஞ்சு பக்கெட்ல மணல் கூட வைக்கமாட்டான். கொய்யால ..லேசா புகை வர்ரச்சயே ஒரு ஃபோன் போட்டு சொல்ல வாட்ச் மேன் வைக்கமாட்டான். வச்சாலும் அவன் கையில தீயணைப்பு துறையோட ஃபோன் நெம்பர் இருக்காது. இருந்தாலும் ஃபோன் இருக்காது..

ஆக எது முக்கியம் -எது முக்கியமில்லை ,எதுக்கு எவ்ளோ செலவழிக்கனுங்கறது பண வேட்டையில முக்கியமான இரண்டு பாடங்கள் .

இன்னைக்கு இது போதும் . நாளைக்கு இன்னம் முக்கியமான பாடங்கள் சிலவற்றை பார்ப்போம். உடுங்க ஜூட்டு..    Get Your Online Business

  • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

    Brand Promotion

  • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com

Comments