பணம்பணம் பணம் : 27

அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!

தொழிற்களம் வலை தளத்துல "பணம் பணம் பணம் "என்ற இந்த தொடர் மூலமா 27 ஆவது அத்யாயத்தோட சந்திக்கிறேன்.

பண வேட்டையில இன்னொரு முக்கியமான அம்சமிருக்கு. அதுதான் "சரி பார்த்தல்" இந்த சரி பார்த்தல்ங்கறது ஒவ்வொரு கணமும் நடக்கவேண்டிய மேட்டரு. முடிவெடுத்தது நாமதேன், அதை அமல் படுத்திக்கிட்டிருக்கிறதும் நாம தேன்.ஆனாலும் ஒவ்வொரு கணமும் சரி பார்த்தல் என்பது நடக்கனும்.

'' ஹாஸ்டல் தினங்கள் '' நாவல்ல சுஜாதா சொல்வாரு "குனிஞ்சா ........அடிச்சிருவாய்ங்க". படிக்க எவ்ள அசிங்கமா இருக்கோ அந்தளவுக்கு யதார்த்தமான மேட்டரு இது.  நாம கிளம்பினது என்னவோ பண வேட்டைக்கு தேன்.  ஆனால் மீன் பிடிக்க  தூண்டில்ல புழுவை வைக்கிற கணக்கா கைப்பணத்தை பணயமா வச்சுத்தேன் பண வேட்டையாட வேண்டியிருக்கு.  புழுவை இழந்தா அது வெறும் புழுவை இழந்ததா அருத்தம் இல்லை. நாம பிடிக்க நினைச்ச மீன்களையும் இழந்ததா தான் கணக்கு.

அதனால ஒவ்வொரு கணமும் அலார்ட்டா இருக்கனும். நம்மாளு ஒருத்தரு வெங்காய மொத்த வியாபாரம். ஹோட்டல்களுக்கும் சப்ளை செய்வாரு. வராத கலெக்சனுக்கு சில சமயம் ஹோட்டல்களுக்கு போகவேண்டியிருக்கும். அப்படி போக வர இருந்தப்போ இவருக்கு ஹோட்டல் மேல ஒரு கவர்ச்சி ஏற்பட்டிருக்கு.

திங்க் ஆஃப் எ டெவில் மாதிரி இன்னொரு நண்பர் வந்து சேர்ந்தாரு. ரெண்டு பேருமா சேர்ந்து ஹோட்டல் ஆரம்பிச்சாய்ங்க. ஒரே ஒரு 3 மாசத்துல ஊத்தி மூடியாச்சு. எங்கே தப்பு நடந்து போச்சுன்னா நம்மாளு தான் எடுத்த முடிவை சரி பார்க்கலை. பார்ட்னரா வந்து சேர்ந்த நண்பரை சரி பார்க்கலை. எந்த ஸ்டெப்லயும் சரிபார்த்தல்ங்கறது நடக்கலை.

தட தடன்னு இறங்கினாய்ங்க. அதிரடியா ஆரம்பிச்சாய்ங்க. ஊத்தி மூடிட்டாய்ங்க. தமிழ் கிரிக்கெட் காமெண்ட்ரில "தடுத்து ஆடினார்" "அடித்து ஆடினார்"னு ரெண்டு வாக்கியம் வரும். சூழல் பிரதிகூலமா இருக்கிறச்ச தடுத்து ஆடனும். சூழல் அனுகூலமா இருக்கிறச்ச அடிச்சு விளையாடனும். கொஞ்சம போல கணக்கை மிஸ் பண்ணாலும் ரன் போச்சு -இல்லின்னா விக்கெட்டே போச்சு.

சரிபார்க்கிறதுங்கறது மொதல்ல நம்ம கிட்டேருந்து ஆரம்பிக்கனும். நம்ம கேரக்டர் என்ன, நம்ம பாடி கண்டிஷன் என்ன, நம்ம தினசரி இயக்கம் என்ன?  நம்ம இயக்கம் உச்சத்துல இருக்கிறது பகல்லயா? ராத்திரியிலயா?  இப்பம் என்ன செய்துக்கிட்டிருக்கம். அடுத்து என்ன செய்யலாம்னு இருக்கோம். அதுக்கு என்னெல்லாம் தேவை? அதுக்கு நாம சரியா வருவமா?

ஆங் ..அதெல்லாம் மாத்திக்கலாம்னு சொல்லப்படாது. மாற்றங்கறது மரணம் மாதிரி.அது எல்லாருக்கும் கை வராது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமான்னு பழமொழியெல்லாம்  இருக்கு. ஞா வச்சுக்கிட்டு ப்ளான் பண்ணனும்.

சிலர் பாடி,மைண்ட் எல்லாத்தையும் ஃப்ளெக்சிபிளா வச்சிருப்பாய்ங்க. அவிக வேணம்னா  தங்கள் இயல்புக்கு ஒத்துவராத மேட்டரை கூட ட்ரை பண்ணலாம்(ஹி ஹி நம்மை போல)  மத்தவுக கண்ணதாசன் சொனனரே "உன்னை அறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்னு" அப்படித்தான் தங்களை அறிஞ்சுக்கிட்டு  போராடவரனும்.

இல்லின்னா எங்க ஊரு சந்திரசேகர் ராவ் மாதிரி சாகும் வரை உண்ணாவிரதம்னு ஆரம்பிச்சுட்டு  3 ஆவது  நாளே ஜூஸ வாங்கி குடிச்சுட்டு நாறிப்போவனும்.

நமக்கு சரியா வரும்னு முடிவு பண்ணித்தான் இறங்கறம். ஆனால் நம்ம செயல்பாடுகளை ஒவ்வொரு கணமும் சரி பார்த்துக்கிட்டே போகனும்.

தப்பா போகுதா .. போனவரைக்கும் போச்சு ஆள விடுங்கடான்னு இறங்கிவந்துரனும். இவ்ள ஆயிருச்சே இன்னம் கொஞ்சம் போய் பார்த்துரலாம்ங்கற நப்பாசை கூடவே கூடாது.

நாம எத்தனையோ விசிட்டிங் கார்டு,லெட்டர் பேட் ,இன்விட்டேஷன் ,பாம்லெட் பார்க்கிறோம். எல்லாத்துலயும் எல்லாமும் கரெக்டாவா இருக்கு ? இல்லை.ஏன்னா சரிபார்ப்புங்கறது நம்ம ஆளுங்க கிட்ட கடியாது.

நான் பார்த்ததுதானே .. இன்னொரு தரம் பார்க்க தேவையில்லை. நாம முடிவு பண்ணதுதானே.. இன்னொரு தாட்டி அதை பத்தி ரோசிக்க தேவையில்லை. இதுக்கு காரணம் ஓவர் கான்ஃபிடன்ஸா இருந்தாலும் - சோம்பலா இருந்தாலும் நஷ்டம் நஷ்டம் தானே..

பண வேட்டையில நாம முக்கியமா சரிபார்க்க வேண்டியது மனிதர்களை . அவன் பார்ட்னரோ? மேனேஜரோ? அக்கவுண்டன்டோ ? சேல்ஸ் மேனோ? சேல்ஸ் ரெப்போ ? அட எடுபிடியா கூட இருக்கட்டும் சரி பார்த்துக்கிட்டே இருக்கனும். கொஞ்சம் போல வித்யாசம் தெரிஞ்சாலும் அலார்ட் ஆயிக்கனும்.

நபர் நல்லவரா இருக்கலாம்.பழக்கம் கெட்டதா இருக்கலாம். நபர் சரியானவரா இருக்கலாம். சேர்க்கை தப்பா இருக்கலாம். போன மாசம் வரை பர்ஃபெக்டா இருந்திருக்கலாம். இந்த மாசம் பத்து வட்டிக்கு கடன் வாங்கியிருக்கலாம். அல்லது பொஞ்சாதி பிரசவத்த்க்கு போயிட்டான்னு பகல்ல குடிக்க ஆரம்பிச்சிருக்கலாம்.

15 வருசத்துக்கு மிந்தி பலசரக்கு கடை வச்சிருக்கிற செட்டியாருங்க நாலு பேரு சேர்ந்து அரசு போக்குவரத்துக்கழக பேருந்து நிலையத்துல ஹோட்டல் நடத்த கோதாவுல இறங்கினாய்ங்க. அதுல ஒருத்தரு ஃபைனான்ஸும் செய்துக்கிட்டிருந்தாரு. அவர் கிட்டே ஃபைனான்ஸ் வாங்கற சைன் போர்டு ஆர்ட்டிஸ்டு கிட்டே போர்டு எழுத கொடுக்கலாம்னு ரெக்கமண்ட் பண்ணாரு. ( மெகா சைஸுங்கோ )

ஆர்ட்டிஸ்டு  பகல் குடிகாரன். காலையில ஹேங் ஓவரோட வருவான். அதுக்கு வைத்தியமா ஒரு குவார்ட்டர் ஏத்திக்கிட்டு படுக்க போயிருவான்.  நல்லா தூங்கிட்டு ராத்திரி 7 க்கு வருவான். ஒரு ரெண்டு மணி நேரம் எந்த வேலை செய்யலின்னா அடிக்க வந்துருவாய்ங்களோ அந்த வேலைகள் வரைக்கும் செய்துட்டு மறுபடி தண்ணி போட்டுக்கிட்டு போயிருவான்.

பேருந்து நிலையம்ங்கறது ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் உள்ள இடம் . இன்னைக்கு வந்தவன் நாளைக்கு வரமாட்டான். போர்டை பார்த்துதான் சனமே வந்தாகனும். ஓப்பனிங்குக்கு கட்டின பேனர் ஒரு வாரத்துல கிளிஞ்சுருச்சு. ஹோட்டல் ஈயடிக்க ஆரம்பிச்சுருச்சு.

சைன் போர்டுக்கு  -லம்பா  அட்வான்ஸ் பண்ணிட்டதால் இன்னொரு ஆர்ட்டிஸ்டையும் பிடிக்க மனசு வரலை. இப்படியே 3 மாசம் ஓடிருச்சு. பார்ட்னர்களுக்குள்ளே சிண்டு பிடி. இதுக்கு ஆரம்பம் போர்டு சமாசாரம் தான். அதுக்கு காரணம் தப்பான செலக்சன்.  சரிபார்ப்பு இல்லாமை.

"உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து"ன்னு வள்ளுவர் சொல்றாரு. அவர் காலத்துல எல்லாரும் அடக்கம் அமரருள் உய்க்கும்னு வாழ்ந்திருக்காய்ங்க. இன்னைக்கு
பெரும்பான்மையான சனம்  சரக்கே தேவையில்லை பில்டப் இருந்தா போதும் வாழ்ந்துரலாம்னு வாழறாய்ங்க.

அதனால இன்னைக்கு மனிதர்களை சரிபார்க்கிறது பெரிய வேலை ஆயிருச்சு. ஒரே ஒரு தப்பான மனிதன் உங்க பண வேட்டைக்கு ஆப்படிச்சுர்ர வாய்ப்பிருக்கு. டேக் கேர்.

இன்னைக்கு சரிபார்ப்புங்கறது ஒவ்வொரு சின்ன மேட்டருக்கும் அவசியம். ஏன்னா உங்களுக்கு அடுத்து அதை சரிபார்க்கிற பொறுப்போ -அக்கறையோ ஆருக்கும் இருக்காது. நஷ்டம் மட்டும் உங்களுக்குத்தேன்..

நாளைக்கு ஒருங்கிணைத்தல்ங்கற மாயாஜாலத்தை பார்ப்போம்.


Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்