பணம் பணம் பணம் : 28அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!
 
தொழிற்களம் வலைதளம் மூலமா உங்களை 28 ஆவது நாளா சந்திக்கிறேன். கடந்த பதிவுகளில் பண வேட்டைக்கு உதவக்கூடிய அம்சங்கள் - தடையாக இருக்க கூடிய அம்சங்களை தனித்தனியா சொல்லிக்கிட்டு வந்தேன். சமீபத்திய  பதிவுல ஒருங்கிணைத்தல்ங்கற மாயாஜாலத்தை பத்தி சொல்றேன்னு சொல்லியிருந்தேன். அதை இன்னைக்கு பார்த்துருவம்.

லைஃப்ல ஒவ்வொரு விஷயத்தையும் பல நூறு விஷயங்கள் சேர்ந்துதான் நிர்ணயிக்குது. நாம ஒவ்வொருத்தரும் அந்த நூறு விஷயங்கள்ள ஒவ்வொரு விஷயத்தை மட்டும் பிடிச்சு தொங்கிக்கிட்டிருக்கம். அதனாலதேன் பண வேட்டை உட்பட சின்ன சின்ன முயற்சியில கூட பல்பு வாங்கறோம்.

உதாரணமா சிலருக்கு ஜோதிடம் ( நாம தொழில் முறை ஜோதிடரா இருந்தாலும் மற்ற எல்லா விஷயங்களையும் ஒருங்கிணைச்சுத்தேன் முடிவெடுப்பம்) -சிலருக்கு வாஸ்து ,சிலருக்கு சைக்காலஜி,சிலருக்கு சகுனம் ,சிலருக்கு அப்பா சொல்ட்டாரு,சிலருக்கு "பலான சாதிக்காரன்லாம்" உத்தமன்,சில சாதிக்காரன்லாம் ஃப்ராடுங்கற எண்ணம் இப்படி பலப்பல.

ஆனால் உண்மையில அடுத்து நடக்க உள்ள விஷயங்களை  மேற்சொன்ன எல்லா விஷயங்களுமே ( ப்ளஸ் 100 விஷயங்கள் )  இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. ஜீன்ஸ்,என்விரான்மென்ட்,பயாலஜிக்கல் க்ளாக், நம்ம உணவு முறை, மனைவி ,குடும்பம்,தெரு, நண்பர்கள் ,நண்பர்களின் நண்பர்கள் , உறவினர்கள்  , அவர்களுடனான நம்ம ரிலேஷன் ஷிப், பெண்கள் விஷயத்துல மாதவிலக்கு சக்கரம், கர்பம் ,பிரசவம் இப்படி அனேக விஷயங்கள்.

இந்த அனேக விஷயங்களை மீறி இன்ஃப்ளுயன்ஸ் பண்ண கூடிய மேட்டர் உயிரின் அடிப்படை கோரிக்கைகளான  : சர்வைவல், இனப்பெருக்கம் ,படைத்தல் மற்றும் பரவுதல் இந்த கோரிக்கைகளை நிறை வேற்றிக்கொள்ளும் துடிப்பு ஒவ்வொரு மன்சன்லயும் இருக்குது.

அவற்றை  நிறைவேற்றிக்கொள்ள அவன் ஃபாலோ பண்ற முறையைத்தான் மேற்சொன்ன அனேக விஷயங்கள் பாதிக்குது. உ.ம் ஜீன்ஸ் - என்விரான்மென்ட் -கல்வி .மத்தபடி ஒவ்வொரு மனிதனுடைய அடிப்படை கோரிக்கையும் மேற்சொன்ன நான்கில் அடக்கம். அவை வெளிப்படும் முறைகள் மட்டும் தான்  வேறு.

தனி மனிதன் எப்பவுமே  சமுதாயத்தை விட வேகமா சிந்திக்கிறான். இயற்கைக்கு நெருக்கமா சிந்திக்கிறான்.ஆனால் சமுதாயம் ரெம்ப ஸ்லோ ..ஏன்னா சமுதாயத்தை வழி நடத்தறவன்லாம் கிழவாடிங்க. அல்லது சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹிப்பாக்ரட்ஸ்.

தன் வேகத்துக்கு சமுதாயம் ஈடு கொடுக்காத சமயம் -தன் உயிரின் அடிப்படை கோரிக்கைகள் இனி நிறைவேறாதோங்கற ஒரு சப் கான்ஷியஸ் முடிவால  ஒரு வித தப்பித்தலுக்கு முயற்சி பண்றான். காதல் ரேஸ்ல கலந்துக்கறது , புது புது விசயங்களை கண்டுபிடிக்கிறது,ஸ்போர்ட்ஸ், மானிலத்துல முதலா வர்ரது இன்னபிற.

இதுல அவன் முழு மூச்சா தன்னை ஈடுபடுத்திக்கிறப்போ என்னைக்கோ ஒரு  நாள் தன் உயிரின் அடிப்படை தேவைகள் நிறைவேறும்ங்கற  நம்பிக்கை அவனை முன்னேற்ற பாதையில செலுத்தும். மனிதனின் எதிர்கால  நடவடிக்கைகளை அல்லது அவனுக்கு நடக்க விருக்கும் சம்பவங்களை இன்ஃப்ளுயன்ஸ் பண்ண கூடியதா மேற்சொன்ன பல காரணங்களாலோ -ஒரு சில காரணங்களாலோ அவனால அப்படி ஈடுபடுத்திக்க முடியாத பட்சத்துல அவன் பீடி,சிகரட்,பான்,பீடா,பீர், மது ,கஞ்சா,அபின்,போதை ஊசி,கில்மா இப்படி அனேக தப்பித்தல்களுக்கு . ஆளாயிர்ரான்.

பணவேட்டைக்கு தயாராகும் நபர் முதலில் தன்னை - தன்னை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும் விஷயங்களை -தன் கடந்த கால நடவடிக்கைகளை டாலி பண்ணி குட்டியா ஒரு ஆராய்ச்சியே செய்துரனும். உயிரின்   அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள தன் வியூகம் என்னங்கறதை ரெவ்யூ பண்ணிக்கனும்.

ஒரு மனிதன் என்ன செய்தாலும் அவன் செயலுக்கு பின்னிருந்து ஊக்குவிக்கும் கோரிக்கைகள் நான்கே.( ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்டு) அவன் நல்லா படிச்சாலும் - படிக்காம கடைசி பெஞ்சுல உட்கார்ந்து மாணவிகளை காலய்ச்சாலும் நோக்கம் ஒன்னுதேன். சாரி நான்குதேன். சர்வைவல், இனப்பெருக்கம் ,படைத்தல் மற்றும் பரவுதல்.

இதெல்லாமே பணத்தால் நிறைவேறும்ங்கறதை நெல்லா புரிஞ்சிக்கிடனும். நம்பனும். அப்பத்தேன் பணவேட்டையில ஆர்வம் வரும் .பிடிப்பு வரும். தொடர்ச்சி வரும். அவலை நினைச்சு உரலை இடிச்ச கதையா - எதுக்குன்னே சரியா தெரியாம பண வேட்டையில இறங்கப்படாது. அப்படி இறங்கினா இடையில ஒரிஜினல் கோரிக்கைகள் ஸ்க்ரீன் மேல வந்து பண வேட்டை குட்டிச்சுவரா போயிரும்.

பணவேட்டையில இறங்கறதும் செயிக்கிறதும் சர்வ நிச்சயமா  சர்வைவலை கொடுக்கும்.  நல்ல வாழ்க்கை துணையை கொடுக்கும்.  இனப்பெருக்கம் அதுவும் ஓகே ,படைத்தல் இதுவும் ஓகே. ஆனால் கடைசியா உள்ள   பரவுதல்ங்கற கோரிக்கை நிறைவேறனும்னா பண வேட்டை தொடரனும்.வானமே எல்லைங்கோ..

பரவுதல்,வியாபித்தல்னா ஊர், தாலுக்கா,மாவட்டம்,மானிலம் ,நாடு ,உலகம்னு பெரிய ஏரியா இருக்கு. உலகம் முழுக்க நாம பரவனும்னா பண வேட்டை தொடர்ந்தே ஆகனும். இல்லின்னா மொதல் 3 கோரிக்கைகளோடயே கடைய கட்டிட்டு குண்டு சட்டியில குதிரை ஓட்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதேன். கொஞ்சம் கவுரதையா சொல்லனும்னா " ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை .. நான் தாண்டா என் மனசுக்கு ராஜா"ன்னு பாடிக்கலாம்.

இங்கன நீங்க முடிவு பண்ணியாகனும் மனசுக்கு ராஜாவா இருந்தா போதுமா? நெஜ ராஜாவாகனுமா? நெஜ ராஜா ஆகனும்னா பணவேட்டைக்கு தயாராயிருங்க. அடுத்த பதிவுல பண வேட்டைக்கான சில நிபந்தனைகளை பார்ப்போம்.


Comments