பணம் பணம் பணம் : 29அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!
தொழிற்களம் வலைதளம் மூலமா உங்களை 29 ஆவது நாளா சந்திக்கிறேன். கடந்த பதிவுல பண வேட்டைக்கான  சில நிபந்தனைகளை சொல்றதா சொல்லியிருந்தேன். அதை இன்னைக்கு பார்த்துருவம்.

மிருகம் ஆடும் வேட்டைக்கும் மனிதன் ஆடும் வேட்டைக்கும் வித்யாசம் என்னன்னா மிருகத்தின் வேட்டையை இயக்குவது அதன் பசி. இதில் பசி என்பது இயற்கையின் தூண்டுதலால் தன்னிச்சையாய் ஏற்படுவது. ஒரு அளவுக்குட்பட்டது.

மனிதன் ஆடிய  வேட்டையும் பசியால் தான் இயக்கப்பட்டது. ஆனால் போக போக சேமித்து வைப்பது - பகிர்வது - வேட்டையில் வெற்றியை கொண்டு  ஈகோவை திருப்தி படுத்துவது என்று ஆகிப்போனது. தலைவனாவது ,குழுவில் உள்ள குட்டிகளையெல்லாம் கணக்கு பண்றதுன்னு ஆயிருச்சு.

பண வேட்டையில் வெற்றிக்கு "ஒரே வழி மனிதன் பாதி மிருகம் பாதி "ங்கற ஃபார்முலாவை பின் பற்றனும்.அதாவது உங்கள் செயல்பாட்டையும் பண வேட்டையையும்  ரெண்டா பிரிச்சுக்கனும்.

ஒன்னு பசிக்கானது . ஐ மீன் சொந்த வாழ்க்கைத்தேவைகளுக்கானது. வேறு வார்த்தைகளில் சொன்னால் உயிரின் அடிப்படை தேவைகளில் முதல் மூன்றுக்கானது.

இதில் கேள்வி - ஆராய்ச்சி - புதுமை - ஈகோ சேட்டிஸ்ஃபேக்சன் இத்யாதிக்கெல்லாம் இடமே இருக்கப்படாது. அதே நேரம் உங்கள் பசி (தேவை) இயற்கையானதா இருக்கனும். தேவைகளில் ரெண்டு கேட்டகிரி.ஒன்னு ஃபிசிக்கல் அடுத்தது சைக்கலாஜிக்கல். தூக்கம்ங்கறது ஃபிசிக்கல். பலான ப்ராண்ட் கட்டில், அதுமேல பலான ப்ராண்ட் மெத்தை , பலான இன்டிரியர் ,ஏசி இதெல்லாம் சைக்கலாஜிக்கல் .

ஃபிசிக்கலான தேவைகளை  நிறைவேற்றிக்கொள்ள ஆடும் பணவேட்டை மிருகத்தனமா இருந்தாலும் பரவால்லை ,ஆனால் இதே மிருகத்தனம் சைக்கலாஜிக்கல் தேவைகளுக்கும் விஸ்தரிக்கப்படும் போது சிக்கலாயிருது. ஏன்னா அதே மிருகத்தனம் இங்கேயும் தொடரும். ஒரு வியூகம் இருக்காது. மிருகத்தை பசி துரத்தும்.மனிதனை அவன் தேவை துரத்தும். புலி துரத்தும் போது அண்ணா சாலையில நமீதா போஸ்டரையெல்லாம் பார்த்துக்கிட்டா ஓடமுடியும்?

ஃபிசிக்கல் தேவைகளை சுருக்கமா  நிறைவேற்றிக்கிட்டு  - பண வேட்டைக்கு தயாராகனும்.அதுவும் மன்சன் வேட்டையாடறாப்ல கூட கடியாது. ஒரு ராஜா வேட்டைக்கு கிளம்பின கணக்கா இருக்கனும். ஆள்,அம்பு,வேட்டை நாய்,வழிகாட்டி இப்படி கிளம்பனும். இந்த வேட்டை ஒரு திருவிழா. வேட்டையில ஒன்னும் கிடைக்கலின்னாலும் பரவால்லை .ஏன்னா இது பசிக்கான  வேட்டையில்லை.   ஈகோவை திருப்தி படுத்தறதுக்காக ஆடப்போற வேட்டை.

இந்த வேட்டையில வெற்றி கிடைச்சதுன்னா உயிரின் நான்காவது அடிப்படை கோரிக்கையான பரவுதல் நிறைவேறும்.

ஆக உங்களுக்கு தேவை மொத மூன்று கோரிக்கைகள் மட்டும் தான்னா நீங்க இரைக்க இரைக்க ஓடித்தான் ஆகனும். இந்த ஓட்டத்துல நாம சொன்ன ,சொல்லப்போற நுட்பம்லாம் வேலைக்காகாது. தப்பித்தவறி ஒர்க் அவுட் ஆனாலும் வேட்டையில கிடைச்சதெல்லாம் மொத 3 கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளவே பயன்படும். இதனால ஒட்டு மொத்த பொருளாதார அமைப்பே சீரழிஞ்சுரும்.  நாம எடுத்து வைக்கிற நுட்பமெல்லாம் நான்காவது கோரிக்கைய நிறைவேற்றிக்கொள்ள துடிக்கும் அத்தனை வேக்குவம்  நிரம்பிய நெஞ்சங்களுக்குத்தேன்.

ஆக இந்த பதிவை படிச்சுட்டு உங்களை நீங்க விஜாரிச்சு பாருங்க. " எனக்கு என்ன வேணம்? அதுக்காவ  நான் என்ன பண்ணிக்கிட்டிருக்கேன்? என் பண வேட்கை எதுக்காவ? நான் செய்துக்கிட்டிருக்கிற தயாரிப்புகள் பண வேட்டைக்கு உதவுமா? என் பண வேட்கை தீருமா? என்னுது மொத 3 கோரிக்கைகள் மட்டுமா? நாலவதும் இருக்கா?"

இப்படி உங்களை நீங்களே  தெளிவா விஜாரிச்சு ஒரு ஜட்ஜிமென்டுக்கு வாங்க அடுத்த பதிவுலருந்து பண வேட்டையில வெற்றியை தரக்கூடிய ஒருங்கிணைத்தலை  நோண்டி நுங்கெடுப்பம்.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்