பணம் பணம் பணம் : 30


அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!

தொழிற்களம் வலைதளம் வழியே இந்த பணம் பணம் பணம்  தொடர் பதிவு மூலம் உங்களை 30 ஆவது நாளா சந்திக்கிறேன். கடந்த பதிவுல உயிர்களின் அடிப்படை கோரிக்கைகள்னு நாலை சொன்னேன். உங்கள் அந்தரங்க விசாரணையில  மொத 3 கோரிக்கைகள் மட்டும்  நிறைவேறினா போதும்னு தோனினா இந்த தொடரை விட்டு விலகிருங்க. நாலாவது கோரிக்கையான விரிவடைதல் - பரவுதல்ங்கற கோரிக்கையும் நிறைவேறனும்னு உங்க மனசு சொன்னா தொடரலாம். இந்த பதிவிலிருந்து பண வேட்டைக்கு உதவக்கூடிய அம்சங்களை  ஒருங்கிணைத்தல் பற்றி பார்ப்போம்.

பணவேட்டைக்கு எத்தனையோ அம்சங்கள் தேவை. பொருளாதாரத்துல நிலம், உழைப்பு,முதல்,நிர்வாகம்னு நாலு அம்சத்தைதேன் சொல்றாய்ங்க. உதாரணத்துக்கு நிலம்ங்கற மேட்டரை  எடுத்துக்கிட்டா இதுல நாம ஆராய வேண்டிய  அலச வேண்டிய அம்சங்களே ஆயிரத்துக்கு மேல இருக்கும்.

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னா யூத்துக்கு ருசிக்காது. வேற மாதிரி சொன்னா தொழிற்களம் காரவுக ஒத்துக்கிடமாட்டாய்ங்க.  இருந்தாலும் சொல்ல வந்த மேட்டர் மட்டும் ஒன்னுதேன்.

நிலம்னா அதை விலைக்கு வாங்கலாம் ,  லீசுக்கு எடுக்கலாம் ,வாடகைக்கு எடுக்கலாம்,ஒத்திக்கு வாங்கலாம். நீ எந்த முறையில வாங்கறதா இருந்தாலும் கொடுக்கிறவனுக்கு அப்படி கொடுக்க அத்தாரிட்டி இருக்கான்னு பார்க்கனும்.  அதுக்கு மிந்தி  அந்த நிலம்  அவனுக்கு தேன் சொந்தமான்னு பார்க்கனும்.

சிட்டி அ  நகரத்துடனான அதன் கனெக்டிவிட்டி எப்படி - நம்ம தொழிலை பொருத்து துறைமுகம் , ரயில்வேஸ்டேஷன் ,ஏர்போர்ட்,  லாரி புக்கிங் ஆஃபீஸு இத்யாதிக்கு எத்தனை தூரமிருக்கு? இதையும் பார்க்கனும்.

சில நிலங்கள்ள எவன் வந்து எதை வச்சாலும் உருப்படாம போயிருக்கும். ( சொல்ல வர்ரது வாஸ்து சமாசாரம் இல்லை) புதுசா தொழில் துவங்கறவுக இந்த மாதிரி நிலத்தை தவிர்த்துர்ரது பெஸ்ட். ஒவ்வொரு ஏரியாவுக்கு ஒவ்வொரு "ஜூரி" இருப்பான். அவன் கேரக்டர் என்ன? அவன் கட்சி என்ன? கட்சியில அவன் பொசிஷன் என்ன? அவனுக்கு சரண்டர் ஆனா எத்தனை சவரம் ஆகும்? ஓப்பனிங்குக்கு கூப்டு - சிடி சென்டர்ல பெருசா ஒரு  பேனர் வச்சிட்டா போறுமா? பேப்பர்ல முழுபக்க விளம்பரம் கொடுக்கனுமா?  பொஞ்சாதிக்கு வைர நெக்லஸ்? கீப்புக்கு நெக்லெஸ்? அப்பப்போ பார்ல இருந்து பில் வருமா? அல்லது மாசா மாசம் ஃபிக்சடா "அழுதுட்டா "போறுமா?

கண்டுக்காம திறந்தா என்ன ஆகும்? ஆஃபீசர்களை மட்டும் அனுப்புவானா? கைத்தடிகளை அனுப்புவானா? கைத்தடிங்க வந்து என்ன பண்ணுவாய்ங்க? கண்ணாடி மட்டும் உடைப்பானா? மொத்தமா பெட்ரோல் ஊத்தி எரிச்சுருவானா? ஸ்டேஷன்ல புகார் பண்ணா எடுத்துக்குவாய்ங்களா? கோர்ட்டுல ப்ரைவேட் கேஸ் போடனுமா? இந்த மாதிரி  ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டுக்கிடனும். பதிலை தேடனும். இதெல்லாம் ஒரு கோணம்.

அடுத்து நாம ஷெட் போடப்போறோமா? பில்டிங்  கட்டப்போறோமா? அதுக்கெல்லாம் அது சரி வருமா?  (மண் பரிசோதனை அண்ட் ஆல் தட் - இஞ்ஜினியர் கருத்து கட்டாயம் -அவ்ர் டொனேஷன்ல சீட்ல படிக்காம இருந்தா ஸ்ரேஷ்டம்)

அந்த ஏரியா எப்படி? அதாவது சனம். ச்சொம்மா  ஃபென்சிங் அடிச்சு சொத்தையா ஒரு காவலாளியை போட்டா போறுமா?  காம்பவுண்டு கட்டாயமா? வேட்டை நாய் எதையாச்சும் விடனுமா?  இத்தனை அம்சங்களையும் நோண்டி நுங்கெடுக்கனும். இதுல எதுல முக்கியம் எது முக்கியமில்லைங்கறதும் ரெம்ப முக்கியம்.

உதாரணமா  நாம வாங்கப்போற நிலம் அரசு நிலம், வனப்பகுதி,புறம்போக்குன்னு வைங்க. நமக்கு கொடுக்கிறவருக்கு அது மேல உரிமையே இல்லைன்னு வைங்க மத்த அம்சங்கள் எல்லாம் அம்சமா இருந்தாலும் வெட்டி.

இப்படி பல அம்சங்களை தனித்தனியாவும் -ஒன்னுக்கொன்னு பொருத்தியும் - பிரிச்சும் -ஒட்டு மொத்தமாவும் அனலைஸ் பண்ணனும்.

சினிமா ஒக்காபிலரில சொன்னா லாங் ஷாட்ல பார்க்கனும் - மிட்ஷாட், க்ளோசப் -டைட் க்ளோசப் -இப்படி எல்லா கோணத்துலயும் பார்க்கோனம். இதுக்கு பேருதேன் ஒருங்கிணைத்தல் ..

மத்த விஷயங்களை ஒருங்கிணைக்கிறதையும் அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம்..

Comments