Ads Top

பணம் பணம் பணம் : 31


அண்ணே வணக்கம்ணே !

தொழிற்களம் வலை தளத்தின் வழியே இந்த பணம் பணம் பணம் தொடர் மூலம் உங்களை 31 ஆவது நாளா சந்திக்கிறேன்.உங்களை பண வேட்டைக்கு தயார் பண்றதுதான் இந்த பதிவின் நோக்கம்.இந்த நாட்டை பணக்கார நாடாக்க ஒரு செயல்திட்டத்தை வகுத்து  10 வருசம் அதற்காக வேலை செய்தேன். இது மேக்ரோ. இதையே மைக்ரோ லெவல்ல செய்ய ஆரம்பிச்சேன். இந்த நாட்டை பணக்கார நாடாக்கறதும் ஒன்னுதேன். இந்த நாட்டு மக்கள் எல்லாரையும் பணக்காரர்களாக்கறதும் ஒன்னுதேன்.

கடந்த பதிவுல ஒருங்கிணைப்புங்கற அம்சத்தை பத்தி சொல்லியிருந்தேன்.உற்பத்தி காரணிகளில் ஒன்றான "நிலம்"ங்கற விஷயத்துல எத்தனை அம்சங்களை பார்க்கோனம்? அந்த அம்சங்களை எப்படி ஒருங்கிணைச்சு அலசறதுன்னு விவரிச்சேன். இன்னைக்கு உற்பத்தி காரணிகளில் இரண்டாவதான "முதலீடு" பற்றிய அம்சங்களை பார்ப்போம்.

ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு பெரியவுக சொல்லியிருக்காய்ங்க. இதுல முக்கியமா நாம மனசுல வாங்க  வேண்டிய விஷயம் ஆத்துல போடறது வீண் விரயம்ங்கறதுதான். அப்படி ஆத்துல போடறதா முடிவு பண்ணிட்டாலும் அதையும் அளந்து போடனும்ங்கறது செகண்டரி.

முதல் - முதலீடு -கேப்பிட்டல்னு எத்தனை வார்த்தையில சொன்னாலும்  அது ஒரே வடிவத்துல இருக்கும்.அதான் பணம். அல்லது பணமா மாத்தக்கூடிய நிலையில இருக்கும். பணமா மாத்த கூடிய நிலையிலன்னா இதுல பலவகை இருக்கு.

நாங்க இன்டர்ல (உங்க ஊருல இதை ப்ளஸ் 1 ப்ளஸ் 2 ங்கறிங்க?) பேலன்ஸ் ஷீட் போடும்போது அசெட்ஸ் பக்கத்துல ஒரு வரிசைப்படி ஐட்டங்களை லிஸ்ட் அவுட் பண்ணுவம். அந்த பட்டியல் நினைவிலிருந்து .

கேஷ் இன் ஹேண்ட் (கையில் உள்ள பணம்) ,கேஷ் அட் பேங்க் (வங்கியில் உள்ள பணம்) ,பில்ஸ் ரிசீவபிள் ( சரக்கு/ கச்சா பொருள்  சப்ளை செய்த வகையில் வர வேண்டிய பணம்) , டெட்டார்ஸ் (கடன் காரர்கள் தர வேண்டிய பணம்) ,ஃபர்னிச்சர்ஸ் அண்ட் ஃபிட்டிங்ஸ் ,பில்டிங்ஸ். கடேசியில குட் வில் இத்யாதி வரும்.

இந்த பட்டியல் தயாரிப்பில் ஐட்டங்களை முன்னே பின்னே நகர்த்த ஒரு அடிப்படை காரணம் இருக்கு. அதை டெக்னிக்கலா லிக்விட்டிட்டிங்கறாய்ங்க.

லிக்விடிட்டின்னா இந்த இடத்துல  //எளிதில் பணமாக்கக்கூடிய தன்மை //ன்னு பொருள் கொள்ளலாம். இந்த லிக்விடிட்டி குறைச்சலா இருக்கிற  மேட்டரை  கடேசியில கொண்டுவருவம். லிக்விட்டிட்டி அதிகமா உள்ள மேட்டரை மொதல்ல கொண்டு வருவம்.

என்னங்கடா இது இன்னம் யாவாரமே ஆரம்பிச்ச பாடா இல்லை (பதிவுலங்க) அதுக்குள்ள பேலன்ஸ் ஷீட்டுக்கு போயிட்டாரு மன்சன்னு நினைக்காதிங்க.

நீங்க உங்க தொழிலுக்கான முதலீடா நினைச்சிருக்கிற ஐட்டங்களை லிக்விட்டிட்டியை அடிப்படையா கொண்டு வரிசைப்படுத்துங்க.

பணம் பத்தும் செய்யும் ,பணம் பாதாளம் வரை பாயும்னு நிறைய அடிச்சு விட்டிருக்காய்ங்க.ஆனால் பணத்தை விட பணம் கைக்கு வர்ர டைம் தான் முக்கியம். சரியான நேரத்துல வரனும். இங்கிலிபீசுல சொன்னா கெத்தா இருக்கும். இன் டைம் மணி.

நம்ம பக்கத்துல ஒரு கல்வித்தந்தை இருக்காரு. உள்ளாற போனா அடுத்த மாசம் ஷூட்டிங்குக்கு ரெடியாயிட்டிருக்கிற செட் மாதிரியே இருக்கும்.எல்லா கட்டுமான வேலையையும்  ஆரம்பிச்சு டீல்ல விட்டிருப்பாய்ங்க. என்னங்கடா இது தேசீய கட்சியில பொறுப்புல இருக்கிற ஆசாமி , பெரிய பெரிய பதவிக்கெல்லாம் போட்டியிட்ட (தோத்துப்போனது வேற கதை) பார்ட்டி. காசுக்கு குறைவான்னு மண்டைய பிச்சுக்குவம்.

நிதானமா விஜாரிச்சா தாளி ..வேலை செய்தவன் எவனுக்கும் இன் டைம் செட்டில்மென்டே பண்ணமாட்டாய்ங்களாம். இந்த வருச வேலைக்கு அடுத்த வருசம்தேன் பில். எப்படி உருப்படும்?

சரி நம்ம ரேஞ்சுக்கே உதாரணம் சொல்றேன். ஓட்டலுக்கு போயிட்டம் .பர்ஸை வீடல்யே மறந்து விட்டுட்டு வந்துட்டது பாதியிலயே தெரியுது.ஒடனே வீட்டுக்கு ஃபோன் போட்டு பொஞ்சாதி கிட்டே "ஏம்மா..பர்ஸை மறந்து வந்துட்டன்.அதை உடனே எடுத்துக்கிட்டு மகேஷை பலான ஓட்டலுக்கு வரச்சொல்லுங்கறோம்"

பையன் வரதுக்கு டைம் கொடுத்து நிதானமா சாப்பிடற ஐட்டமே ஆர்டர் கொடுத்து கொறிச்சுக்கிட்டே இருக்கம். டீயை ஆத்தாம கொண்டு வாப்பானுட்டு சாஸர் ஊத்தி சீப்பிக்கிட்டிருக்கம்.பையன் வரலை.

அந்த நேரம் பார்த்து யாரோ நண்பர் ஓட்டலுக்குள்ள நுழையறாரு.அவர்கிட்டே காசை வாங்கி கவுன்டர்ல கொடுத்துட்டு வெளிய வர்ரோம். அப்பம் மகேஷோ -சதீஷோ வரான். என்ன புண்ணியம்.

ஆக பணத்துக்கு மதிப்பு கிடையாது .பணம் வர டைமுக்குத்தேன் மதிப்பு.  அதாவது இன் டைம் மணிக்கு தேன் மதிப்பு.

நாம முதலா நினைச்சிருக்கிற ஐட்டங்களோட லிக்விடிட்டிய பார்த்துக்கனும்.அது கைக்கு வர்ர டைமை கெஸ் பண்ணிக்கனும்.ஒரு வாரம் பத்து நாள் லேட்டாவே வர்ரதா நினைச்சு வேலைகளை லிஸ்ட் அவுட் பண்ணிக்கனும்.

நாம வைக்கிற முதல் கிணத்துல தண்ணி சேந்த குடத்துல கட்டிவிட்ட கயிறு மாதிரி.100 அடியில தண்ணி இருக்கு. கயிறு 99 அடிவரை இருந்தாலும் வீண் தானே.

அதே போல சில சமயம் குடம் நழுவி கிணத்துல விழுந்துரும். அதை சாலாக்க எடுக்க ஒரு பாதாள கரண்டியும் இருக்கோனம் .ஐ மீன் முதல் மொத்தமும் டம்ப் ஆகிப்போனாலும் அதை மீட்டெடுக்க அடிஷ்னல் கேப்பிட்டல் பைப் லைன்ல இருக்கோனம்.இல்லின்னா கோவிந்தா.

கூலிகளா இருந்து படக்குன்னு தொழில் துவங்கிர்ர பார்ட்டிங்க எல்லாமே பாசிட்டிவா நடக்கும்னு மகள் கண்ணாலத்துக்கு வச்சிருந்த காசு, நண்பர் வீட்டுமனை வாங்க வச்சிருந்தா காசையெல்லாம் உருட்டி பிரட்டி தொழில்ல போட்டுருவாய்ங்க.

உதாரணமா செங்கல் சூளை ஆரம்பிக்கிறாய்ங்கன்னு வச்சுக்கங்க.திடீர்னு அரசாங்கம் அலார்ட் ஆகி மண்ணெடுக்க தடை விதிக்கலாம்.கூலிக்காரவுக அமையாம போகலாம். அட கட்டை கிடைக்காம போகலாம்.பத்து நாள் தாமதமாகலாம். சோசியருங்க சொல்றாப்ல சூளைய பத்த வைக்கிற நேரம் பார்த்து  அஷ்டம சனியோ ஆறுல குருவோ வேலை செய்து மழை வந்து தொலைக்கலாம். -

எல்லாம் ஒரு அமைப்புக்கு வந்தாச்சு. செயிச்சா கை மேல காசு.ஆனால் காசு கரைஞ்சு போச்சு. காசு கரைஞ்சு போச்சுன்னு தலையில துண்டு போட்டு உட்கார்ந்துட்டா எல்லா முதலும்,  உழைப்பும்,ஏற்பாடும் வீணா போயிரும்.

மழை விட்ட பிற்காடு விட்டதை விட்ட இடத்துல தான் பிடிக்கனும்னு கோதாவுல இறங்கனும். அந்த நேரம் பார்த்து பெண்ணுக்கு கண்ணாலம் குதிர்ந்து போச்சுனு வைங்க அ கடன் கொடுத்த நண்பருக்கு சீப் அண்ட் பெஸ்டா வீட்டுமனை கிடைச்சிருச்சுன்னு வைங்க. பொளப்பு நாறிரும்.

முதலுக்கு லிக்விட்டிட்டி முக்கியம். அதே போல சைட் முக்கியம். சைட்டுன்னா "கெடு". தினசரியில எல்லாம் நிருபர் அங்கன இங்கன திரிஞ்சு  விளம்பரம் வாங்கி அனுப்புவாரு. நிர்வாகம் பிரசுரிச்சுரும். பார்ட்டி/ நிருபர்  காசு கொடுக்க 15 நாள் கெடு இருக்கும். பதினைஞ்சு நாள்ள காசு வந்துட்டா பிரச்சினை இல்லை. இல்லின்னா டென்ஷன்.இந்த கெடுவைத்தேன் சைட்டுன்னு சொல்வம்.

டீக்கடையில கூட கடன் அன்பை முறிக்கும்னு எளுதிப்போட்டிருப்பாய்ங்க.ஆனால் பண வேட்டையில -தொழில் துறையில கடன் கூட ஒரு முதலீடு தேன்.

உதாரணமா உங்களுக்கு மார்க்கெட் விலையில பாதி விலைக்கு இன்வெர்ட்டர் தயாரிப்பதற்கான  ஃபார்முலா கிடைக்குது. நீங்க  அதை தயாரிக்க களமிறங்கிர்ரிங்க. சொந்த பணத்துலதேன் யூனிட் ஆரம்பிக்கனும்னா ஒரு வருசம் ஆயிரும். அந்த ஒரு வருசத்துக்குள்ற பவர் கட்டே இல்லாம ஆயிரலாம்.அல்லது உங்க விலையில பாதி விலைக்கு இன்னொரு பார்ட்டி இன்வெர்ட்டர் தயாரிக்க ஆரம்பிச்சுரலாம்.

அதனால கடன் வாங்கி உடனே ஆரம்பிக்கிறதுதேன் புத்திசாலித்தனம்.  நீங்க...

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு

"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" இத்யாதி கொட்டேசனை எல்லாம் டைரியில எளுதி வச்சுக்கிட்டு ஃபாலோ பண்ற பார்ட்டியா இருந்தா ஒரு மேட்டரை நெல்லா புரிஞ்சுக்கனும். அவ்வையார் நல்வழ்யில சொன்ன இந்த மேட்டர் தனிப்பட்ட வாழ்க்கைக்குத்தேன். செலவுல ரெண்டு விதம் இருக்கு.ப்ரொடக்டிவ் -  அன் ப்ரொடக்டிவ் (உற்பத்தி செலவு -உற்பத்தி சாரா செலவு) . அவ்வை சொன்னது அன் ப்ரொடக்டிவ் செலவுகளுக்குத்தேன்.

கடனை முதல் வச்சா வட்டி கவர் ஆகி மேற்கொண்டு லாபம் வரும்னா கடன் வாங்கியும் முதல் வைக்கலாம்.கடன் வாங்கறதுல பல முறைகள் இருக்கு அதையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்.


No comments:

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.