மின்னஞ்சல் வார்ப்புருவை ( Mail Template ) ஜீமெயிலில் உபயோகிப்பது எப்படி?
ஜீமெயிலில் இருந்து அடிக்கடி ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது அனுப்பவேண்டுமா..? உங்களுக்கு இந்த பதிவு உதவும்.
மெயில் டெம்லெட் : நாம் நமது நண்பர்களுக்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கோ தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல அனுப்பும் பொழுது சாதரனமாக பத்தி வடிவத்தில் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பை உருவாக்கி வைத்துக்கொண்டு நமது சேவையை தெரியபடுத்தினால் அதனை மின்னஞ்சலில் பெறுபவர்களுக்கு வாசிக்க எளிதாக இருக்கும்.
உதாரணத்திற்கு உங்கள் சேவையை குறித்த கேள்வியை மின்னஞ்சலில் ஒருவர் கேட்கிறார் என்றால், அவருக்கு ஏற்கனவே நீங்கள் தயாரித்து\வைத்திருக்கும் குறிப்பு வார்ப்புருவை ( Mail Template ) எடுத்து அனுப்பும் போது அடிக்கடி ஒவ்வொருவருக்கும் தட்டச்சு செய்து பதிலளிக்க வேண்டியிருக்காது. பதிலாக நமது வார்ப்புருவை மெயிலில் சேமிப்பகத்தில் வைத்துக்கொன்டு எளிதாக பதிலை அனுப்பலாம்.
அதற்கு முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள்.
- வலது மூலையில் உள்ள கியர் பொத்தானை சொடுக்கி செட்டிங் என்பதை தேர்வு செய்யுங்கள்
Lab >> Canned Responses >> enable என்ற வரிசையில் தேர்வு செய்யவும்
பிறகு கீழே உள்ள சேவ் பொத்தானை சொடுக்கி சேமித்து கொள்ளுங்கள். இனி உங்கள் புதிய மின்னஞ்சல் அனுப்பும் பக்கத்தில் Canned Responses என்னும் வார்த்தை புதிதாக சேர்ந்திருக்கும். அதில் New Canned Responses சொடுக்கி தேவையான தலைப்புகளை கொடுத்து தேவையான குறிப்புகளை சேமித்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவு தாங்க, இனி ஒவ்வொரு முறை நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டியதில்லை.. தேவையான குறிப்புகளை ஒரு தடவை தயாரித்து பின் Canned Responses மூலம் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் சமயத்தில் ஒரே சொடுக்கில் உங்கள் குறிப்பு வார்ப்புரு வந்துவிடும்.
ஒரே பதிலை பலருக்கும் பல சமயத்தில் மின்னஞ்சல் அனுப்பிடலாம். உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பல வார்ப்புருக்களை கையாளவும் இந்த Canned Responses பயன்படும்.
மிக்க நன்றி...
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteபகிர்தமைக்கு நன்றி
ReplyDelete