தாவர வேர்களை காண ஒரு புதிய முறைதாவர வேர்கள் மண்ணுக்குள் இருப்பதால் நம்மால் அவற்றைப் பார்க்க முடிவதில்லை என்பது தெரிந்ததுதான். இப்போது கண்ணாடி போன்ற செயற்கை மண் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதில் தாவரங்களை வளர்க்கலாம்.

இரண்டு வருடங்கள் தொடர்ந்த ஆராய்ச்சிக்குப் பிறகு நாப்பிஆன் என்ற செயற்கைக் கூட்டுப் பொருள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது மின் சக்தி தயாரிக்கும் எரி செல்களில் பயன் படுத்தப் படுகிறது. இதன் தன்மையை ஆராய்ந்த போது அது மண் போலவே பயன் படுத்தக் கூடியதாக இருப்பது தெரிய வந்தது. இயற்கையில் இது ஒளி ஊடுருவாத படிகத் தன்மை கொண்டது.   இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இது ஊட்டக் கலவைகளுடன் கொண்ட தண்ணீர் சேர்த்தவுடன் கண்ணாடி போன்ற செயற்கை மண்ணாகி விடுகிறது!

 இது மண் எப்படி  ஊட்டச் சத்துக்கள் கொண்டு தாவரங்கள் வளர ஏற்றதாக உள்ளதோ அதே போல்  உள்ளது. இயற்கையாக இதனில் ஊட்டச்சத்துக்கள் இல்லா  விட்டாலும், அவற்றை இதனுடன் கலந்து கொள்ளலாம்.

வேர்களின் வளர்ச்சி, வேர்களில் உள்ள நுண்ணுயிரிகள் எப்படி மற்ற உயிரினங்களுடன் தொடர்பு கொள்கின்றன. தாவர மரபணுவியல் மூலமாக நல்ல வலிமையுள்ள வேர்களை உருவாக்குவது, ஈ கோலி நுண்ணுயிரி எப்படி சில தாவரங்களை தாக்குகிறது போன்றவற்றை இதன் மூலமாக வெளிப் படையாக ஆராயலாம். கடைசியாக பார்த்த ஈ கோலி விபரங்கள் மனிதர்களை உணவு மூலம் தாக்காமல் எப்படித்  தடுப்பது என்று அறிய உதவும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த செயற்கை மண் கூட்டுப் பொருளை ஆராயவும் இதை பயன்படுத்தி கொள்ளலாம். வரும் காலத்தில் விண்வெளிப் பயணங்களின் போதும் சந்திரனில் தளம் அமைக்கவும் இந்த செயற்கை மண் உதவும்


Comments

  1. Thalaippil seyarkkai man enpathu irunthaal nanraga irukkum

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்