ஆலோசனை சேவைகள்


 ஆலோசனை சேவைகள்
விவசாய நாடான இலங்கையில், விவசாயத்துறையின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் பொருட்டு இன்று பல்வேறு ஊடகங்களையும் பல்வேறு முறைமைகளையும் பயனப்படுத்தப்படுகின்றன. போதனைகள், பயிற்சி வகுப்புகள், நடைமுறை செயலமர்வுகள், கண்காட்சிகள் மற்றும் மின்னியல் ஊடகங்கள் ஆகிய பல்வேறு ஊடகங்களின் ஊடாக மேற்கொள்கின்ற விஸ்தரிப்பு முறைமைகளுக்கு, கட்டணங்கள் இன்றி விவசாய ஆலோசனை வழங்கும் முறை புதிதாக சேர்க்கப்பட்ட முறைமையாகும். 
                                        
இந்தியா, வங்காளதேசம் போன்ற பெரும்பாலான நாடுகளில் தமது விவசாய விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் பொருட்டு தொலைபேசி சேவைகளை பயன்படுத்துவதுடன் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையிலும் அவ்வாறான சேவையில் இணைந்துள்ளமை இலங்கை விவசாயத்துறை விஸ்தரிப்பில் புதியதொரு முயற்சியாக கருதலாம். 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆந் திகதி விவசாய அபிவிருத்தி அமைச்சு மூலம் விவசாய திணைக்களத்தின் விஸ்தரிப்பு மற்றும் பயிற்சிப்பிரிவின் கீழ் கன்னோருவ ஒலி,ஒளி நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இச் சேவை தற்போது இலங்கையின் விவசாயத்துறை விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் பொருட்டு பாரிய உதவியாக உள்ளது. 
                                            
விவசாயி தமது விவசாயத்துறையில், வீட்டுத்தோட்டத்தில் ஏற்படும் விவசாய தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு உரிய கள அலுவலரை சந்திக்க செல்லும் வரை இச் சேவையின் ஊடாக உடனடி ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விவசாய வியாபார சமூகம் மற்றும் ஏனைய துறைகளில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானவர்கள் தமது விவசாயத்துடன் தொடர்புடைய சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு தற்போது இச் சேவையை பயன்படுத்துகின்றனர்.
1920 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் இச் சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. இச் சேவை "கொவி சஹன சரண சேவை" என்று பெயரிடப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட எந்தவொரு தொலைபேசியின் ஊடாகவும் இலக்கம் 1920 அழைப்பதன் மூலம் நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் இச் சேவையை பெற்றுக்கொள்ளலாம். தொலைபேசி அழைப்புகளை பெற்றுகொள்பவர்களிடமிருந்து எதுவித கட்டணமும் அறவிடப்படாமை இதன் விஷேடமாவதுன் தற்போது வார நாள்களில் 8,30 தொடக்கம் பிற்பகல் 4.15 வரை இவ் ஆலோசனை சேவை நடைமுறைப்படும். 
                                         
நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் பல ஆண்டுகளாக கள அனுபவங்களை கொண்டுள்ள விவசாய ஆலோசகர்கள் இவ் ஆலோசனை வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மேலதிகமாக தெங்குச்செய்கை, ஏற்றுமதி பயிர்ச்செய்கை மற்றும் விலங்கு வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இச் சேவையின் ஊடாக பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு அச் சந்தர்பத்திலயே தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கு அதன் பணிற்றொகுதியினர் செயற்படுவதுடன், உடனடி தீர்வு வழங்க முடியாத பிரச்சினைகள் தொடர்பில் குறித்த திகதியிலயே தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார்கள். 
எவ்வாறெனிலும் உடனடி தீர்வுகளை வழங்குவதற்கு முடியாத பிரச்சினைகள் தொடர்பில் 72 மணித்தியாலங்களுக்குள் உரிய தகவல்களை வழங்குவதற்கு பணிற்றொகுதியினர் பொறுப்பாக செயற்படுவார்கள். ஆலோசனைகள் வழங்குவதற்கு சிரமமாக உள்ள பிரச்சினைகளை வேறு உரிய ஆராய்ச்சி நிறுவனத்திடம் அனுப்பி வைப்பதற்கு அல்லது அதற்கான வழிகாட்டல் சேவைகளை மேற்கொள்வதற்கு இச் சேவை செயற்படும். கிடைக்கப்பெறும் சகல அழைப்புகளையும் நாளாந்தம் அந்தந்த விடயங்கள் மற்றும் மாவட்டங்கள் ஆகியவற்றுக்கமைய கணினிமயப்படுத்தப்படும். அத்துடன் கிடைக்கப்பெறும் தரவுகளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சகல மாகாண விவசாயப் பணிப்பாளர்களிடம் அவர்களின் தகவல்பொருட்டும் தேவையான நடவடிக்கைகளின் பொருட்டும் மாதாந்தம் அனுப்பி வைக்கப்படும்.
(Thanks to department of agricultural...) 
நன்றி!!!
இப்படிக்கு,
சிநேகிதி.

Comments