எங்கே தொலைத்தோம் நம்மை...?

 "சனியனே... என்னத்த படிச்சுட்டு இருக்குற...? " (சத்தியமா நான் உங்கள் சொல்லல ) இப்படி  வசனங்களை கேட்டிருப்போம் அல்லது  பேசி இருப்போம் 

  என்றாவது ஒரு நாள் "என்னடா செல்லம் படிக்குற...?" என்று கேட்டிருப்போமா நம் குழந்தைகளை... நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.

 அவர்கள் விருப்பத்திற்கு என்றாவது விட்டிருக்கோமா...? 10000 பணம் கட்டி படிக்க வைக்கிறேன், அம்மானு  சொல்ற, மம்மினு  சொல்ல மாட்டியா?

 மம்மி என்றால் எகிப்தில் பதப்படுத்திய  பிணங்களை அழைக்கும் முறை, தாய்ப் பால் ஊட்டியவளும், அப் பிணமும் ஒன்றா என் தமிழச்சியே...சரி வாங்க ஒரு கதை சொல்றேன், 

                                            பச்சோந்தி 

 முருகன் ஒரு பள்ளி மாணவன், பள்ளியில் நடக்கவிருக்கும் கட்டுரை போட்டிக்காக தயாரித்துக் கொண்டிருந்தான். 

"என்னடா, நான் எழுதி கொடுத்த கட்டுரையை மனப் பாடம் பண்ணிட்டியா?" என்றார் அப்பா சுடலை

"பண்ணிட்டேன் பா "

"எங்க பார்க்காம எழுதி காட்டு  பார்க்கலாம்"

எழுதி கொண்டு இருந்தான் அவன், திடீர் என்று அவனுக்கு மறந்து விட்டதால்  குறிப்பினை எடுத்து பார்த்தான், அப்பா சுடலை பார்த்து விட்டார்.

"எரும மாடு, நீயெல்லாம் எங்க உருப் படப்போற, சொந்தமா எழுதவும் தெரியாது, சொல் புத்தியும் கிடையாது,நாட்டு  நடப்பும் தெரியாது"

அவனால் சொந்தமாய் கூட எழுத முடியவில்லை, காரணம் கூட  சுடலை தான்.

அவன் தினசரி இதழ் மற்றும்  பொதுவான புத்தகங்களை   படிக்கும் போதெல்லாம், "படிச்சது போதும் பள்ளி கூட  புத்தகம் படி"என்றார் சுடலை.

இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தான், பச்சோந்தியாய் மாறும் தந்தையை கண்டு....

சரி கவிதை வாசிக்கலாமே...

எங்கே  என் தந்தை?

அலுவலகத்தில்  வாழ்கின்றார்  தந்தை   அதிகாரியாய்
இல்லத்திலே உழைக்கின்றார் அலுவலக அதிகாரியாய் 
எங்கே  என் தந்தை?

இனியாவது நாம் வெளிப்படுத்துவோம் உணர்ச்சிகளை தெளிவாய், உரித்தானவர்களிடம், உண்மையாய்....

சிந்திப்போம் எங்கே தொலைத்தோம் நம்மை...? என்று....

                                                               நன்றி 

Comments

 1. நல்ல கதை...

  ///அவன் தினசரி, பொதுவான படிக்கும் போதெல்லாம் ///

  அவன் தினசரி, பொதுவான மற்ற நூல்களை / தினசரி இதழ்களை படிக்கும் போதெல்லாம் /// என்று மாற்றி இருக்கலாம்...

  நன்றி...

  ReplyDelete
 2. நன்றி அண்ணா, திருத்தி விட்டேன்

  ReplyDelete
 3. சரி தான் நம் ஆங்கில கல்வி மோகம் தீர வேண்டும்!

  ReplyDelete
 4. ஆங்கில கல்வி மோகம் மட்டுமல்ல, குழந்தைகளை அவர்கள் போக்கிலும் விட வேண்டும் கொஞ்சம், அப்போதுதானே அவர்கள் விருப்பம் புரியும் , நன்றி விஜயன்

  ReplyDelete
 5. அருமையான ஆக்கப்பூர்வமான பதிவு..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. சிந்திக்க தோன்றும் பதிவு

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்