மொபைல் செயலிகள் : பிளாக் பெரி ( BlackBerry OS ) மொபைல் உலகம்.


சென்ற பதிவில் ஐ.ஓ.எஸ் மற்றும்  ஆண்டிராய்ட் செயலிகளை பற்றி பார்த்தோம்.இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது தொழிற்த்துறை தேவையில் சிறந்து விளங்கும் : பிளாக் பெரி செயலியை பற்றி காண்போம்.

ரிசர்ச் இன்மோஷன்ஸ் லிமிடெட் ( Research inMotions Limited) எனும் கனடாவிலுள்ள பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்புதான்  பிளாக் பெரிக்கான செயலி.

உலககெங்கும் மிகப் பிரபலமாகியிருக்கும்  பிளாக் பெரி ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் பிசினஸ் தேவைக்காகவே பயன்படுத்தபட்டுவருகின்றன.


 பிளாக் பெரி மென்பொருள் தளத்தில் சுமார் 15,000 மேற்பட்ட மென்பொருள் தரவிறக்கம் செய்யும் வகையில் உள்ளது.
 
ஸ்மார்ட் போன்: ஸ்மார்ட் போன் விற்பனையில், சாம்சங் நிறுவனம் 40.4% பங்குடன் முதல் இடத்தைப் பிடித்தது. இதனை அடுத்து நோக்கியா 25.5% பங்குடன் இரண்டாவது இடத்தையும், பிளாக் பெரி போன்களை விற்பனை செய்திடும் ஆர்.ஐ.எம். நிறுவனம் 12.3% பங்குடன் மூன்றாவது இடத்தையும் கொண்டுள்ளன.

பிளாக் பெரி அலுவலக மின்னஞ்சல் சேவையில் மிகவும் பிரபலமான ஒன்று ஒரு சின்ன நடமாடும் அலுவலகம் என்று அதைச் சொல்லலாம்.
தற்போது  பிளாக் பெரி தனது OS 7.1 வடிவத்தை வெளியிட்டுள்ளது.

Comments