பருவத்தே பயிர் செய் !கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து'


 வள்ளுவரின் வான்புகழ் கொண்ட   திருக்குறள் காலத்தை அருமையாக கண்முன் காட்சிப்படுத்துகிறது..

காலத்தை எதிர்பார்க்கவேண்டிய பருவத்தில் கொக்கைப் போல காத்து இருந்து, 

காலம் வாய்த்தபோது கொக்கு மீனைக் கொத்துவதைப் போலத் தவறாமல் செய்ய வேண்டிய செயலைச் செய்து முடிக்க வேண்டும். 

ஒவ்வொரு செயலும் ஒரு விதை... 

குறிப்பிட்ட காலத்தில் விதை விதைத்தால்தான் உரிய கால அவகாசத்தில் அது முளைத்துப் பயனை அளிக்கும்.'காலம் தவறக்கூடாது என்ற உறுதி மனதில் இருக்க வேண்டும்....

அதுஇல்லை என்றால் என்னதான் உத்திகள் கடைப்பிடிக்க 

முயற்சித்தாலும் பலன் கிடைக்காதுதான். பருவத்தே பயிர் செய் !


இளமையில் கல் !


பசுமரத்தாணி போல 


ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது..


ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதிசெயல் பட்டால் மட்டுமே !! 


நாள் செய்வதை நல்லோர் செய்யார்


உழைக்கிற காலத்தில் ஊரைச்சுற்றிவிட்டு அறுக்கிற காலத்தில் 

அரிவாளைத்தூக்கிப்போனால் ஒன்றும்  கிடைக்காது..இன்று தலையில் கை வைத்து உட்கார்ந்தவனை கேள்!

நேற்று கையில் தலை வைத்து படுத்திருந்தேன் என்பான்.
இன்று இப்பொழுது என செயலாற்றில் இறங்கியவர்களே
என்றும் எப்பொழுதும் வரலாற்றில் ஏறினார்கள்.எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்காலம்….!! விலைக்குக் கிட்டாது!

விரும்பியும் திரும்பாது!வாழ்க்கை என்பது

ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்  --

எல்லாமே  நாம் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய 
நம் முன்னோர்களின் அனுபவ மொழிகள் தான் !

வாழ்க வளமுடன் ! வளர்க நலமுடன் !!


 

Comments

 1. குறளுடன் ஆரம்பம் முதல், பொன்மொழிகள் முடிவு வரை சிறப்பான கருத்துக்கள்...

  நன்றி... நன்றி...

  ReplyDelete
 2. திண்டுக்கல் தனபாலன் said...
  குறளுடன் ஆரம்பம் முதல், பொன்மொழிகள் முடிவு வரை சிறப்பான கருத்துக்கள்...

  நன்றி... நன்றி...

  கருத்துரைக்கு இனிய நன்றிகள்...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்