மாணவி விஞ்ஞானியின் தண்ணீரை சுத்தம் செய்யும் கண்டுபிடிப்பு!

  
 பிரயாணம் செய்யும்போது வாங்கி குடிக்கும் தண்ணீர் பாட்டில்களில் புற ஊதா கதிர் கொண்டு சுத்தம் செய்யப் பட்டது(UV treated) என்ற வாசகங்களை மேல் உள்ள லேபிள்களில் பார்க்கலாம். புற ஊதா கதிர்கள் கொண்டு தண்ணீரை தூய்மை செய்யும் முறை ஒன்றும் புதிதில்லை ஏற்கனவே உள்ளதுதான். இந்த படத்தில் உள்ள தீபிகா குருப் என்ற இந்தியா வம்சாவழி அமெரிக்க மாணவி இந்த முறையை மேம்படுத்தி அதற்காக அமெரிக்காவின் இளம் விஞ்ஞானி பரிசையும் பெற்று உள்ளார். டைட்டானியம் டைஆக்ஸைடு ,ஜின்க் ஆக்ஸைடு என்ற ஒளி கிரியா ஊக்கிகள் கொண்டு மேற்பூச்சடிக்கப்பட்ட குச்சிகளை தண்ணீரில் அமிழச் செய்து தண்ணீர் சுத்தம் செய்யப் படுவதை விரைவு படுத்தி உள்ளார்.சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்களே இதற்க்கு பயன் படுகின்றன என்பதுதான் இதன் சிறப்பு

சோதனையின் போது  மூன்று தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டார். ஒன்றில் சாதாரண ஒளி கிரியா ஊக்கிகள், இன்னொன்றில் டைட்டானியம் டைஆக்ஸைடு ,ஜின்க் ஆக்ஸைடு என்ற ஒளி கிரியா ஊக்கிகள் கொண்டு  மேற்பூச்சடிக்கப்பட்ட குச்சிகள் .இன்னொன்றில் எந்த சேர்ப்பும் இல்லாதது. மூன்று  நேர இடை வேளைகளில் இந்த பாட்டில்களில் இருந்து தண்ணீர் மாதிரியை எடுத்துப் பார்த்த போது டைட்டானியம் டைஆக்ஸைடு ,ஜின்க் ஆக்ஸைடு கலவை பூசப் பட்ட குச்சிகள் இருந்த பாட்டில் தண்ணீர் விரைவாக சுத்தம் ஆகியிருப்பதை பார்க்க முடிந்தது. இந்த ஆய்வுக்காகத்தான் அவருக்கு அமெரிக்காவின் இளம் விஞ்ஞானி பரிசு

பலே தீபிகா குருப்! அவருக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள் !

Comments

  1. தகவலுக்கு நன்றி... பாராட்டுக்கள்...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்