'பலமே வாழ்வு;
நம்பிக்கையே இறைவன் என்பது ஞான வல்ளல் விவேகானந்தரின் வாக்கு 

..உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றிக்  கவலைப்படாதே !!!
             
நீ அவர்களுக்கு  இரண்டு அடிக்கு முன்னால்  இருக்கிறாய் என்று பெருமைப்படு!!!! நம்பிக்கை இழக்காதே. கத்தி முனையில், கயிற்றில் நடப்பதைப்போல வாழ்க்கைப் பாதை மிகவும் கடினமானதுதான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடைய நினைத்த உனது இலட்சியம், குறிக்கோளை நோக்கி பீடு நடை போடு. வெற்றி உன் பாதையில் வந்து உன்னை வாழ்த்தி வரவேற்கும்.


நீ செய்யும் எந்தக் காரியத்தையும் ஒரே மன முனைப்புடன் செய். மனம் சிதறிவிடாமல் பார்த்துக்கொள். மனம் ஒரு முகப்படப்பட தன் ஆற்றல் ஒரே இடத்தில் நிலை பெறுகிறது. இது தான் மனதின் ஆற்றல் என்பது.


இன்றையப் பொன்மொழி

வெற்றி   என்பது   நம்மை   உலகத்திற்கு  அறிமுகம்   செய்வது  !!

தோல்வி என்பது  நம்மை   நமக்கே  அறிமுகம்  செய்வது !!!

''பலமே வாழ்வு; பலவீனமே மரணம்''   


பயமில்லை... பயமில்லை என்று எப்போதும் முழங்கு; 
பயம் கொள்ளாதே' என எல்லாரிடமும் சொல். 
பயமே மரணம், பயமே பாவம், பயமே நரகம்' என அறிவுறுத்தினார் விவேகானந்தர். 

'மனிதன், ஓர் உண்மையில் இருந்து மற்றொரு உண்மைக்குப் போகிறான்' என்றார் சுவாமிஜி.
சுவாமிஜி பற்றி சிந்திக்கும் போது, அவரது அச்சமற்ற தன்மை நமக்கும் கிடைக்கும். 

வனத்தில் தியானம் செய்தார். இருள் சூழ்ந்த நிலை... அவரின் எதிரே - ஆன்மப் பசியுடன் அமர்ந்திருந்தவரின் முன்பு வயிற்றுப் பசியுடன் ஒரு புலி! சுவாமிஜியோ சஞ்சலம் அடையவில்லை. புலியும் அமைதியாக இருந்தது; 
 அச்சமற்ற நிலையில் இருந்த சுவாமிஜியை ஒன்றும் செய்யாமல், தன் வழியே சென்றது புலி! 

சகிப்புத்தன்மை வேண்டும்
 • இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும், பயத்தை உண்டுபண்ணுகிற எதையும் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றுடன் போராட வேண்டும். பயந்து ஓடலாகாது.

சிகாகோ சர்வ சமய மாநாட்டில் பேச அழைத்த போது, ஒருவித தயக்கத்துடன், ''பிறகு பேசுகிறேன்'' என்று பலமுறை கூறினார்.
முடிவில் மேடைக்கு சென்றார். 

அப்போது சரஸ்வதி தேவியை பிரார்த்தித்தார். அவள் அருளும் கிட்டியது. 

அவரின் உரை, உலகத்தையே நம் நாட்டை திரும்பி பார்க்க வைத்தது. -

 இந்த சம்பவங்கள்... சுவாமிஜியே சற்று பயந்தார் என்பதைக் காட்டினாலும், அவர் அந்த பயத்தை எப்படி தனது அறிவுக்கூர்மையாலும், இறைவனிடம் பிரார்த்தித்ததன் மூலமும் வென்றார் என்பதை உணர்த்துகின்றன. 

பயத்தை எப்படி வெல்வது? பயம் யாருக்கு வரும்? தன்னம்பிக்கை குறைவாக உள்ளவர்க்கே பயம் வரும்.

முதலில் உன்னிடமே நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே உள்ளன' என்றார் சுவாமிஜி. 
Comments

 1. சிறப்பான பலமான கருத்துக்கள்...

  நன்றி...

  ReplyDelete
 2. திண்டுக்கல் தனபாலன் said...
  சிறப்பான பலமான கருத்துக்கள்...

  நன்றி...//

  பலமான கருத்துரைக்கு நிறைவான நன்றிகள்...

  ReplyDelete
 3. அருமையான பகிர்வு ..... அற்புதமான படங்கள் .... நல்ல கருத்துக்கள் அம்மா.

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்