தண்ணீரில் அமிழ்ந்த படியே சைக்கிளில் பெடலிங் பயிற்சி!உடல் சிக்கென்று கச்சிதமாக  நனை என்று பொருள் படும்   FitWet  என்ற இது உடல் பயிற்சி நிலையங்களில் சமீபத்திய வரவு. வழக்கமாக உடல் பயிற்சி முடிந்தபின் தண்ணீரில் நனையும் படி குளியல் தொட்டியில் அமிழ்ந்து அமரலாம். இதையே உடல் பயிற்சி செய்தபடியே தண்ணீரில் அமிழும் படி பெடலிங் சைக்கிளை இயக்கம் புது முறை வந்துள்ளது

இந்த பெடலிங் சைக்கிள் காற்றைப் போல   4  மடங்கு அழுத்தம் ஏற்படுத்துவதால் நல்ல பிரயாசைப் பட்டு பெடலை சுற்ற வேண்டும். இதனால் நல்ல உடல் பயிற்சி.   உடல் பயிற்சி செய்யும் போதே பார்க்க தொடு திரை தொலைக் காட்சி பெட்டி மற்றும் கட்டுப்பாட்டுப்  பலகை இத்துடன் இணைந்துள்ளது. துண்டு வைத்துக் கொள்ளும்  அலமாரி   மற்றும் கோப்பை வைக்கும் தாங்கியும் இதில் உண்டு

ஒருவர் பயன் படுத்தியவுடன் அதில் அவருடைய வியர்வை கலந்து விடும் என்பதால் அடுத்தவர் பயன் படுத்துமுன்  தண்ணீர் மாற்றப் படும். தண்ணீர் மாற்றி முடிக்க  ஏழு நிமிடங்கள் ஆகும். நல்ல பயனுள்ள இதன் விலை  சும்மா   18,000 டாலர்(!) மட்டுமே என்பதால் நல்ல வசதி வாய்ந்தவர்கள் வரும் வசதியான உடல் பயிற்சி நிலையங்களில் மட்டுமே இதைப் பார்க்க முடியும். காலப் போக்கில் எல்லாரும் பயன்படுத்தும் படி விலை குறையலாம் 


Comments

  1. நான் இதிலேயே பார்த்துவிட்டேன்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்