எண்ணெய் வள நாடு சவுதி அரேபியாவும் மாற்று எரி சக்திக்குப் போகிறது! 


 இந்த செய்தி அறிந்த போது மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. உலக நாடுகள் எல்லாம் பெட்ரோல் தேவைக்காக பெட்ரோல் உள்ள அரபு நாடுகளை எதிர் பார்த்து இருக்கின்றதால் பெட்ரோலை கறுப்புத் தங்கம் என்று அழைக்கிறார்கள். இந்த பெட்ரோலை வைத்துக் கொண்டு எண்ணெய் வள நாடுகள் பணம் கொழிக்கும் நாடுகளாக இருந்து வருகின்றன.  விண்வெளிக்கே போய் விடும் போல் இருக்கும் பெட்ரோலின் விலை , அதன் பயன் பாட்டால் விளையும் சுற்று சூழல் கேடு , மற்றும் புவி வெப்ப மயமாதல் இவை எல்லாம் நாம் மாற்று எரி சக்திக்கு போகலாமே என்று அனைத்து நாடுகளையும் யோசிக்க வைக்கின்றன. இதனால்  சூரிய மின் சக்தி மற்றும் காற்று மின் சக்தி பயன் பாடு  அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் எண்ணெய் வள நாடு சவுதி அரேபியாவும் 100 சத மாற்று புதுப்பிக்கக் கூடிய சக்திக்கு மாற வேண்டியிருக்கும் என்று அதன் இளவரசர் டர்கி அல் பைசல் கூறியிருக்கிறார். இதுதான் அந்த ஆச்சர்யமான  செய்தி

இது உடனடியாக நடக்கக் கூடிய இல்லா விட்டாலும் பெட்ரோல் வளங்கள் அனைத்தும் காலியாகும் நிலை வரும் போது கண்டிப்பாக நடக்கும். கொளுத்தும் வெய்யில் , நிறைந்த இட வசதி எல்லாம் இருக்கிற சவுதி அரேபியாவில் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் வாய்ப்பு அதிகம். அதன் மூலம் பக்கத்து நாடுகளுக்கு மின்சாரம் வழங்கும் நிலைக்கு சவுதி அரேபியா வர முடியும் என்று அதன் இளவரசர் கூறியுள்ளார். இது அவரது தொலை நோககையும் காலத்தின் கட்டாயத்தையும் உணர்த்துகிறது. மாற்று எரி சக்திக்கு கொஞ்சம் முன் கூட்டியே போவது இருக்கும் எண்ணெய் வளத்தை நீட்டிக்கவும் உதவும்

எப்போது இந்த யோசனை வந்து விட்டதோ அதை நடை முறைக்கு கொண்டு வரும் ஆயத்த வேலைகளும் அங்கு தொடங்கும் என்று எதிர் பார்க்கலாம் 


Comments

 1. அங்கேயே இப்படியா...? ...ம்...

  நன்றி...

  ReplyDelete
 2. மாற்று எரி சக்திக்கு கொஞ்சம் முன் கூட்டியே போவது இருக்கும் எண்ணெய் வளத்தை நீட்டிக்கவும் உதவும்.

  ReplyDelete
 3. ippothaiya nilayil angu maatru sakthi enpathu kandippagath thevai enru solla mudiyaathu. muzhuvathum ennai theerntha nilayil angum maatru sakthigal thaan payan padum enra adippadaiyil saudi arabia thittam idukirathu. athai thaan nanum pathivittu irukkiren. Nanri.

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்