எண்ணம் போல் வாழ்வு ..


Flowers gift animated gifFlowers gift animated gif

Flowers gift animated gif

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்”.

தான் எண்ணியதை எண்ணியவாறே பெறுபவர் யாரென்றால், தான் எண்ணிய செயலை உறுதியுடன் திண்ணமாக நடத்திச் செல்பவர்களே. வாழ்வெனும் ஊர்தியின் அச்சாணி நம்பிக்கை. 

வாயுவினால் நிரப்பப்படாத பலூன்கள் வியாபாரியிடமேதான் இருக்கும். விண்ணிலே பறக்க இயலாது. 
நம் மீது நம்பிக்கை வைப்போம். 

எச்செயலிலும் நம்பி – கை – வைப்போம்.எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்..

நம் எண்ணங்களே செயல் வடிவமாக மாற்றம் பெறுகின்றன. நாம் எண்ணாத எந்த செயலும் செயலாக உருப்பெறுவது இல்லை. 

நம்பிக்கையே வாழ்வின் அடித்தளமாக விளங்குகிறது. 

நம்பிக்கையின் நிலைக்களனாக விளங்குவது மனமே.

“நீ உன்னை எவ்வாறு எண்ணுகிறாயோ, அவ்வாறே மாற்றம் பெறுகிறாய். நீ உன்னை வலிமை படைத்தவனாக எண்ணினால் வலிமை பெற்றவனாக மாறுகிறாய். 
நீ உன்னை நோயாளியாக எண்ணினால் நோயாளியாக மாற்றம் பெறுவாய்” என்கிறார் விவேகானந்தர்.

.
முதலில் நம்மிடத்திலேயே நாம்  நம்பிக்கை வைக்கபழக வேண்டும்..
 அதுதான் வழி. நம்மிடத்தில்  நம்பிக்கை வைத்தால் எல்லா ஆற்றல்களும் நமக்குள்ளேயே இருப்பதை உணர்ந்து  அந்த ஆற்றலை வெளிப்படுத்த இயலும் ..

 நாம் எதையும் சாதிக்க வல்லவர் என்று சொல்லிஉறுதியுடன் விஷத்தைப் பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷம்கூடச் சக்தியற்றதாகிவிடும்.

தெய்வங்களிடத்து நம்பிக்கை இருந்து,  நம்மிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால்  கதிமோட்சமில்லை.

              


Comments

 1. அருமையாக சொல்லி விட்டீர்கள்...

  நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. டுக்கல் தனபாலன் says: October 23, 2012 8:31 AM Reply
  அருமையாக சொல்லி விட்டீர்கள்...

  நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...//

  வாழ்த்துகளுக்கு நன்றிகள்..

  ReplyDelete
 3. ''நம்பிக்கை'' நம்மேல் வைக்க நாம்பழகவேண்டும் மிகசரியான கோணம்.

  ReplyDelete
 4. மதுரகவி says: October 23, 2012 11:04 AM Reply
  ''நம்பிக்கை'' நம்மேல் வைக்க நாம்பழகவேண்டும் மிகசரியான கோணம்./

  Thank you....

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்