வெற்றி தரும் முயற்சி
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் ” என்றார் திருவள்ளுவர். 

இறைவனால் முடியாத செயலைக் கூட, விடா முயற்சியினால் அடைந்துவிடலாம் 

நல்ல சிந்தனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் வகுத்து அதற்கான உழைப்பு இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

தீதும், நன்றும் பிறர் தர வாரா" என்பது முதுமொழி. 

முயற்சியும் உழைப்பும் இருந்தால் தெய்வபலம் தானாகவே உண்டாகும். நல்லவனாக இருந்தால் மட்டும்போதாது. அதுபோல, வெறும் பிரார்த்தனையால் மட்டும் முன்னேற்றம் உண்டாகாது. 

வறுமையும் துன்பமும் அகலவேண்டுமானால், நல்ல 
சிந்தனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் வகுத்து அதற்கான உழைப்பு இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். 

தன்னுடைய விதி என்பது மழையைப் போன்றது. அதில் நாம் நனையாமல் காத்துக் கொள்ள தெய்வ வழிபாடு எனும் குடையை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.''

சக்தியிலும் முயற்சிக்கான திறமையிலும் நம்பிக்கை உள்ளவர்கள் நாள்பார்க்க வேண்டிய அவசியமில்லை. 
'நாளென் செய்யும் கோளென் செய்யும்?' என்பார்கள். 
Comments

 1. நல்லதொரு பகிர்வு அம்மா...

  நன்றி...

  ReplyDelete
 2. திண்டுக்கல் தனபாலன் says: October 24, 2012 7:18 AM Reply
  நல்லதொரு பகிர்வு அம்மா...

  நன்றி...//

  கருத்துரைக்கு நன்றிகள்..

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்