நம்பிக்கையின் ஆற்றல்

நம்பிக்கை இல்லாமல் செய்யும் எந்த செயலுமே முழுமையான பலனைத் தருவதில்லை.

தன் நம்பிக்கை....அது மனிதனின் முதுகெலும்பு....

ஈரம் இருக்கும்வரை இலைகள் உதிவதில்லை -  நம்பிக்கை இருக்கும் வரை நாம் தோற்பதில்லையே !

மானம் உள்ள மனிதனுக்குள் மறைந்து கிடப்பதும் நம்பிக்கை;

சோம்பல் விலக்கினால் ஆற்றல் பெறும் வாழ்க்கை...!!!!!

வானம் ஏகும் பறவைகட்கு வாய்த்தச் சிறகே நம்பிக்கை;

கானம் பாடும் குயிலுக்கு குரலின் மீதே நம்பிக்கை;

ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்திருக்கிறது ..

ஒவ்வொரு தினமும் புது நம்பிக்கையொன்றை தன்னுடனேயே சுமந்து வரும் ஒவ்வொரு விடியலும்!.

தன்னைத்தானே செதுக்கிக்கொண்டிருக்கும் நம்பிக்கைக் கல்லினுள்ளே.. இருப்பது மூர்த்தமா, வேறொன்றாவென்று அறியும் ஆவலில், நின்று கவனித்துப்போகின்றன; நம்பிக்கையும் விடியலும்.


செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது. உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும். ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம் 


 “நம்பிக்கை இருந்தால் வாழ்வில் எதுவும் ஒரு நாள் சாத்தியமாகும்” ஒவ்வோருக்குள் இருக்கும் மன தைரியம்தான் நம்பிக்கை.
நம்பிக்கையே என்றும் நம்துணை

நம்பிக்கையும் துணையுமே நம்வாழ்கை...


Comments

 1. சிறந்த நம்பிக்கை பகிர்வு... நன்றி அம்மா...

  பின் வரும் நண்பர்களுக்கு :

  ஆபாச படம் தெரிவதால் இன்ட்லி Follower Gadget வைத்திருந்தால் உடனடியாக நீக்கிவிடவும்... (உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்) அது போல் இன்ட்லி ஓட்டுப்பட்டையையும் எடுத்து விடவும்... தளம் திறக்க நேரம் ஆகிறது... இதை நண்பர்களிடமும் தெரிவிக்கவும்...

  நன்றி...

  ReplyDelete
 2. ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியமாகும்.
  உங்களுடைய படங்களும், பகிர்வும் அருமை வாழ்த்துக்கள் அம்மா...

  ReplyDelete
 3. திண்டுக்கல் தனபாலன் says: October 25, 2012 8:45 AM Reply
  சிறந்த நம்பிக்கை பகிர்வு... நன்றி அம்மா...//


  கருத்துரைக்கு நன்றிகள்..

  ReplyDelete
 4. தொழிற்களம் குழு says: October 25, 2012 10:53 AM Reply
  ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியமாகும்.
  உங்களுடைய படங்களும், பகிர்வும் அருமை வாழ்த்துக்கள் அம்மா...//

  வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்