இருட்டில் ஒளிரும் ஆடைகளுடன் அலைகளின் மீது விளையாட்டு!
கடல் மீது பலகைகளின் மேல் ஏறி  சறுக்குவது போல விளையாடும் பழக்கம் மேலை நாடுகளில் உண்டு(surfing on surfboards). இருட்டு நேரத்தில் கடல் மீது அப்படி விளையாடுவது எளிதான விசயமில்லை.

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த கோடையை வரவேற்போம் திருவிழாவின் போது துணிச்சல் காரர்கள் இருட்டில் ஒளிரும் ஆடைகளை அணிந்து கடலில்  அலைகளின் மீது சறுக்கி விளையாடினார்கள். இந்த ஆடை ஒளி விடுவதாக இருப்பதால் கடலில் அவர்களைச் சுற்றி வெளிச்சம் ஏற்பட்டு எளிதாக விளையாட முடிந்தது.  இந்த இருட்டில் ஒளிரும் ஆடை  நியான் அல்லது ஒளி உமிழும் டையோடு(Light Emitting Diode -LED)   தொழில் நுட்பத்தை பயன் படுத்துகிறது என்று சொல்கிறார்கள். எப்படியோ பார்க்க பரவசமூட்டும் ஒரு வீர விளையாட்டு இது.Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்