Ads Top

வெற்றி உறுதி



















முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது இனிய மொழி ..

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்


 விடா முயற்சியே வெற்றிக்கு அடிப்படை..


தற்காலிகப் பின்னடைவுகளை சாதனைக்கான படிக்கட்டுக்களாக மாற்றிவிட முயன்றால் சாத்னை புரியலாம்...


அனைத்து வெற்றியாளருமே பயங்கரமான தடைகளை தாண்டி வந்தவர்களே என்பதை ஒவ்வொருவரும் புரிந்து நடக்க வேண்டும்.



தோல்வியைத் தழுவிய பலரும் விட்டு விட்டு பின்வாங்கிய போதுதான் வெற்றிக்கு மிகவும் அருகில் இருந்திருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்துள்ளனர்.
கடமையை இஷ்டப்பட்டு பொறுப்பாய் சிரத்தையாய் செய்தால் வெற்றி

 எவ்வளவுதான் நிலமை மோசமடைந்தாலும் முயன்று கொண்டே இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும்.
பொறுமை அவசியமானது... வெற்றி மிதிவண்டி பழகுவது போல.பழகும் வரைதான் முயற்சியும் கஷ்டமும் ... பழகினால் மறக்க சிரமம்.

Picture
POSITIVE ATTITUDE நற் சிந்தனைகள், செயல்கள்
நம் நம்பிக்கையை  அதிகமாக்கி மகிழ்ச்சியையும், தனித்துவத்தையும் , வெற்றியையும் 
தரும்.

தோல்வி வெற்றியைத் தரும் என்பதற்கு உத்தரவாதமில்லை ஆனால் தோல்வியை சாதகமாகப் பயன்படுத்தினால் வெற்றி பெற முடியும்.
சாத்தியமான குறிக்கோள்களை வைத்துக்கொண்டு, அதை அடைய
ஏதாவது கற்கவேண்டியிருந்தால் கற்று திறமையை வளர்த்துக்
கொள்ள வேண்டும்

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மாறும் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளும்
மனம் இருந்தால் மார்கமுண்டு.


Clown animated gifClown animated gif









4 comments:

  1. நல்ல பல கருத்துக்கள்... பாராட்டுக்கள்...

    நன்றி அம்மா...

    ReplyDelete
  2. தோல்வி வெற்றியைத் தரும் என்பதற்கு உத்தரவாதமில்லை ஆனால் தோல்வியை சாதகமாகப் பயன்படுத்தினால் வெற்றி பெற முடியும்.

    அருமையான வரிகள் ! நன்றிங்க சகோ !

    ReplyDelete
  3. திண்டுக்கல் தனபாலன் says: October 29, 2012 7:16 AM Reply
    நல்ல பல கருத்துக்கள்... பாராட்டுக்கள்...

    நன்றி அம்மா...///

    கருத்துரைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  4. akthi says: October 29, 2012 8:56 AM Reply
    தோல்வி வெற்றியைத் தரும் என்பதற்கு உத்தரவாதமில்லை ஆனால் தோல்வியை சாதகமாகப் பயன்படுத்தினால் வெற்றி பெற முடியும்.

    அருமையான வரிகள் ! நன்றிங்க சகோ !/

    கருத்துரைக்கு நன்றிகள்..

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.