தன்னம்பிக்கை தங்க வரிகள் ....விவேகானந்தரின் வழித்தடங்களை வாழ்க்கையின்விவேகம் நிறைந்த உன்னத பாதைபயணிப்போர் பலன் பெறுவர்.உலகமே பார்க்க வாழ்பவன் சாதனை மனிதன்.

அச்ச‌ம் என்ப‌து ம‌னித‌னின் இய‌ல்பான‌ நிலையில்லை 

வாழ்க்கைப் பாடத்தில் பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம்… அதை மறந்து விடுங்கள்! ஆனால் அது கற்றுத்தந்த படிப்பினையை ஒரு நாளும் மறவாதீர்கள்!


வாழ்க்கை மிகவும் குறுகியது. மற்றவர்களை வெறுப்பதில் நேரத்தை வீணடிக்க வேண்டாமே ...!

 • வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் நம் முன்னால் எந்தப் பிரச்சினையையும் சந்திக்காமல் முன் செல்கிறோமோ ,  அப்பொழுது தவறான பாதையில் பயணிக்கிறோம்  என்று அறிய வேண்டும்...


இந்த உலகத்தில் வேறு எவருடனும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு செய்தால் நம்மை நாமே  அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது
என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்.   வாழ்க்கையில் உன்னை வரவேற்கு ம் சக்திகளும், அறவே எதிர்க்கும்
சக்திகளும் இருக்கத்தான் செய்யும்.
பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”.Comments

 1. படங்களும் பகிர்வும் அருமை.வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் வெற்றி பெறுவதற்கு நம்பிக்கை வேண்டும்.

  ReplyDelete
 2. படங்கள் அனைத்தும் மிக அருமை....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 3. சிறப்பான பகிர்வு...

  நன்றி...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்