மனிதர்களின் குரலை மிமிக்ரி செய்யும் திமிங்கிலம்!

 
 20121022-131304.jpgஇந்தத் திமிங்கிலங்கள் எழுப்புகிற ஒலியும் ஒலி எழுப்பும் முறையும் மனிதர்களின் குரலில் இருந்து வேறுபட்டவை. இருந்தாலும் பதிவு செய்யப் பட்ட திமிங்கிலங்களின் ஒலி ஆராய்ச்சி அவை மனிதர்கள் போல ஒலி எழுப்ப முயற்சிப்பதை உறுதிப் படுத்தி உள்ளன. பிராணிகளை போல மனிதர்கள் மிமிக்ரி செய்யும் போது பிராணிகள் மனிதர்கள் மாதிரி மிமிக்ரி செய்யக் கூடாதா என்ன?

 1984  ஆம் வருடம் தேசிய கடல் வாழ் உயிரினங்கள் நிறுவனத்தை சேர்ந்த ரிக்வே முதல் முதலாக திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வழக்கத்திற்கு மாறான ஒலிகள் வருவதைக் கேட்டார். அது தூரத்தில் மனிதர்கள் பேசும் போது அது நமக்கு விளங்கிக் முடியாத படி இருப்பது போலவே இருந்தது.இதற்க்கு கொஞ்ச நேரம் கழித்து கடலில் ஸ்கூபா உடையில் மூழ்கி நீந்தும் ஒருவர் வெளியில் வந்து என்னை யார் வெளியில் வரச் சொன்னது என்று கேட்டார். நம்முடைய பேட்டையிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறாரே அதனால் அவரை வெளியில் கிளப்ப திமிங்கிலமே வெளியே வா என்று சொல்லியிருக்குமோ?!

இந்த ஒலிகள் ஒரு குறிப்பிட்ட வெள்ளைத் திமிங்கலத்திடம் இருந்து வருவது தெரிய வந்தது.அந்தத் திமிங்கலத்திற்கு NOC  என்று பெயர் வைத்து அதை கண்காணித்து வந்தார்கள் .இந்தத் திமிங்கலம் மனிதர்கள் மற்றும் டால்பின்கள் நடமாடும் பகுதியில் இருந்து வருவது தெரிய வந்தது


இது மனிதர்களை போல ஒலி எழுப்புவதை உறுதி செய்ய அதன் ஒலிகள் பதிவு செய்யப் பட்டு ஆய்வு செய்யப் பட்டது. ஆய்வின் போது அதன் ஒலி மனித ஒலி போலவே இருப்பது தெரிந்தது. இது அதன் வழக்கமான ஒலி அல்ல.மனித ஒலியை மிமிக்ரி செய்வதாக இருந்தது.

இந்த   திமிங்கிலம் மனிதர்களைப் போல தொண்டை வழியாக ஒலி எழுப்பவதில்லை.  மூக்கு வழியாக அதை செய்கிறது, மனிதர்கள் குரல் போல வர மூக்கு வழியாக வரும் ஒலி எழுப்பும் முறையை கொஞ்சம் மாறுபடுத்தி மிமிக்ரி செய்கிறது.

இந்த குறிப்பிட்ட  NOC    திமிங்கிலம்    5   ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டது. இருந்தாலும் இது போல வேறு திமிங்கிலங்களும் மிமிக்ரியை தொடரலாம்!Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்