காற்றைச் சுத்தப்படுத்தும் துணி!
சுற்றுச் சூழல் கெடாத வகையில் பசுமை வண்ணங்கள் , பசுமை நூல் இணைந்து பசுமை துணிகள் உருவாக்கப் படுகின்றன, ஆனால் மாசு அடைந்த காற்றையே சுத்தப் படுத்தும் துணி என்பது புதிது. இன்னும் ஆய்வு நிலையில் இருந்தாலும் ஒரு அருமையான முயற்சி. இதன் மாதிரியும் பார்வைக்கு வந்துள்ளது.
ஷெபீல்டு பல்கலைக் கழக அறிவியல் ஆய்வாளர் டோனி ரியான் மற்றும் லண்டன் பாஷன் கல்லூரி வடிவமைப்பாளர் ஹெலன் ஸ்டோரியும் இணைந்து நாகரீகமும் வேதியியலும் இணைந்த கிரியா ஊக்கித் துணியை உருவாக்கி உள்ளார்கள் இந்த சிறப்புத் துணியில் டைடானியம் டை ஆக்சைடு கலக்கப் பட்டு அது துணி துவைக்கப் படும் போது தண்ணீருடன் கலந்து வினை புரியும் அயனிகளாக மாறுகிறது. காற்றில் நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் ஆவியாகும் அசுத்தங்களை இவை வினை புரிந்து அகற்றுகின்றன. இந்த துணி அணிந்தவர்களிடம் இவை அணுகாது. ஆமாம் மாசு மற்றும் அசுத்தங்களின் எதிரி இந்தக் கிரியா ஊக்கித் துணி.
கீழே உள்ள ஜீன்ஸ் அந்த துணியில் தயரானவைதான்
நல்லதொரு தகவலுக்கு நன்றி...
ReplyDelete