கிட்டார் வேணுமா? அச்சடித்து எடுத்துக்குங்க!


 

 இந்தப் படத்தில் இருக்கும் கிட்டாரைப் போல அச்சடித்து எடுத்துக் கொள்ளலாம். வெறும் அச்சில்லைங்க.நிஜம்! முப்பரிமாண அச்சடித்தல் என்ற புதிய தொழில் நுட்பம் பொருட்களை , கட்டிட பாகங்களை அச்சடித்து எடுத்துக் கொள்ள வழி செய்கிறது.  உண்மையான பொருட்களாக வெளியில் வரும் இவற்றை வைத்து நமக்கு வேண்டிய பொருட்களை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த கிட்டார் ஸ்காட் சும்மிட் என்பவரால் கணினியில் வடிவமைக்கப் பட்டு முப்பரிமாண அச்சடிப்பான் மூலம் அச்சடித்து எடுத்துக் கொள்ளும் படி உள்ளது. இதன் கழுத்து  ஸ்டைன் லெஸ் ஸ்டீல் ஆல் ஆனது. தலைப்பகுதியில் வெள்ளியால் அச்சடிக்கப் பட்டு பள பள என்றிருக்கிறது

என்ன கிட்டார் ஒண்ணு எடுத்துக்கலாமா?

Comments