சந்திரனில் இருக்கும் தண்ணீர் எங்கிருந்து வந்தது?

  


 பார்க்க வெறுமையாக வெறும் பாறை , தரைகளுடன் உள்ள சந்திரனிலும் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது நமது சந்திராயன் வாகனம் மூலம். சரி . இந்த தண்ணீர் எப்படித்தான் அங்கு வந்திருக்கும்?

வழக்கமாக விண் பாறை மற்றும் வால் நட்சத்திரம் மோதுவதால் அவற்றில் உள்ள தண்ணீர்  மோதும் பகுதியில் வந்து விடுகிறது. இப்படி வந்த தண்ணீரில்  ட்யூடேரியம்  இருக்கும், இந்த தண்ணீரில் அது இல்லை. அப்படி என்றால் வேறு எதோ வகையில் தான் இந்த தண்ணீர் வந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள் இது பற்றி ஆராயும் யாங் யூ  மற்றும் டைலர் ஆகிய டென்னஸ் பல்கலை கழக விஞ்ஞானிகள் சந்திரனில் இருந்து கொண்டு வரப் பட்ட மண் மாதிரியை ஆராயும் போது அதில் ஹைட்ராக்சில் அயனிகள் இருப்பது தெரிய வந்தது. அப்படியானால் சக்தி வாய்ந்த சூரியக் காற்று அதன் மீது வீசும் போது அதில் உள்ள ஹைட்ரஜன் சந்திரனின் மேற்பரப்பில் உள்ள ஆச்க்சிஜனுடன் சேர்ந்து ஹைட்ராக்சில் மற்றும் தண்ணீர் உண்டாகி இருக்கும் என்று முடிவு செய்தார்கள்

சந்திரனில் தண்ணீர் இருப்பதில் ஒரு சௌகர்யம் என்னவென்றால் அங்கு குடியிருப்புகள் அமைய உதவும் . அதை விட முக்கியமாக ராக்கெட்டில் பயன் படுத்தும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை இந்த தண்ணீரில் இருந்து பிரித்து எடுத்துக் கொள்ளலாம். சந்திரனில் இருந்தே வேறு கிரகங்கள் செல்ல இது வெகுவாக உதவும்.  இங்கிருந்து தண்ணீரை சந்திரனுக்கு கொண்டு செல்வது மிக மிக செலவு பிடிக்கும் ஒன்று என்பதால் இது  ஒரு வர பிரசாதம் 

    Get Your Online Business

  • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

    Brand Promotion

  • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்