ஒளி ஊடுருவும் சூரியப் பலகைகள் மூலம் மின் சக்தி தயாரிப்பு


 
 Sharp see-through solar panels


 ஒளி ஊடுருவும் சூரியப் பலகைகளை ஜன்னல்களாகவும் மாடிக்  கைப்பிடி சுவர்களாகவும் அமைத்து மின்சக்தி தயாரிக்கும் முறையை ஷார்ப் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. முழுக்க ஊடுருவாமல் தேவையான அளவு  மட்டும் ஒளி செல்லும் என்பதால் கொஞ்சம் கண் மறைவாகவே இருந்து கொள்ளலாம். படத்தில் இந்த அடுக்கு மாடி சூரியப் பலகை கைப்பிடி சுவர்களைப் பார்க்கலாம்

சாதாரண சூரியப் பலகைகள்  12 முதல்  15   சதம் வரை  சூரிய ஒளியை மின் சக்தி ஆக மாற்றும் திறன் உள்ளவை. இந்த வகை சூரியப் பலகைகள் 6.8  சதம் மட்டும் திறனுடையவை. இருந்தாலும் வழக்கமான சூரியப் பலகைளுடன் இவற்றையும் இவற்றையும் இணைத்து சூரிய சக்தி மூலம் மின் சக்தி பெறுவதை அதிகப் படுத்தலாம். இந்தப் பலகைகள்  4.5 அடி நீளமும்   3.2  அடி உயரமும் கொண்டவை. மிக மெலிதான இவற்றின் பருமன் .37   இன்ச்சுகள் மட்டுமே

ஜப்பானில் இந்த அக்டோபரில் தான் அறிமுகப்  படுத்தப் பட்டுள்ளது. வரவேற்பைப் பொறுத்து ஏற்றுமதியும் செய்யப் படும் . அடுக்கு மாடிக் கட்டிடங்களில் மிகவும் உபயோகமாக இருக்கும். கட்டிட உபோயோகிப்பாளர்கள் யன் பெறுவார்கள்

Comments

  1. அருமையான கண்டுபிடிப்பு.

    ReplyDelete
  2. parattu kandupidithavagalukku poi serattum. nanri.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்