செவ்வாய் கிரகத்திலிருந்து வந்து விழுந்த விண்கல்!


 


செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய    க்யுரீயாசிட்டி மற்றும் ஆப்பர்சூனிட்டி தானியங்கி வாகனங்கள் அங்கு தரை இருக்கப் பட்டிருக்கின்றன. இவை அங்கே இருக்கும் மண், பாறை , வேதிகள் மற்றும் சுற்று சூழல் எல்லாம் ஆய்வு செய்யும். ஒரு கால கட்டத்தில் அங்கிருந்து மாதிரி எடுத்து வரவும் திட்டங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் நம்முடைய எந்த முயற்சியும் இல்லாமால் செவ்வாய் கிரகத்தில் இருந்து விண்கற்கள் வந்து விழுந்துள்ளன.  படத்தில் இருக்கும் விண்கல்லும் அப்படி விழுந்ததுதான். மொராக்கோ பாலை வனத்தில் வந்து விழுந்த விண்கற்களில் இதுவும் ஒன்று. இந்த கற்கள் செவ்வாய் கிரகத்து அமைப்பை அறிய வெகுவாக உதவும்

1.1 கிலோ  எடையுள்ள இந்த விண்கல்லின் மேற்பகுதி பள பளப்பான உருக்கப் பட்ட கண்ணாடி போல் உள்ளது. இதன் உட்புறம் பார்க்கும் போது அட்டகாசமான மஞ்சள்  மற்றும் பச்சை மேடுகளும் கறுப்புக் கண்ணாடிப் பொருளும் தென்படுகின்றன.

விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்பாறைகள் செவ்வாய் கிரகத்தின் மீது மோதி  கிரகத்தில் உள்ள பாறைகளை பெயர்த்தெடுத்து விடுகின்றன. இவையும் விண் வெளியில் சுற்ற ஆரம்பித்து பூமியிலும் வந்து விழுகின்றன

கடந்த ஜூலையில் இது போன்ற விண்கற்கள் ஒரு கூட்டமாக மொரோக்கோ பாலை வனத்தில் வந்து விழுந்தன. நல்ல வேளை! எங்காவது மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் விழுந்து இருந்தால் யார் மண்டையாவது பனால் ஆகியிருக்கும்! டிசின்ட் விண்கல் என்று அழைக்கப் படும் இந்த ஒரு விண்கல்லே செவ்வாயின் மேற்பரப்பு , அதன் உட் பாகம் மற்றும் சுற்று சூழல் அனைத்தையும் அறியும் வண்ணம் அமைந்துள்ளது. இதில் இருக்கும் கறுப்புக் கண்ணாடி விண் பாறை செவ்வாய் கிரகத்தின் மீது மோதியதில் உண்டான உருகுதலில் உண்டாகியிருக்கும் என்று நினைக்கிறார்கள் இதை ஆராய்ந்த மொரக்க்கோ பல் கலைக் கழக அறிவியல் ஆய்வாளர்கள்

இது ஒரு எரி மலைப்  பாறை போல உட்பொருட்களைக் கொண்டு இருக்கிறது. இது செவ்வாயின் உட்புறத்தில் இருந்து வந்திருக்கலாம் என்றாலும் இதில் காணப் படும் கந்தகம், ப்ளுரின் மற்றும் சீசியம் போன்ற அபூர்வ மூலகங்கள் இது செவ்வாய் மேற்பரப்பு பொருட்களையும் செவ்வாய் சுற்று சூழல் மண்டலக் குமிழிகளையும் கொண்டுள்ளது.

இது மட்டுமல்ல உயர் சக்தி காஸ்மிக் கதிர்கள் மோதலால் ஹீலியம் , நியான் , மற்றும் ஆர்கான் ஐசோடோப்புகள்(isotopes) (வழக்கமான மூலகத்தை போல் அமைப்பும் ஆனால் எடை மற்றும் வேறுபாடும் தனிமங்கள்) இதில் உள்ளன. இந்த ஐசோடோப்புகள் இந்த விண்கற்கள் விண்வெளியில் ஒன்றல்ல இரண்டல்ல  7,00,000 ஆண்டுகள் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்து விட்டு பூமியில் வந்து விழுந்துள்ளன என்பதைத் தெரியப் படுத்துகின்றன
 

Comments

  1. இதைபோல மனிதர்களும் வந்துவிடபோகிறார்கள். நல்லாசோதனை செய்யசொல்லுங்க.

    ReplyDelete
  2. sevvai kiragathil manithargal iruppathagath theriavillai. irunthaal athu theria varum. parakkum thattukkal varukinrana athil veru kiraga manithargal varugirkal enrellam solkiraargal.ethuvum nirupanam agavillai

    ReplyDelete
  3. Nice Info Sir Thanks

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்