எனக்கு ஏன் வயசாயிட்டே இருக்கு?

 

 
இந்த வயசாவது என்பது எனக்கு மட்டுமில்லை. உங்களுக்கும் தான்,  எல்லோருக்கும் தான்!  எப்போது வயசாக ஆரம்பிக்கிறது என்றால் அது பிறந்த உடனேயே என்றுதான் சொல்ல வேண்டும். அப்போதுதான் குழந்தை வளர்ந்து பெரியதாகும்.
 
நமக்குள் இருக்கும் மரபணு என்கிற அற்புதமான சமாசாரம்தான் நாம் என்ன குணத்தோடு இருக்கிறோம் எப்படி உடல் வளர்ச்சி பெறுகிறோம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. கால கடிகாரம் இதில் சேர்த்து இணைக்கப் பட்டிருக்கிறது. இப்போது பகலா விழித்திரு. இரவா தூங்கு என்ற உணர்வுகளை ஏற்படுத்தும் உயிரியல்  கடிகாரம் இது.  உயிரியல் கடிகாரம் எவ்வளவு வயது ஆகிறது என்பதைப்  பொறுத்தே நமது உயிரியல் வயது அமைகிறது. நம் நிஜ வயது என்பது கால் ஆண்டுகளைப் பொறுத்த ஒன்று. ஆனால் உயிரியல் வயது நம் உடம்பில் காலம் செல்ல செல்ல எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். நோய்கள் வரமால் நன்கு பராமரிக்கப் படுகிற உடம்பில் உயிரியல் வயது  இளமையாக இருக்கும். உடம்பை பராமரிப்பதில் கவனம் இல்லாதவர்களுக்கு நிஜ வயதைக் காட்டிலும் அதிகமாகக் கூட இருக்கும். எனவே வயதாவது என்பது இந்த உயிரியல் வயதைப் பொறுத்ததே.


 இந்த வயதாவதில் இன்னும் சில விசயங்களும் இருக்கின்றன. நாம் உண்ணும் உணவு செரிக்கும் போது வினை புரிகிற ஆக்சிஜன் அயனிகள் உற்பத்தி ஆகின்றன. இவை என்ன செய்யும் என்றால் நமது மரபணுவை போய் தாக்கி சேதம் ஏற்படுத்தும். அது போக உண்ணும் உணவில் உண்டாகும் கழிவுகள் போல் செல் கழிவுகளும் மரபணுவை தாக்கும்.  இந்த வினை புரிகிற ஆக்சிஜன் தாக்குதலை முறியடித்து கழிவுகளை வெளியேற்றி மரபணு சேதத்தை தவிர்த்தால்  உயிரியல் வயது ஏறி சுர்ரென்று மேலே மேலே போவதை தடுக்கலாம் அல்லது முழுக்க தடுக்க முடியா விட்டாலும் தள்ளிப் போடலாம். கீழே உள்ள படத்தில் வினை புரியும் ஆக்சிஜன் அயனிகள் எப்படி மரபணுவை தாக்குகின்றன என்பதைப் பார்க்கலாம்வினை புரிகிற ஆச்கிஜன் அயநிகளுடன் வினை புரிந்து அகற்ற ஆண்டி
ஆச்கிசிடண்டுகள் என்ற எதிர் ஆக்சிகரணிகள் உதவுகின்றன . முறையான சரி விகித உணவில் இருக்கிற வைட்டமின்கள் மற்றும் தாவர வேதிகள் இந்த எதிர் ஆக்சிகரணிகள் ஆக செயல் படுகின்றன. செல் கழிவுகள் வெளியேறவும் உதவும்.எனவே முறையான சரி விகித உணவு காய் கறி பழங்களுடன் சாப்பிடுவது , நல்ல தூய்மையான தண்ணீர் மற்றும் உணவு , சுற்று சூழல் எல்லாம் நமது மரபணு தாக்கப் படுவதை தவிர்க்கும். அப்படி தவிக்கப் படும் போது நமது உயிரியல் வயது நிஜ வயதை விட இளமையாக இருக்கும்.

இதைத் தெரிந்து கொண்டு சரியான படி நடந்தால் நீண்ட நாள் இளமையாக இருக்கலாம்.  முடிந்த  வரை இயற்கை விவசாயத்தில் விளைந்த நஞ்சு இல்லாத உணவை  சரி விகித உணவாக சாப்பிடுங்கள். இளமையாக இருங்கள்  நானும் முயற்சிக்கிறேன்.நீங்களும் முயலுங்கள். எனது நல் வாழ்த்துக்கள் 

Comments

  1. நல்ல விளக்கமான பகிர்வு...

    இயற்கை விவசாயத்தில் விளைந்த நஞ்சு இல்லாத உணவு கிடைக்க வேண்டும்...

    நன்றி...

    ReplyDelete
  2. athu kidaikkirathu. vilaithaan athigam. niraiya iyarkai vivasayam seythaal konjam vilai kuraiyum

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்