சிகரெட் பாதிப்பை அகற்றும் நிகோடின் தடுப்பூசி!

 

 
சிகரெட் பிடிப்பது கெடுதல் என்று தெரிந்தே புகை பிடிப்பவர்கள் ஏராளம். இந்த பழக்கத்தை விட்டு விடுங்களேன் என்று சொல்லும் போது என்ன செய்யுறது பழக்கமாயிடுச்சு விட முடியலே என்று சொல்லுகிறவர்களும் நிறைய.

சிகரட் மற்றும் இதர புகையிலைப் பொருட்களில் உள்ள நிகோடின் தான் எல்லா கெடுதலையும் செய்கிறது. நிகோடினின் பாதிப்பை அகற்ற ஒரு தடுப்பூசி உருவாக்கப் பட்டுள்ளது. இதை எலிகளுக்கு கொடுத்துப் பார்க்கும் போது நிகோடினுடன் இந்த தடுப்பூசியில் உள்ள வைரஸ் மூலம் வரும் மரபணு இணைந்து மூளைக்கு செல்வதை தடுத்து நிறுத்தி விடுகிறது. அது மட்டுமில்லை உடலை விட்டும் அகற்றப் படும் இந்த நிகோடின்

இதை ஒரு மரபணு சிகிச்சை என்றும் அழைக்கலாம். தடுப்பூசியில் உள்ள ஒரு பாது காப்பான வைரஸ் மரபணு தாங்கியாக உடலுக்குள் போகிறது.
இந்த தடுப்பூசியில் உள்ள வைரஸ் கல்  ஈரலில் போய் இருந்து கொண்டு அதில் உள்ள மரபணு கட்டளைகள் மூலமாக நோய் தடுப்புப் பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த நோய் தடுப்பு பொருள் நிகோடினை ஒரு நோய் கிருமி போலவே எடுத்துக் கொண்டு அதனுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது

இந்த நிகோடின்-நோய் தடுப்புப் பொருள் கூட்டமைப்பு தொடர்ந்து கல் ஈரல் செல்களால் ரத்தத்தை விட்டு வெளியேற்றப் பட்டு உடம்பை விட்டும் கழிவாக வெளியேறுகிறது. இந்த தடுப்பூசி போடப் பட்ட எலிகள் நிகோடின் பாதிப்பால் வரும் ரத்த அழுத்தக் குறைவு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு ஆகியவற்றில் இருந்து விடு பட்டன

நிகோடின் மூளைக்கு போவது தடுக்கப் படுவதால் சிகரெட் குடித்த செயற்கை உற்சாகம் இருக்காது. இதனால் வெறும் சுக்காக இந்த சிகரட் குடிப்பதற்கு இதை விட்டு விடலாம் என்று சிகரட் குடிப்பவர்கள் நினைப்பார்கள். குடிப்பதை நிறுத்தியும் விடுவார்கள் . புகை பிடிப்பதின் பாதிப்பை அகற்றுவது , புகை பிடிப்பதை நிறுத்துவது இரண்டையும் வெற்றிகரமாக செய்கிறது இந்த தடுப்பூசி  இந்தத் தடுப்பூசியின் சூட்சுமம் இதுதான்!
 

Comments

 1. எப்படியோ திருந்தினால் சரி...

  தகவலுக்கு நன்றி...

  ReplyDelete
 2. இது உண்மையான தகவலா?
  உண்மையெனில் பல மனைவிகளும் காதலிகளும் பயனடைவார்கள்

  ReplyDelete
 3. ithu unmaiyana thagaval thaan. en intha santhegam? ariviyal seythigalin adippadaiyil than intha pathivugal podapadukinrana. eppadi irunthaalum payan alikkum enrathatharkku nanri.

  ReplyDelete
 4. அனைத்து குடும்ப தலைவிகளும் மகிழ்ச்சியடையக் கூடிய தகவல்.இது விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும்

  ReplyDelete
 5. innum aaivil irukkirathu. irunthaalum ethir paarkkalaam.

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்