முதலமைச்சரின் தனிபிரிவில் இணையம் முலம் புகார்கள் அளிக்கும் புதிய வசதி

 
 
மக்கள் தங்கள் கோரிக்கையை நேரடியாக முதலமைச்சரிடம் கொண்டு செல்ல முதலமைச்சர் தனிபிரிவு செயல்பட்டு வந்தது. மக்களின் வசதிக்காக அவை இணைய வழியாக புகார் அளிக்கும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் முலம் நாம் பதிவு செய்யும் புகார்களுக்கு பதிவு எண் பெற்று அதன் கோரிக்கை நிலவரத்தை அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
 
 அரசு சேவைகளைப் பெறுவதில் தடையின்மை உருவாக்குதல், தகுதியிருந்தும் தடுக்கப்படும்போது உதவுதல், கோரிக்கைகளை எடுத்துரைக்க வசதி செய்து தருதல், உண்மையான கோரிக்கைகளுக்கு அதற்கேற்ற தீர்வு தருதல் ஆகிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. அனைத்து பொதுமக்களுக்கும் அதிமுக்கிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவானது, மாண்புமிகு முதலமைச்சரின் கோரிக்கை தீர்வு குழுவாக செயல்படுகிறது. விதிமுறைகள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகாமல் நியாயமாகவும் பரிவுடனும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு பதில் நடவடிக்கைகள் இணைய வழி கண்காணிப்பு முறைமை மூலம் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலிருந்தும் உணர்திறனுடன் தேவையான சரியான பயனுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. ஆய்வு கூட்டங்கள் ஒவ்வொறு துறைதோறும் மற்றும் மாவட்டங்கள்தோறும் தொடர்பு அலுவலர்களைக் கொண்டு நடத்தி தாமதங்கள் தவிர்க்கப்படுகிறது.
 

Comments

  1. தகவலுக்கு நன்றி. இந்திய மானில அரசுகள் மக்கள் மீது வரிச்சுமை ஏற்றாது நிதி ஆதாரங்களை பெருக்கி கொள்ள என் யோசனைகளை முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பியிருக்கேன்.

    நம்ம யோசனைகளை அறிய ஆவலா இருந்தா ப்ளீஸ் க்ளிக் தி லிங்க்:

    http://www.kavithai07.blogspot.in/p/blog-page_5106.html

    ReplyDelete
  2. உபயோகமான தகவல்.நன்றி.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்