மங்கலான படத்தை தெளிவாக்கும் மென் பொருள் பயன் பாடு!


நீங்கள் ஒரு போட்டோ எடுக்கிறீர்கள். சரியான படி  போகஸ்(focus)  செய்து எடுக்கவில்லை என்றால் படம்  மொய் மொய் என்று கலங்கலாக இருக்கும். போட்டோ எடுக்கும் பொருளோ , நபரோ நகர்ந்து கொண்டிருந்தாலும் படம் தெளிவாக விழாது. கஷ்டப்பட்டு எடுத்த படம் இப்படி வீணா போச்சே என்று வருந்தத் தேவையில்லை இனி.இந்த மங்கலான படங்களை தெளிவாக்கி பார்க்க ஸ்மார்ட் டீப்ளர்(smart deblur)  என்ற மென்பொருள் பயன் பாடு  பொறியாளார் விளாடிமிர் யுழிகோவ்வால் உருவாக்கப் பட்டுள்ளது. தன்னிடம் இருந்த மாதிரி படம் ஒன்றை வைத்துக் கொண்டு அதை வேண்டுமென்றே கலங்கலாக்கி தனது மென் பொருள் பயன் பாட்டை உபயோகித்துப் பார்த்தார். நல்ல தெளிவான படம் அவருக்கு கிடைத்தது. மேலே உள்ள படத்தில் படம் கலங்கலாக இருக்கும் போது மற்றும் தெளிவாக்கப் பட்டபின் கிடைத்த படம் இரண்டும் உள்ளன; இதைப் பார்க்கும் போதே நல்ல வித்தியாசம் தெரிகிறது

இன்னும் நல்ல வடிகட்டிகளை உபயோகித்தால் இன்னும் துல்லியமான படங்களை உருவாக்கலாம்
 

Comments