தண்ணீருக்கு அடியிலேயே வாழும் தண்ணீர் சிலந்தி!
சிலந்திகளில் எவ்வளவோ வகை உண்டு.. ஆனால் இந்த சிலந்தி ஒன்றுதான் முழுக்க முழுக்க தண்ணீரிலேயே வாழ்கிறது.

இதைக் குதிக்கும் மணி சிலந்தி என்றும் தண்ணீர் சிலந்தி என்றும் அழைக்கிறார்கள்.  இது தன்னை சுற்றி தன்னுடைய பட்டு வலையால் ஒரு தண்ணீர் குமிழ் போல அமைத்து தண்ணீர்  மேற்பரப்புக்கு வந்து காற்றை இழுத்து நிரப்பிக் கொள்கிறது. பின் தண்ணீருக்கு அடியில் வந்து இதற்குள்ளேயே வசித்து  இறைகளையும் உள் இழுத்து உணவருந்திக் கொண்டு காலம் கழிக்கிறது. சமயங்களில் உள்ளே ஆக்சிஜன் தீர்ந்து போகுமானால் தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனை எடுத்துக் கொள்கிறது.தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜன் இது இருக்கும் குமிழிக்கு உள்ளேயே வந்து விடுகிறது. தவிர கரிய மில வாயு குமிழ் வழியாகவே சுற்றியுள்ள தண்ணீருக்குள் செல்கிறது. மொத்தத்தில் இந்த குமிழ் ஒரு நுரையீரல் போல செயல் படுகிறது.

இந்த சிலந்தி ஐரோப்பியா மற்றும் ஆசியாவில் குளங்களில் காணப் படுகிறது . முழுக்க முழுக்க தண்ணீரில் இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு முறை வெளிக் காற்றை இழுக்க தண்ணீர் மேற்பரப்புக்கு வர வேண்டி இருக்கும் Comments

  1. பதுமையானதகவலுக்கு நன்றி...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்