வீரர் பெலிக்சின் துணிகர விண்வெளிக் குதிப்பு!

 இங்கு ஏற்கனவே போட்டிருந்த பதிவின் படி பெலிக்ஸ்  அக்டோபர்  8   அன்று  விண்வெளியின் விளிம்பில் இருந்து குதிப்பதாக இருந்தது.மோசமான காற்று வீசியதால் இது தள்ளிப் போய்  அக்டோபர்  9   அன்று மீண்டும் தள்ளிப் போடப் பட்டது.

காற்று பலமாக வீசும் போது ஹீலியம் அடைத்த பலூன் சேதமடையலாம் என்று இந்த முன்னெச்சரிக்கை. நேற்று ஒருவழியாக இணக்கமான சூழல் நிலவியதால்   55   அடுக்கு உயரமுள்ள பலூனின் முனையில் இணைக்கப் பட்ட ஒரு பெட்டகத்தில்  பெலிக்ஸ் பாம் கார்ட்னர் அமர்ந்து கொள்ள பலூன் உயரே விண்வெளியை நோக்கி மேலே கிளம்பியது பலூன் உயர்ந்து உயர்ந்து உயர்ந்து பலூன் இதற்கு முன் சாதனை அளவான  1,02,800 அடி தாண்டி சென்றது. இவர் மேலே சென்று கொண்டு இருக்கும் போது இதற்கு முன் சாதனையாளர் ஆன ஜோ கிட்டிங்கர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ரெட் புல் ஸ்ட்ராடோஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பெலிக்ஸ் உடன் பேசிக் கொண்டிருந்தார். முந்தைய சாதனை உயரமான 1,02,800  அடியில் இருந்து குதித்தவர் இவர் தான்

பெலிக்ஸ் மேலே சென்று கொண்டிருந்த போது வெளி காற்றின் அழுத்தம் பெட்டகத்தின் அழுத்தம் , வெளிக் காற்றின் வெப்ப நிலை ,பெட்டகத்தின் வெப்ப நிலை எல்லாம் தெரிய வந்தது . வெளிக் காற்றின் அழுத்தமும் வெப்ப நிலையும் பெட்டகத்தின் அளவை விட மிகக் குறைவு. வெளிக் காற்றின் வெப்ப நிலை உறை பனி வெப்ப நிலையை விட குறைவு . பெட்டகத்தில் ஓரளவு வெப்பமாக இருக்கும் படி செய்யப் பட்டிருந்தது

மேலே சென்ற போது பெலிக்ஸ் அணிந்து இருந்த முகக் கவசத்தின் வெப்பமேற்றியில் கோளாறு ஏற்பட்டு இருந்தது. அதை சரி செய்தபடியே மேல்  சென்றார்

 மேலே மேலே பலூன் போய்க் கொண்டே இருந்தது. புறப் பட்ட போது சுருக்கமாகக் காணப் பட்ட பலூன் இப்போது நன்கு விரிந்து ஒரு கோள வடிவம் அடைந்து விட்டது. ஆயிற்று. இவர் போவார் என்று சொல்லப் பட்ட   1,20,000 அடியையும் தாண்டி மேலே போய் விட்டது. போக போக இப்படியே விண்வெளிக்கு உள்ளேயே போய் விடுவார் போல இருந்தது. அவரை அனுப்பிய குழு என்ன திட்டமிட்டு இருக்கிறது என்று இப்போது யோசனை தட்ட ஆரம்பித்தது

1,28,000 அடி வந்ததும் பலூன் ஒரு வழியாக நின்றது

சிறிது நேர ஆயத்த ஏற்பாடுகளுக்கு பிறகு பெட்டகத்தின் படியில் நின்று கையசைத்து விட்டு தபக்! குதித்து விட்டார். இது வரை அவரின் பாதையை துல்லியமாகக் காட்டிக் கொண்டிருந்த காட்சி அமைப்பு இப்போது பிரமிப்பு ஊட்டுவதாக இருந்தது. கீழே வர வர உருண்டு உருண்டு கீழே விழுந்தது பார்க்க வியப்பாகவும் அதே சமயம் பயமாகவும் இருந்தது. இப்படி பாரசூட் இல்லாமல் விழுவதை சுதந்திர கீழே விழுதல்(free fall) என்கிறார்கள். 4 நிமிடங்கள்  20 வினாடிகள் இப்படி விழுந்தவுடன் இதோ பாரசூட் விரிந்து கொண்டு விட்டது!

கட்டுப் பாட்டு  மையத்தில் பலத்த கை தட்டல்! அங்கிருந்து பார்த்துக் கொண்டு இருந்த பெலிக்சின் அங்கிருந்து பார்த்துக் கொண்டு இருந்த பெலிக்சின் தாய் தந்தை கண்களில் பரவசம்! சாதனை நிகழ்த்திக் கொண்டு இருக்கும் பெலிக்ஸ் பத்திரமாக இறங்குவது உறுதியாகி விட்டது

 பாரா சூட்  இல்லாமல் விழும் போது ஒலியின் வேகத்தை மிஞ்சி விட்டார். ஒலியின் வேகம் 690 மைல்கள் (1,110 கி மீ) இவருடைய அதிக பட்ச வேகம் 833  மைல்கள் (1342.8  கி மீ)

இந்த சாதனை நிகழ்விற்காக ஐந்து ஆண்டுகள் பயிற்சி செய்து உள்ளார்.
மார்ச் மாதம் 71,581 feet     அடியில் இருந்தும் ஜூலை 25 , 97,146 feet அடியில் இருந்தும் ஏற்கனவே குதித்துள்ளார். இனிமேல் இந்த உயிரைப் பணயம் வைக்கும் குதிப்பில் ஈடுபட மாட்டார் ஆபத்தில் இருந்து மீட்புப் பணிகளில் ஈடுபடும் ஹெலிகாப்ட்டர் ஓட்டுவதோடு நிறுத்திக் கொள்ள இருக்கிறார்.

இவருடைய இந்த சாதனை நிகழ்வை உன்னிப்பாகக் கவனித்த நாசா விண்வெளி  ஐரோப்பிய   விண்வெளி நிறுவனங்கள் மற்றும் வீரர்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளார்கள். விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும் போது இத்தகைய செயல்கள் தேவைப் படலாம் என்று நினைக்கிறார்கள் அவர்கள்

இந்த சாதனை நிகழ்வு நடந்த அதே தினத்தில் 1947 ஆம் ஆண்டு   ஒலியை மிஞ்சிய முதல் விமானம் செலுத்தப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பெலிக்ஸ் 1,28,000  அடி உயரத்தில் இருக்கையில் கீழே பூமியின் கோள வடிவத்தின் மேற்பகுதியைப் பார்க்க முடிந்தது. பூமி உருண்டை என்பது விண்வெளிக்கு போனால் பார்க்கலாம் என்பது இதன் மூலம் நாமும் தெரிந்து கொள்ள முடிந்தது

பலூன் புறப்பட்ட இடத்தில இருந்து  37   மைல்கள் தள்ளி தரை இறங்கினார் இவர். பலூன்    55  மைல்கள் தள்ளி இறங்கியது

சாதனை வீரர் பெலிக்ஸ் சொல்வதென்ன. நான் இவ்வளவு உயரம் போன உடன் பூமியில் உள்ள அனிவரும் நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் நாம் பத்திரமாகத் தரை இறங்க வேண்டும் என்று நினைத்தாராம். இருக்காத பின்னே? கீழே திரும்பினால் தானே சாதனை.

மொத்தத்தில் நீண்ட நாள் நெஞ்சை விட்டு நீங்காத ஒரு நிகழ்வு இது!


  Get Your Online Business

 • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

  Brand Promotion

 • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com

Comments

 1. உண்மைதான்...படிக்கும்போதே நெஞ்சத்தில் ஒரு திடுக் தோன்றி மீள்கிறது...என்னுடைய பாரட்டுகள் கட்டுரையை எழுதியவருக்கும், குதித்தவருக்கும்

  ReplyDelete
 2. மனதை வியக்கவைக்கும் பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நண்பருக்கு வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 4. paarattiya anaivarukkum idhayam kalantha nanrigal

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்